ரமளான் வினா விடை பாகம்.. 19
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_19
86. எவ்வாறான பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்க முடியும்?
பதில்: ஜமாஅத் தொழுகை நடைபெறும் அனைத்துப்
பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்.
அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் பள்ளிவாசல்கள்
எனப் பொதுப்படையாகவே கூறியுள்ளான்.
இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹில் “அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம்” எனத் தலைப்பிட்ட பின்பு மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் (2:187) வசனத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள்.
87. இஃதிகாஃபின் குறைந்த காலம் எவ்வளவு?
பதில்: இஃதிகாஃபின் குறைந்த காலம் ஒரு நிமிடமோ, ஒரு
மணி நேரமோ, ஒரு நாளோ (24 மணி நேரமோ) இருக்கலாம்.
88. இஃதிகாஃப் இருப்பவர் மலம்ஜல தேவைகளுக்காகப்
பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?
பதில்: மலம்ஜல தேவைகளுக்காக இஃதிகாஃப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாம் என்பது குறித்து இப்னுல் முன்திர், இப்னு குதாமா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
89. ஏனைய தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?
பதில்: பள்ளிவாசலில் நிறைவேற்ற முடியாத அவசியத் தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு இஃதிகாஃப் இருப்பவர் வெளியேறிச் செல்லலாம். மேலும், அல்லாஹ் கட்டாயப்படுத்திய காரியங்களைச் செய்வதற்கும் வெளியேறிச் செல்லலாம். அது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.
90. இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில்
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃபின் நிலை என்ன?
பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில்
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃப் முறிந்து விடும்.
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....