ரமளான் வினா விடை பாகம்.. 20
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_20
91 : ரமளான் கடைசிப் பத்து நாட்கள் வந்தால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன செய்வார்கள்...?
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!’
92 : லைலத்துல் கத்ரை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது தேடச் சொன்னார்கள்...
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) கூறினார்கள்:
ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்...
93 : ஆயிரம் மாதங்களுக்கு நிகரான நாள் எது?
லைலதுல் கத்ர் என்ற ஒற்றை இரவுக்கு ஆயிரம் மாதங்களுக்கு நிகரான சிறப்பு உள்ளது...
94 : கடைசிப் பத்தில் என்ன ஓத வேண்டும்..?
اللهم اعتقنا من النار وأدخلنا الجنة يا رب العالمين.
என்ற துஆவை ஓத வேண்டும்..
95 : லைலத்துல் கத்ர் இரவு எப்பொழுது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டபோது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறினார்கள்...?
லைலத்துல் கத்ர் இரவு எப்பொழுது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டபோது முதலில் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது என்றும் , பின்னர் அது ரமலானில் உள்ளது என்றும் , பின்னர் அது கடைசி பத்து நாள்களில் உள்ளது என்றும் ,பின்னர் ஒற்றை படை இரவில் என்றும் பல செய்திகள் உள்ளது.
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....