ரமளான் வினா விடை பாகம் 29

ரமளான் வினா விடை பாகம் 29

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_29

🌻ஸகாத்துல் ஃபித்ர்🌻

🎗ஷாஃபிஈ மத்ஹப் சட்டம்🎗

🔸 ரமலான் மாதம் கடைசி நோன்பு திறப்பதுடன் கடமையான ஒரு தர்மம் தான் ஸகாத்துல் பித்று."ஸகாத்துல் பதன்" (உடலுக்கான தர்மம்) என்ற பெயரும் இதற்கு உண்டு.

139 : யாருக்கு கடமை❓

🔸 முஸ்லிமான சுதந்திரமான ஒருவரிடத்தில் தனக்கும் தன் குடும்பத்தார்களுக்கும் (மனைவி,மக்கள்,பெற்றோர்) உணவு,உடை,தேவையான வீடு ஆகியவற்றின் செலவிற்கு போக எஞ்சிய பணமிருந்தால் அவர் மீது தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் ஸகாத்துல் பித்று கொடுப்பது கடமையாகும்.

🔸கடனிருந்தால்,கடனை நிறைவேற்றத் தேவையான பணம் போக மீதி பணமிருந்தால் கடமையாகும்.

🔸 திருமணமாகாத சம்பாதிக்கும் இளைஞர்கள் தன் சம்பாத்தியத்திலிருந்து கொடுக்க வேண்டும்.

140 : யாருக்கு கொடுக்க வேண்டும் ❓.
🔸குர்ஆனில் கூறப்பட்ட எட்டு வகை நபர்களுக்கு கொடுக்க வேண்டும்.எட்டு வகையில் நமது நாட்டில் தற்போது காணப்படுபவர்கள் ஐந்து மட்டுமே.

1️⃣.ஃபக்கீர்.
ஃபக்கீர்(பரம ஏழை). வாழ்வாதாரத்திற்கு ஒரு நாள் ₹100 தேவை என்றால் ₹20,₹30 மட்டுமே வருமானம் பெறுபவர்கள்.

2️⃣.மிஸ்கீன்.
மிஸ்கீன்.(ஏழை). வாழ்வாதாரத்திற்கு ஒரு நாள் ₹100 தேவையனில் ₹70,₹80 மட்டுமே வருமானம் பெறுபவர்கள்.

3️⃣. கடனாளிகள்.
ஹலாலான தேவைகளுக்காக கடன் வாங்கியவர்கள்.

4️⃣.புதிய முஸ்லிம்கள்.
புதிதாக இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், இஸ்லாம் மார்க்கத்தோடு கூடுதல் இணக்கம் ஏற்படுவதற்காக அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

5️⃣. வழிப்போக்கன்.
‌பிற ஊர்களிலிருந்து நம் ஊர் வழியாகவோ (அ) நம் ஊரிலிருந்து பயணம் செய்பவர்கள்.

👆 மேற்கண்ட ஐந்து நபர்களுக்கு கொடுக்க வேண்டும்.

🔸தனது ஊரில் உள்ள ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். தன்னுடைய ஊரில் ஏழைகள் இல்லாத பட்சத்தில் பிற ஊர்களுக்கு கொடுக்கலாம்.

141 : எதை கொடுக்க வேண்டும் ❓.
🔸ஸகாத் கொடுப்பவனின் ஊரில் எந்த உணவு வழமையாக பயன்படுத்துகிறார்களோ அந்த தானியம் கொடுக்க வேண்டும்.

142 : எவ்வளவு கொடுக்க வேண்டும் ❓.
🔸 ஒரு நபருக்கு ஒரு ஸாஉ(صاع) கொடுக்க வேண்டும்.
▶️ஒரு ஸாஉ என்பது நான்கு முத்து( مد)கள்‌.
▶️ஒரு முத்து( مد ) 800m l.
நான்கு முத்து(مد) 3.200ml.
▶️ஒரு ஸாஉ( صاع) = 4 முத்து (مد) = 3.200ml.
🔸ஒரு صاع(ஸாஉ) என்பது 3.200 லிட்டர் அளவாகும்.3.200 லிட்டர் கிலோ கிராம் அல்ல.
🔸நமது நாட்டில் பல அரிசிகள் பயன்படுத்தப்படுவதால் 3.200 உள்ள பாத்திரத்தில் நிறுத்தும் போது கிலோ கிராம் அளவுகளில் மாறுபடுகிறது.
🔵உதாரணம்:
🔹3.200 ml செங்கல்பட்டு அரிசி=2.778 kg.
🔹3.200 ml பொன்னி அரிசி=2.823 kg.
🔹3.200 ml டொப்பி அரிசி= 2.804 kg.

எனவே பேணிக்கையின் அடிபடையில் ஒரு நபருக்கு 3 கிலோ
கொடுப்பது ஏற்றமாகும்.

143 : எவ்வாறு கொடுப்பது❓
🔸 மூன்று வழிகளில் நிறைவேற்றலாம்.
1️⃣. நேரடியாக சென்று கொடுப்பது.
2️⃣.ஒரு வக்கீலிடம் (பொறுப்பாளி)ஒப்படைப்பது.
3️⃣. அரசரிடம் கொடுப்பது.
மூன்றாவது முறையில் நிறைவேற்ற வேண்டுமெனில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடாக இருக்க வேண்டும்.

🔸 நேரடியாக கொடுப்பதே மிகவும் சிறந்ததாகும்.

🟠ஸகாத்தை நிறைவேற்றும்போதோ (அ) தனியாக மாற்றிவைக்கும்போதோ "இது என்னுடைய பித்று ஸகாத்" என்றோ,
வக்கீலை ஒப்படைக்கும்போது "இந்த பித்று ஸகாத்தை நிறைவேற்ற உன்னை வக்கீல் ஆக்குகிறேன்" என்றோ நிய்யத் செய்ய வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு,
M.A.அப்துல்லாஹ் அன்வரி
தொடர்புக்கு +919894710696

*****************************

இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....