நோயும் மருந்தும்
நோயும், மருந்தும்
V. மூஸா மவ்லவி
நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அபூஹூறைறா
(ரலி) அறிவிக்கிறார்கள். "மருந்தில்லாத எந்த ஒரு நோயையும் அல்லாஹ் இறக்குவதில்லை”
(புகாரி)
ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) கூறினார்கள் அனைத்து நோய்களுக்கும் மருந்து உண்டு. ஆரோக்கியத்திற்கான மருந்தை கண்டறிந்தால் இறைவனின் கருணையால் நிவாரணம் கிடைக்கிறது”. (முஸ்லிம்)
நபி (ஸல்) ஒரு நாள் காயமுற்ற ஒரு ஸஹாபியை பார்க்க செல்கிறார்கள். அப்போது நாயகம் ஸஹாபியின் உறவினர்களோடு ஒரு வைத்தியரை அழைத்து வர கூறினார்கள்.
அவர் சென்று நபி (ஸல்) அவர்களோடு கேட்டார். மருந்தினால் நோய்
குணமாகி விடுமா?
நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள். "சுபுஹானல்லாஹ்
இந்த பூமியில் மருந்தின்றி எந்த நோயையும் அல்லாஹ் இறக்கி இருக்கானா?"
(அஹ்மத்)
உஸாமத்துப்னு ஷரீக் சொல்கிறார்:
சில கிராமத்து அரபிகள் நபி (ஸல்) அவர்களோடு கேட்டார்கள். எங்களுக்கு நோய் வந்தால் வைத்தியம் பார்க்க வேண்டுமா?
நபி (ஸல்) சொன்னார்கள்.
ஆம் அல்லாஹுவுடைய அடிமைகளே!
நீங்கள் சிகிட்சை செய்ய வேண்டும்.
நிச்சயமாக அல்லாஹு மரணத்தையும், வயோதிகத்தையும் தவிர அனைத்து நோய்களுக்கும் மருந்து இறக்கி உள்ளான். (திர்மதி)
மனித வாழ்க்கை :
முழுமையாக இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுபட்டு வாழ்வதற்கு "இஸ்லாம்" என்று சொல்லப்படுகிறது. ஆன்மாவும், ஜடவும் சேர்ந்ததல்லவா மனிதன்.
ஆன்மாவிற்கு ஆன்மீகத்தையும், ஜடத்திற்கு உலகீயதயும் என்பது இஸ்லாத்தினுடைய பார்வையல்ல.
அது ஷைத்தானிற்கும், கடவுளுக்கும் இருக்கின்ற வேர்பாடுகளை அனுமதிப்பதில்லை.
நேராக வாழ்க்கையை பூரணமாக இறைவனுக்கு மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் தான் வாழ்க்கையினுடைய
அனைத்து திசைகளிலும் வெளிப்படையான சட்ட திட்டங்கள் உள்ளது.
இந்த துவக்க உரையோட தான் நாம் எல்லா சட்டங்களையும் பார்க்க வேண்டி இருக்கிறது.
ஆரோக்கியத்தை போன்றே நோயும் இயற்கை சகஜமான ஒரு அத்தாட்சி தான்.
ஒரு நம்பிக்கையாளரை பொறுத்தமட்டில் இவை இரண்டும் ஒரு சோதனை கட்டங்களாகும். ஆரோக்கியவும்,
சக்தியும் கர்வம் காட்ட வேண்டிய விஷயம் அல்லாதது போன்று நோயும், சோர்வும் கவலை கொள்ள வேண்டிய விஷயம் அல்ல. ஒருமுறை நபி (ஸல்) கூறினார்கள். "நம்பிக்கையாளனின் காரியம் என்ன ஒரு அதிசயம் அவனுடைய அனைத்து விஷயங்களும் அவனுக்கு நன்மையாக முடிகிறது. இனி அவனுக்கு கஷ்டமான ஆபத்து ஏற்பட்டு விட்டால் அவன் அதை பொறுத்து கொள்கிறான்.
அப்போது அதும் அவனுக்கு நன்மையாக முடிகிறது”. (முஸ்லிம்)
அறிவியல் மற்றும் நவீன கல்வி துறைகளில் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்த ஒரு கால கட்டவும் மனித வரலாற்றில் இதற்கு முன்னே கடந்து போனதில்லை. நாகரீகவும், கலாச்சாரம் துவங்கிய காரணங்களால் ஆரோக்கிய பிரச்சினை இன்றைக்கு சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது.
புதுபுது சர்ச்சைகளும்,
கல்வியும், ஆராய்ச்சியும்
"எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது.
