ரமளான் வினா விடை பாகம் 28
புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_28
132 : ஃபித்ர்’ ஸகாத் என்றால் என்ன..?
ஃபித்ர் ஸகாத் என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.
133 : ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுக்கப்படுவதன் நோக்கம் என்ன.?
பதில் :
நபி ﷺ அவர்கள் கூறியதாவது :
“நோன்பாளியிடம் ஏற்பட்ட வீணான காரியங்கள் மற்றும் பேச்சுகளுக்கு பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நோன்புப் பெருநாள் தர்மத்தை (ஸகாதுல் ஃபித்ர்) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கடமையாக்கினார்கள்.”
(நூல் : அபூதாவூத் 1609)
134.ஸகாத்துல் ஃபித்ர் கொடுப்பதன் மார்க்க சட்டம் என்ன?
பதில் : கட்டாயக் கடமையாகும் (ஃபர்ழ்).
இப்னு உமர் (ரலியல்லாஹு ‘அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
“… ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மக்களுக்கு கடமையாக்கினார்கள்.
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1791)
135 :ஸகாத்துல் ஃபித்ர் எப்போது கடமையாக்கப்பட்டது?
பதில் : ஹிஜ்ரத்திற்கு பிறகு இரண்டாம் ஆண்டு ரமழானின் போது (பெருநாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு கடமையாக்கப்பட்டது.
136. யார் மீது ஸகாத்துல் ஃபித்ர் கடமை?
பதில் :
“முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள், பெண்கள் , வயதானவர்கள், சிறுவர்கள் ஆகிய அனைவர் மீதும் இது கடமையாகும்.”
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1791, 1792)
137. எவ்வளவு செல்வம் இருந்தால் என்மீது ஸகாத்துல் ஃபித்ர் கடமையாகும்?
பதில் : உங்கள் மீதும், உங்களை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கும் தேவையான பெருநாளுடைய உணவுப்பொருள் போக, அதற்கு மேல் மிச்சமான உணவுப்பொருளை நீங்கள் கொண்டிருந்தால் ஸகாத்துல் ஃபித்ர் கடமையாகிவிடும்.
138. நான் எனக்காக மாத்திரம் ஸகாத்துல் ஃபித்ர் கொடுத்தால் போதுமா.?
பதில் : உங்களுக்கும், உங்களின் பொறுப்பிலுள்ள மனைவிமார்கள், பிள்ளைகள், அடிமைகள் ஆகிய அனைவருக்கும் சேர்த்து நீங்கள் கொடுக்க வேண்டும்.
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....