பேராற்றல் மிக்கவனை நேசிப்போம்
ரமளான் சிந்தனைகள்
பிறை... 7
பேராற்றல்_மிக்கவனை
நேசிப்போம்.
தாவூத் அவர்களே...
பூமியில் உள்ள எனது அடியார்களுக்கு நீங்கள் சொல்லுங்கள்.
யார் என்னை நேசிப்பார்களோ
நான் அவர்களுடைய நேசன் ஆக இருக்கிறேன். யார் என்னோடு பேச விரும்புகிறார்களோ நான் அவர்களோடு பேசுகிறேன். யார் என்னுடைய நினைவில் மனமகிழ்ச்சியை காண்கிறார்களோ அவர்களுடைய மனதை நான் மகிழ்விப்பேன்.
யார் என்னோடு நட்பு வைக்க விரும்புகிறார்களோ நான் அவர்களுடைய நண்பனாக இருக்கின்றேன். யார் என்னை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்களோ நான் அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.
யார் எனக்கு கட்டுப்படுவார்களோ அவர்களுடைய கோரிக்கைகளை
நான் நிறைவேற்றுவேன்.
என்னுடைய அடியான் என்னை நேசிக்கிறான் என்று தெரிந்துவிட்டால், நான் அவனை எனக்காக ஏற்றுக் கொள்கிறேன்.நானும் அவனை நேசிக்கிறேன்.என்னுடைய நேசத்தை போன்று அவனுக்கு வேண்டப்பட்டவர்களில் யாரும் அவனை நேசிக்க முடியாது.
( நூல்: இத்திஹாஃபு ஸாதத்துல் முத்தகீன் )