மாநபியின் 1500_வது மீலாத் விழாவும் மாநபி சிறப்பை விவரிக்கும் 12_ நூல்களும்
மாநபியின் 1500_மீலாத்_விழாவும்
மாநபி சிறப்பை விவரிக்கும்
12 நூல்களும்...
அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
1500_ வது மீலாத் விழாவை உலக முஸ்லிம்கள் மிகவும் உற்சாகமாக
கொண்டாடி வருகின்றனர்.
இந்த சங்கையான மாநபியின்
1500_மீலாத் வருடத்தில்
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின்
#SSF சார்பில்
மாநபியின் புகழையும் பெருமையையும் மேன்மையையும் மக்களுக்கு
எத்தி வைக்கும் நோக்கில்
வெவ்வேறு தலைப்புகளில்
12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சி செய்து அல்லாஹ் மாபெரும் கிருபையால் 11_ நூல்கள் வெளியிட்டு மக்கள் கரங்களுக்கு எத்தி வைத்துள்ளோம்..
அல்ஹம்துலில்லாஹ் ..
மாநபியின் 1500_வது மீலாதை முன்னிட்டு வெளியிட்ட புத்தகங்கள்...👇👇👇
1: உத்தம உம்மத்
2 : முஸ்தஃபா முஜ்தபா
3 : முஹம்மத் அஹ்மத்
4 : நாயகத்தின் இரவு வாழ்க்கை
5 : கவ்ஸர்
6 : ஹலீமா பீவி கண்ட அதிசயங்கள்
7 : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹ்
8 : காஃப்
9 : தரஜத்துன் ரஃபீஆ
10 : முஹம்மது ரஸுலுல்லாஹ் வினா விடை
11 : மகாமுன் மஹ்மூத்...
மாநபி சிறந்த அழகிய முன்மாதிரி என்ற 12_வது நூலை வெளியிடுவது டன் நமது நோக்கம் முழுமையடைகிறது.
வல்லோன் அல்லாஹ் இதை நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்வானாக..
தக்க பிரதிபலனை நம் அனைவருக்கும் வழங்குவானாக
நூல்கள் வெளியிட மாநபி நேசர்களை அணுகிய வேளையில் அனைவரும் மனமுவந்து விளம்பரங்கள் நிதியுதவிகள் அளித்து எம் முயற்சிகளுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் உதவிகளும் வழங்கினர்.
வல்லோன் அல்லாஹ் அனைவருக்கும் எல்லா விதமான அபிவிருத்திகளும்,
நலவுகளுமா
செல்வ செழிப்பும் வழங்கி அருள்வானாக..
ஆமீன் யா றப்பல் ஆலமீன்..
பேரன்புடன்..
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF
கன்னியாகுமரி மாவட்டம்.
.
.
.
.
#Tmjkanyakumari
#Tmjtamilnadu
#ssfkanyakumari
#ssftamilnadu