ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 19
#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_19....
#நோன்பாளிகள் #யாருடன்_இருப்பார்கள்....?
அம்ர் இப்னு முர்ரா அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதர் நபி {ஸல்} அவர்களின் சபைக்கு வருகை தந்தார். வந்தவர் “அல்லாஹ்வின் தூதரே! நான், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்றும் நான் சாட்சியம் சொல்கின்றேன்; மேலும், ஐந்து நேரம் தொழுகின்றேன்; ஜகாத்தையும் கொடுக்கின்றேன்; ரமலான் நோன்பையும் நோற்கின்றேன் எனில் நான் யாரைச் சார்ந்தவன்” எனக் கேட்டார்.
அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “நீர் இதே நிலையில் வாழ்ந்து மரணித்து விடுவீர் எனில் ஸித்தீக்கீன்கள் – வாய்மையாளர்கள், மற்றும் ஷுஹதாக்கள் – உயிர்த்தியாகிகள், நபிமார்கள் ஆகியோருடன் நாளை மறுமை நாளில் தங்கள் விரல்களை இணைத்துக் காட்டி இவ்வாறு இருப்பீர்” என்று பதில் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال : يا رسول الله ، شهدت أن لا إله إلا الله ، وأنك رسول الله ، وصليت الخمس ، وأديت زكاة مالي ، وصمت شهر رمضان ، فقال رسول الله صلى الله عليه وسلم : " من مات على هذا كان مع النبيين والصديقين والشهداء يوم القيامة هكذا - ونصب أصبعيه -