100_குமர_குமரிகளின் சமூக திருமணம்......தமிழக ஆலிமின்பெரும் முயற்சிக்கு துணை நிற்கவும்.
100_குமர_குமரிகளின் சமூக திருமணம்......
தமிழக ஆலிமின்
பெரும் முயற்சிக்கு
துணை நிற்கவும்.
இணையற்ற மாபெரும் சமூக சேவைதான் நீலகிரி மாவட்டத்திலுள்ள பாடந்தரா மர்கஸில் நடைபெறும் சமூக திருமணம்.
பலவிதமான சிக்கலுகளும், நெருக்கடிகளும் காரணமாக திருமண வாழ்க்கையின் கனவை நிறைவேற்ற முடியாத பல தம்பதிகளுக்கு இந்த முயற்சி (சமூக திருமணம்) உதவுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது..
பொருளாதாரத்தில் பின்தங்கிய மலை கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு,
பல மகிழ்ச்சியான தருணங்கள் இன்னும் கனவுகளாகவே உள்ளன. அவர்களுடைய வாழ்வின் எதார்த்தத்தை நேரடியாகக் கண்டும், அறிந்தும் அனுபவங்களிலிருந்து புரிந்து கொண்டு தான் நீலகிரி மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் இளைஞர் சங்கமும்,
பாடந்தரா மர்கஸும் இளம் பெண்களின் திருமணக் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..
தேவர்சோலை அப்துஸ்ஸலாம் முஸ்லியாரின் தலைமையில் 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமூகத் திருமணங்கள் மூலம் 2000 மணமக்கள் தங்கள் கனவுகளை மெய்ப்பித்து வாழ்ந்து வருகின்றனர்..
திருமணம் என்பது பல மாற்றங்களுக்கு காரணமாகிற நல்லதொரு முகூர்த்தமாகும்.
பலவிதமான ஆதிகளுக்கும்
வேதனை களுக்கும் மாற்று மருந்து.
குடும்பம் என்ற சமூக அமைப்பின் தொடக்கமும் கூட.
தனிப்பட்ட மற்றும் சமூக ரீதியாக மிகவும் மகிழ்ச்சியான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த புனிதமான சடங்கை ஆதரிப்பது மிகவும் பிரதானமானது மற்றும் மிகவும் பலனளிக்கும் காரியமாகும்..
அன்றாடச் செலவுக்குக் கூட சிரமப்படும் வாழ்க்கைச் சூழலைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 100 மணமக்கள்,
அடுத்த வருடம் (2026)
ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை படந்தரா மர்கஸில் உள்ள திருமணப் பந்தலில் ஒன்று கூடுகிறார்கள்.
அவர்களின் புதிய வாழ்க்கைக்கு வழியாகவும்
வெளிச்சமாகவும் இருக்க நமது அக்கறையும், கருணையும் அவசியம்.
ஒரு முழு பிரதேசத்தின் இந்த மாபெரும் சங்கமத்திற்கு நாமும் நமது பங்களிப்பை வழங்க வேண்டும்.
எல்லா வகையிலும் நாம் பலரின் மகிழ்ச்சி மற்றும் நிறைவின் தருணங்களில் ஒரு பகுதியாக இருக்க முடியும்.
வல்லோன் அல்லாஹ் இந்த மகத்தான காரியத்தை வெற்றியாக்கித் தருவானாக
ஆமீன் யா றப்பல் ஆலமீன்...
தகவல்:
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி...