Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரஜுலுன்_முஅல்லக்குன் ஃபில் மஸ்ஜித்.

இவர் ஃபக்ருத்தீன் சாஹிப்.
மார்த்தாண்டம் ஜமாஅத்தைச் சார்ந்தவர்.
மார்த்தாண்டம் ஜும்ஆ பள்ளிவாசலில் எப்போதும் தங்கியிருப்பார்.
பள்ளியையும், அவரையும் விட்டு பிரிக்கமுடியாத அளவுக்கு
பள்ளியோடு தன் இதயத்தை நெருக்கமாக்கிக் கொண்டவர்...

கழிந்த வாரம் மாலை வேளையில் மதரசாவுக்கு வந்த போது கப்ர் குழி தோண்டப்பட்ட நிலையில் மக்கள் கூட்டத்தை கவனிக்க முடிந்தது..
யார் மரணித்தார்கள் என்று விசாரித்தேன் ஃபக்ருத்தீன் சாஹிப் என பதில் கிடைத்தது.
அப்படியே நடுங்கி விட்டேன்..
ஏன், எப்படி, என்னாச்சு என விசாரித்த போது சில பதில்கள் கிடைத்தன.
இருந்தாலும் மனம் அவரது நினைவாகவே இருக்கிறது...
பள்ளியில் எப்போதும் பார்க்கும் முகம்.
அவர் தொழும் இடம், தூங்கும் இடத்தை பார்க்கும் போது மேலும் அவரது நினைவுகள் வந்து போகிறது.
சில நேரங்களில் நாம் பேசாமல் போனாலும் அவராகவே தானாக முன்வந்து பேசுவார்.

அவர் அந்த பள்ளிவாசலின் ஒரு முகவரியாக இருந்தார்.
எல்லா வக்திலும் அவரே அங்கே பார்க்க இயலும்..

உள் பள்ளிவாசலினுடைய வலது பாகம் ஒரு மூலையில் ஒரு நாற்காலியில் முன் வரிசையில் அமர்ந்து ஜமாஅத்துடன் அனைத்து தொழுகையும் நிறைவேற்றுவார்..
ஒரு நாள் கூட ஜமாஅத் தொழுகையை தவற விட்டது கிடையாது...

ஹதீஸ் நூற்கள்,
வரலாற்று நூல்கள் படிப்பது,
பத்திரிகைகள் வாசிப்பது,
ஆர்வமாக பயான்கள் செவியேற்பது
சந்தேகங்களுக்கு விடை கிடைக்க பலரிடம் அதுகுறித்து அலசுவது...
என கல்வியோடு
தொடர்புள்ள மனிதராக திகழ்ந்தார்....

தொழுகையின் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு முதல் வரிசையில் ஜமாஅத்துடன் தொழுவதற்கு மோதினாரின் இகாமத்திற்க்காக காத்து இருப்பார்.

கொஞ்சம் தாமதமானால்
தொழுகைக்கு நேரமாச்சு நேரமாச்சு என்று சத்தமிட்டுக் கொண்டு இருப்பார்..

தொழ வருபவர்கள் மின்விசிறி பயன்படுத்தி பயன்படுத்தி விட்டு ஆஃப் செய்யாமல் போனால் சத்தம் போடுவார்..
பள்ளி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயங்களையும் உண்ணிப்பாக கவனித்து வந்தார்..

பள்ளிவாசல் இமாம்களுக்கு மிகவும் உதவியாக, உபகாரியாக, சேவகராக விளங்கினார்..

எல்லா தினமும் அதிகாலையிலே எழும்பி ஸ்திரமாக தஹஜ்ஜுத் தொழுவதை வழமையாக கொண்டிருந்தார்....

கொரோனா வேளையில்
வணக்க வழிபாடு களுக்கு கட்டுப்பாடும், விதிமுறைகளும் செயல்படுத்திய நேரத்தில் பள்ளிவாசல் பணியாளர்கள் இல்லாத சந்தர்ப்பம்..