எல்லா நிலையிலும் இந்த காலகட்டத்தின் மிக தீவிரமான ஒரு விடயம்தான் மருத்துவவியல்,
நிகழ் காலத்தில் இந்த துறையில் உண்டான அதிசயகரமான உயர்வும். முன்னேற்றவும் வாழ்த்தப்பட வேண்டியதாகும். ஆனால் மருத்துவவியல் முன்னேற்ற பாதையில் செல்லும் போது நோய்களும அதிகரிக்கிறது.
எய்ட்ஸ், கேன்சர், நீரிழிவு,
கிட்னி நோய்கள், இதய நோய் முதலியவைகளுக்கு இன்னும் குணம் செய்கின்ற பரிகாரங்கள் கண்டுபிடிக்கவில்லை.
சூப்பர் Speciality மருத்துவமனைகள்.
ஊர்கள் முழுவதும் வளர்ந்து வருகிறது.
இதனுடைய எதிர்பலன்தான் ஜலதோசம் போன்ற சிறு விஷயங்களுக்கும் உயர்ந்த சிறப்பு மருத்துவரை அணுகுவது.
சிறப்பு வாய்ந்த அனைத்துவிதமான பரிசோதனைகளுக்கும் இன்று வழி இருக்கிறது.
இருந்தும் சாதாரணமான பல நோய்களின் முன்னே நாம் தோல்வியால் தலைகுனிந்து நிற்கிறோம். கேன்சரும், மூளை அடைப்பு எல்லாம் இரண்டாம் கட்டத்தில் அடி எடுத்து வைத்தால் மருத்துவர்கள் கையை விரிக்கிறார்கள். ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற சிகிட்சை முறைகளை ஒப்பு கொள்ளாதவர்கள் தான் ஆங்கில மருத்துவர்கள்.
ஆனால் சில வேளைகளில் இந்த மருத்துவர்கள் கூட ஆயூர்வேதமோ, பாரம்பரிய வைத்திய சிகிட்சையோ செய்கிறார்கள்.
அனைத்து நோய்களுக்கும் மருந்துண்டு.
அப்படியென்றால் மருந்தில்லாத ஒரு நோயும் இல்லை.
மருந்தை கண்டு பிடித்து சரியான விதத்தில் உபயோகிக்கவும் செய்தால் இறைவனின் அருளால் குணம்பெறும்.
இந்த கருத்தை வித்தியாசமான ரீதியில் நபிகளார் சொன்னதாக பார்க்கலாம்.
அனைத்து நோய்களுக்கும் மருந்துண்டு என புரிந்து கொள்ளும் நோயாளிகளுக்கு அது மன அமைதியை கொண்டிருக்கிறது.
நோய் எப்படி கூடினாலும் பறவாயில்லை.
விரக்தி கொள்ளாமல் சரியான சிகிட்சை கிடைக்க முயற்சிக்க வேண்டும்.
மருத்துவர்களுக்கும்,
மருத்துவ துறையில் செயலாற்றுபவர்களுக்கும், புதிய ஆய்வுகளுக்கும், படிப்பிற்கும்,
புதிய கண்டு பிடிப்புகளுக்கும், அறிவிற்கும் ஹதீஸுகள் காரணமாகிறது.
நோயாளிக்கும், மருத்துவர்களுக்கும் அவர்களுடைய மனங்களில் எதிர்பார்ப்பின் ஒரு நிலை திரும்புகிறது.
பிறந்த எல்லா உயிரினங்களும், மரணத்தை சந்திக்கும் குழந்தை பருவவும். இளமையும் கழிந்து விட்டால் முதுமை கட்டாயமாகும். அந்நேரத்தில் கஷ்டங்களும், துன்பங்களும்
சந்திக்க நேரிடும்.
கண், காது, நாக்கு,
கை கால்கள் போன்ற உறுப்புகளுக்கு தளர்ச்சி ஏற்படும் நிலை உருவாகும்.
அந்நேரம் தான் கிடந்து உறங்கிய கட்டிலும், மெத்தையும், அறையும் மட்டுமல்ல. அந்த வீடும், தான் சம்பாதித்த அனைத்தையும் புதிய தலைமுறைக்கு கொடுக்க நேரிடும். அவர்கள் அதற்காக காத்திருக்கிறார்கள்.
நம்முடைய வாழ்வின் முறைகளை பார்த்தால் இதை பற்றி ஒன்றும் யாரும் சிந்திப்பதில்லை.
தமிழில்
M.ஜலாலுத்தீன் ஸுயூத்தி