மாநபி சிறப்பை விவரிக்கும் பத்தாவது நூல் வெளியீடு
வசந்த வருடங்கள் 1500

மாநபி சிறப்பை விவரிக்கும் பத்தாவது நூல் வெளியீடு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அஸ்ஸலாமு அலைக்கும்..

#மாநபி_சிறப்பை_விவரிக்கும் #பத்தாவது_நூல்_வெளியீடு.

அகிலத்தின் அருட்பெருங்கொடை
அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
1500_ வது மீலாத் விழாவை உலக முஸ்லிம்கள் உற்சாகமாக
கொண்டாடி வருகின்றனர்.

இந்த சங்கையான மாநபியின்
#1500_மீலாத் வருடத்தில்
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின்
(#SSF) சார்பில்
மாநபியின் புகழை மக்களுக்கு
எத்தி வைக்கும் நோக்கில்
வெவ்வேறு தலைப்புகளில்
12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

#மகாமுன் மஹ்மூத் எனும் தலைப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கும் தனித்துவமான சிறப்பை விவரிக்கும் புத்தகம் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இஷா தொழுகைக்குப்பின்
குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத்
மாணவர் அமைப்பின் அலுவலகத்தில் (திருவிதாங்கோடு) நடைபெற்ற
ஸலவாத் மஜ்லிஸில் வைத்து வெளியிடப்பட்டது..

துவக்கத்தில் நூல் மொழிபெயர்ப்பாளர் மெளலானா மெளலவி
#சிராஜுத்தீன்_அஹ்ஸனி அவர்கள் நூல் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார்கள்..

பின்னர் நூலின் #முதல் பிரதியை
சுவாமியார் மடம் ஷாஹுல் ஹமீதிய்யா பள்ளிவாசல் தலைமை இமாம்
மெளலானா மெளலவி
#நவ்ஃபல்_ஸகாஃபி ஹஸ்ரத்
அவர்கள்
அவர்கள்
வெளியிட சுன்னத் வல் ஜமாத்
மாணவர் அமைப்பு குமரி மாவட்ட செயலாளர்
தக்கலை மாலிக்
அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..

#இரண்டாவது பிரதியை குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் தலைவர் மெளலானா மெளலவி
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி
ஹஸ்ரத் அவர்கள்
வெளியிட குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு செயலாளர் தக்கலை #ஹாமீம் அவர்கள்
பெற்றுக் கொண்டார்கள்.

#மூன்றாவது பிரதியை குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் செயலாளர் மெளலானா மெளலவி
I.#அஹ்மத்_சுல்தான்_அன்வரி
ஹஸ்ரத்
அவர்கள் வெளியிட
SSF குமரி மாவட்ட பொருளாளர் முஹம்மது ஃபாஸில் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..

#நான்காம் பிரதியை குமரி மாவட்ட
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் செயலாளர்
#தக்கலை_ஹாமீம் அவர்கள் வெளியிட
#ஷமீர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..

இந்த மகத்தான ஸலவாத் மஜ்லிஸுக்கு ஆலிம்கள், SSF செயல் வீரர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மாநபியின் மஹப்பத்தை பெற்ற கூட்டத்தார்களில் நம்மை அனைவரும் ஆக்கியருள்வானாக...

இன்னும் மாநபியின்‌ சிறப்பைப் பறைசாற்றும் வகையில் ஏராளமான புத்தகங்களை வெளியிடும் நற்பாக்கியத்தை வழங்கியருள்வானாக..

நாம் அனைவருக்கும் மதீனா பூந்தோட்டத்தில் சென்று
வர இறைவன் பாக்கியம் வழங்கியருள்வானாக....

ஆமீன் யா றப்பல் ஆலமீன்

அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங்‌ ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்.

#ssfkanyakumari
#tmjkanyakumari
#ssftamilnadu
#ssfindia