பால்ய திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

பால்ய திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பால்ய விவாகம் செய்து கொண்ட பிரபலங்கள்..

இந்தியாவில் பால்ய விவாகம் செய்து கொண்ட சில பிரபலமான நபர்களின் பெயர் மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது மனைவிகளின் வயது எத்தனை என்பதை சற்று அலசுவோம்...

மகாத்மா காந்தி கஸ்தூரிபாய் காந்தியை மணந்தபோது இருவருக்கும் 13 வயது.

இந்தியா கண்ட சிறந்த கணிதவியலாளரான சீனிவாச ராமானுஜன் தனது 22_வது வயதில் திருமணம் முடிக்கும் போது மனைவி ஜானகியம்மாளின் வயது பத்து...

இந்தியாவின் மிகச் சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவரான சத்யேந்திரநாத் போஸ் தனது இருபதாவது வயதில் 11_ வயதான உஷாபதியை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு
9_ குழந்தைகள் பிறந்தது..

இந்த மாபெரும் விஞ்ஞானி, போஸ் ஐன்ஸ்டீன் புள்ளிவிவரங்களைக் கண்டுபிடித்தவர், இந்தியாவின் அபிமானமாக விளங்கிய விஞ்ஞானி இவர்..

அறிவியல் சமூகம் அவரது நினைவாக போஸான் துகள்களுக்கு அப்பெயரிட்டது...

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவரும், வசதி படைத்தவருமான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது இருபத்தி மூன்றாவது வயதில் வெறும் ஐந்து வயது கொண்ட சாரதா பாயை மணந்தார். சுவாமி விவேகானந்தர் அவருடைய சீடர்

மலையாள மனோரமாவின் நிறுவனர் மம்மன் மாப்பிலாவின் மகன் கே.எம்.மேத்யூவின் 'எட்டாவது மோதிரம்' படி, மம்மன் மாப்பிலா 10 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
அவள் பதினோரு வயதில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள்

கேரள அரசியலின் அதிபரான ஏ.கே.கோபாலன் ஏ.கே.ஜி., தனது அரசியல் வாழ்க்கையில் அவர் பதுங்கியிருந்த வீட்டில் 12 வயது சிறுமியை எப்படி காதலித்தார் என்பதை தனது சுயசரிதையில் விவரிக்கிறார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாபெரும் திராவிட இயக்கங்களையும் தோற்றுவித்த மாபெரும் சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 13 வயது நாகம்மாவை மணந்தார். பெரியார் ஒரு நாத்திகர், பகுத்தறிவுவாதி, சுதந்திர சிந்தனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது

திருவிதாங்கூர் அரசியான பார்வதிபாயை (மகாராஜா சுவாதி திருநாளின் சின்னம்மா) அவரது பன்னிரண்டாம் வயதில், கிளிமானூர் ராகவர்மா கோயிதம்புரான் திருமணம் முடித்தார். பதின்மூன்றாவது வயதில் அவள் அரியணை ஏறினார்.

மகா கவி குமரநாசன் தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதில் சிறுமியாக இருந்த பானுமதியை மணந்தார் ...

மாத்ருபூமி பத்திரிகையின் நிறுவனரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கேசவ் மேனன் நான்காம் வகுப்பு படிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் என்று அழைக்கப்படும் மனுகர்னிகா, தனது பதின்மூன்றாவது வயதில் ஜான்சியில் அரசராக இருந்த 45 வயதான கங்காதர் ராவின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கையில் நுழைந்தார்.

புகழ் பெற்ற ஆன்மீக ஞானியும், சமூக மாநாட்டு இயக்கத்தை நிறுவி, குழந்தை திருமணத்திற்கு
எதிராகவும் விதவை திருமணத்தை ஊக்குவித்தவரும்,
சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளருமான
மஹாதேவ் கோவிந்த ரானடே
(இறப்பு: 1901) தனது முதல் மனைவி இறந்த பிறகு ஒரு விதவையை திருமணம் செய்ய வேண்டுமென்றே தனது சீடர்களின் பரிந்துரையை மீறி
எட்டு வயது ரமாபாயை
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்...

புகழ்பெற்ற மகளிர் நல ஆர்வலரான மகரிஷி கர்வே என்ற டாக்டர் தோண்டோ கேசவ் கர்வேயின் (இறப்பு 1962) முதல் மனைவி ஒரு ஒன்பது வயது சிறுமி யாகும்.

பால்ய விவாகம்செய்து கொண்ட இன்னும் இப்படி நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் எழுதினால் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இது இந்தியர்களின் பட்டியல் மட்டுமே.
மற்ற நாடுகளின் லிஸ்ட் எடுத்தால் ஒரு பெரிய நூலே தேவைப்படும்..

இன்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

கடந்த அரைநூற்றாண்டாக நமது சமூக-பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்களின் விளைவாக சம்பவித்த ஒன்று மட்டுமே திருமண வயது உயர்ந்துள்ளது என்பது....

தகவல்:
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி.