எத்தனைக் காலம் ஏமாற்றுவார் இப்பூமியிலே

எத்தனைக் காலம் ஏமாற்றுவார் இப்பூமியிலே

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#எத்தனை_காலம்_தான்_ஏமாற்றுவார் #இப்பூமியிலே...*

*தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் என சவூதி கிராண்ட் முஃப்தி அப்துல் அஜீஸ் ஆலு ஷைக்..*

*தராவீஹ் இருபது ரக்அத்துகள் தொழாதவர்களை குறித்து நான் நரகத்தை பயப்படுகிறேன் என்று சவூதி கிராண்ட் முஃப்தி அப்துல் அஜிஸ் ஆலு-ஷைக்...*

*சவூதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தியும், அறிஞர்கள் பேரவை மற்றும் ஃபத்வா கவுன்சிலின் தலைவருமான அப்துல் அஜீஸ் ஆலு-ஷைக் அவர்களின் வார்த்தைகளை‌ இனி பரிசோதிப்போம்..*

*2006 செப்டம்பர்_ 27, அன்று 'அல்-மதீனா' நாளிதழுக்கு 'முஹம்மது ராஃபிஉ சுலைமான் என்பவருடன் நடத்திய நேர்காணலில் அவர் கூறியதைக் கவனியுங்கள்.*

*#كد سماحة الشيخ عبد العزيز بن عبد الله آل الشيخ المفتي العام للمملكة ورئيس هيئة كبار العلماء وإدارة البحوث العلمية والإفتاء:أنّ صلاة التراويح التي تصلَّى حاليا في الحرمين الشريفين ثلاث وعشرين ركعة صلاة صحيحة لهدي النبي صلى الله عليه وسلم.... ثم يا أخي الذين صلواة عشرين ركعة ليسوا بدعا من الأمر لهم سابق سلف صلوها عشرين والحنابلة يرونها عشرين وغيرهم وغيرهم،فلماذا نحتج إذا صلى الإمام عشرين....وقال سماحته أرى أنّ من انصرف عن الإمام ولم يصل معه العشرين أخشى عليه من قوله جل وعلى:(ومن يشاقق الرسول من بعدما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نولّه ما تولّى ونصله جهنم وسائت مصيرا).. ونحن نعلم أنّ السلف صلوها ثلاثا وعشرين.. ثم هذه سنة لا زال المسلمون يصلونها في حرم الله منذ القرون الأولى منذ عهد الخلفاء الراشدين إلى اليوم، فالمنكر والذي لا يصلي وراء الإمام هذا أخشى عليه أن يكون في قلبه غلّ على المسلمين وخروج عن جماعة المسلمين فالواجب أن نصلي ثلاثا وعشرين..
(جريدة المدينة:صفحة:18)(27-9-2006)*

இரு ஹரம்களிலும் நடத்தப்படுகிற 20 ரக்அத் தராவீஹ் தொழுகை ஏற்கத்தக்கதும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறையின்படி பொருத்தமானதுமாகும்.

ஓ சகோதரா!
இருபது ரக்அத்கள் தராவீஹ் தொழுபவர்கள் பித்அத் செய்பவர்கள் அல்ல. அதற்கு அவர்களிடம் முன்னோர்களின் வழிகாட்டுதல் ஆதாரமாக உள்ளது.

ஸலஃபு ஸாலிஹீன்கள் இருபது ரக்அத்துகள் தான் தொழுதிருந்தார்கள்..

ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தோரும், அல்லாத மத்ஹபினரும் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் தான் என்று அபிப்பிராயப்பட்டுள்ளனர்.

பிறகு எதற்கு இருபது ரக்அத்கள் தொழுபவர்களுக்கு எதிராக ஆதாரம் தேடி நடக்கிறீர்கள்...

தொடர்ந்து அவர் கூறுகிறார்: "எவர் இருபது ரக்அத்கள் தொழாமல் ஹரமின் இமாமிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ்வின் திருமறையில் கூறியதை நான் பயப்படுகிறேன்.

அதாவது, அல்லாஹ் கூறுகின்றான்..

وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ وَسَآءَتْ مَصِيْرًا‏

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
(அல்குர்ஆன் : 4:115)

ஆலு -ஷைக் மீண்டும் கூறுகிறார்..

நாங்கள் உறுதிப்படுத்திக் கூறுகிறோம்...

நிச்சயமாக ஸலஃப்களான மேன்மக்கள் வித்ருடன் சேர்த்து
தராவீஹ் 23 ரக்அத்கள் தான் தொழுதிருக்கிறார்கள், அதன் பின்னர் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றாம் நூற்றாண்டு முதல் அதாவது குலஃபாஉர் ராஷிதுகளுடைய காலம் முதல் இக்காலம்
வரைக்கும் உள்ள அல்லாஹ்வின் ஹரம்களில் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றது இருபது ரக்அத்துகளாகும்..

எனவே இதை எதிர்ப்பவனும், இருபது ரக்அத்கள் தொழும் இமாமைப் பின்பற்றாதவர்களும், முஸ்லிம்களோடு வெறுப்பு வைத்து நடப்பவனும் முஸ்லிம் சமூகத்திலிருந்து தெறித்து சென்று விடுவாரோ என்று நான் பயப்படுகிறேன்.

எனவே நமக்கு நிர்பந்தமாக உள்ளது இருபது ரக்அத்கள் தொழுவதாகும்.....

அல் மதீனா தினபத்திரிக்கை
பக்கம்_18
27_9_2006.

http://www.alriyadh.com/751520..

https://www.facebook.com/100015706745632/posts/1255934044940142/..

*தகவல் பகிர்வு:M.சிராஜுத்தீன்அஹ்ஸனி..*