வரலாற்றில் விலை மதிக்க முடியாத ஒரு ஒட்டகம்
#விலைமதிக்க_முடியாத_வரலாற்றிலே #ஒரு_ஒட்டகம்
*************************************************
🐪பெயர்: அல்-கஸ்வா....
🐪 பிறந்த இடம்:
அரேபிய தீபகற்பத்தில் உள்ள பனு குஷைர் பழங்குடியினர் பகுதியில்...
🐪தொழில்:
நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம்.
🐪 விலை: 400
திர்ஹம்கள்...
அபூபக்கர் அல்-சித்தீக்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாங்கினார்கள்.
🐪நிறம்:
வெள்ளை மற்றும் கருப்புக்கு இடையே சிவப்பு....
🐪 புனைப்பெயர்கள்: அல்-ஜத்ஆ, அல்-கள்பா, அல்-அஸபா.
🐪 பெயரின் பொருள் அல்-கஸ்வா:
(பிளவுபட்ட காது)
ஒட்டகத்தினுடைய அதிக வேகத்தின் காரணமாக அவ்வாறு அழைக்கப்பட்டது, ஆனால் அதன் காது பிளவுபடவில்லை.
🐪 வயது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு வயதில் அதை வாங்கி, அவர்களுடன் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்து, 15 வயதில் மரணமடைந்தது..
🐪வசிக்கும் இடம்: நபியவர்களின் பள்ளிவாசலுக்கு கிழக்கே ஜன்னத்துல் பக்கீனைச் சுற்றியுள்ள பகுதி.
🐪உணவு: ஜன்னத்துல் பக்கீயிலுள்ள கீரைகள், இழை, தளைகள் சாப்பிடும்...
🐪மரணம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பிறகு,
நாயகத்தின் மரணத்தை தொடர்ந்து அல்-கஸ்வா மிகவும் வருத்தமடைந்தது.. உணவு, பானங்களை உண்ண மறுத்தது.. அதனால் பார்வை பறிபோனது.
அபூபக்கர் அல்-சித்திக் அவர்கள் கலீஃபாவாக இருந்த ஆரம்ப நாட்களில் இறந்தது....
🐪அல் கஸ்வைனின் நன்மைகள்:
**********************"*************************
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதீனாவுக்குப் பயணம் சென்றது..
பனூ நஜ்ஜார் அருகில் உள்ள நபிகள் நாயகத்தின் பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் மண்டியிட்டது...
அதன் மீது அமர்ந்து இருக்கும் வேளையில் வஹ்ய் வந்தது...
நபி (ஸல்) அவர்கள் அதன் மீது ஏறி அமர்ந்து கஅபாவைத் தவஃப் செய்தது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் நல்ல சுபாவத்தை பாராட்டினார்கள்.
ஒட்டகப் பந்தயத்தில் எப்போதும் முன்னே நிற்கும்..
ஒரு பந்தயத்தில் அது பின்னுக்குத் தள்ளப்பட்ட போது முஸ்லிம்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.
அந்நேரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு صاحب الناقة القصواء என்ற ஒரு பெயர் வந்தது...
அந்த ஒட்டகத்திற்கு பின்னால் நபியவர்கள் தலைசிறந்த தோழர்களை ஏற்றிக்கொண்டு பயணம் செய்தார்கள்.
அல் கஸ்வா நிகழ்த்திய பணிகள்..
****************************
ஐந்து முக்கிய நிகழ்வுகள்:
1- பத்ர் போரில் பங்கேற்றது..
2- மக்கா வெற்றியில் பங்கேற்றது..
3- ஹுதைபியா உடன்படிக்கை நாளில் அதன் மீது அமர்ந்து நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்குப் பயணம் செய்தது...
4- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்ரா செய்வதற்காக அதன் மீது அமர்ந்து கொண்டு மக்காவிற்குச் சென்றது...
5- விடைபெறும் ஹஜ்ஜிற்காக நபி (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்து கொண்டு மக்காவிற்கு பயணம் செய்தார்கள்.
Abu Tahir Faizi Mananthavadi.....
தமிழில்:
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி...
7598769505