அவன் ஆயுதங்கள் அழிந்து விட்டதாம் கதறுகிறான்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
உன் கண்டுபிடிப்புகள் அழிந்து விட்டது.
என்று கதறுகிறாய்
ஆனால் பாலஸ்தீன மக்களுக்கு நீ செய்த
அநியாயத்தை,
அக்கிரமத்தை,
அராஜகத்தை,
அநீதியை,
தான்தோன்றி தனத்தை
கொஞ்சம் நினைத்துப் பார்.
அவர்கள் வாழ்விடத்தை அழித்து
கட்டிடங்களை தரைமட்டமாக்கி
வீடுகளை இடித்து
பொருளாதாரத்தை சிதைத்து
மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி
எத்துணை இன்னல்கள் கொடுத்தாய்
தொடுத்தாய்,
கணவரை இழந்த விதவைகள்
பெற்றோரை இழந்த குழந்தைகள்
பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்
சொந்த பந்தங்களை இழந்த உறவுகள்..
இன்று ஒரு வேளை உணவுக்கு அவர்கள்
படும் பாடு..
யா அல்லாஹ் சொல்லிமாளாது அவர்கள் துயரம்..
நிச்சயமாக அநீதி இழைக்கப்பட்ட அவர்களின் பிரார்த்தனை உங்களை
சும்மா விடாது.
பிஞ்சு குழந்தைகளின் கதறல்கள் உங்கள் தூக்கத்தை, நிம்மதியை
கெடுக்கும்...