சேலத்தில் நடைபெற்ற முஅல்லிம்களுக்கான பயிற்சி வகுப்பு
ISLAMIC EDUCATION BOARD OF INDIA_வுக்கு கீழ் செயல்படும்
ஸுன்னி ஜம்யத்துல் முஅல்லிமீன்(S.J.M)
சென்ட்ரல் கவுன்சில் சார்பில் தமிழக மதரசா முஅல்லிம்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் சேலம் மாவட்டம் முஹம்மது புறாவில் செயல்பட்டு வருகிற தாறுல் இஸ்லாம் மதரசாவில் வைத்து இரு தினங்களாக நேற்றும், இன்றும் நடைப்பெற்றது..
கண்ணியமிகு கரீம் ஹாஜி
உஸ்தாத் அவர்கள் முஅல்லிம்களுக்கு
வகுப்பு எடுத்தார்கள்..
நீலகிரி, திருப்பூர், சேலம், கோவை,
குமரி மாவட்டம்
போன்ற இடங்களிலிருந்து
உலமாக்கள் வகுப்புக்கு
வருகைப் புரிந்தனர்.
பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட எல்லா முஅல்லிம்களுக்கும் கிதாபுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
இந்த வகுப்பு நடத்துவதற்கு இடமளித்தும்
அதுபோலவே எல்லா வசதிகளையும் சிறப்பாக செய்து தந்த சேலம்
முஹம்மது புறா தாறுல் இஸ்லாம்
மதரசா
நிர்வாகத்தினருக்கும், உஸ்தாதுமார்களுக்கும், கித்மத்கள் செய்த மாணவச் செல்வங்களுக்கும் வல்லோன் அல்லாஹ் எல்லாவித நலவுகளையும், அருட்கொடைகளையும் வாரி வழங்கி அருள் புரிவானாக..
வல்ல றஹ்மான் நமது எண்ணங்களை கபூல் செய்தருள்வானாக..
ஆமீன் யா றப்பல் ஆலமீன்
தகவல்:ـ M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி