இனியொரு பள்ளிவாசல் நாம் இழந்து விடக்கூடாது
இனியொரு_பள்ளிவாசல்_நாம்
இழந்து_விடகூடாது...
பள்ளிவாசல் மற்றும் தர்காக்களுக்கு எதிரான உரிமைகோரல்கள் இறுதியில் நாட்டின் மதச்சார்பற்ற கருத்தையும் ஒற்றுமையையும் புண்படுத்தும்.
வழிபாட்டுத் தலங்களை காலத்திற்கேற்ப பாதுகாக்கவும்,
இனவாத,
பிரிவினைவாத, மதவாத, சிந்தனைகளை ஒழிக்கவும் ஜனநாயகவாதிகளும்,
அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் தயாராக வேண்டும்.
அஜ்மீர் தர்கா பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் மத நல்லிணக்கம் மற்றும் சூஃபி பாரம்பரியத்தின் அடையாளமாக இருந்து வருகிறது.
தர்காவின் கீழ் கோயில் இருப்பதாக ஆதாரமற்ற கூற்றைத் தொடர்ந்து
தர்கா கமிட்டி, இந்திய தொல்லியல் துறை மற்றும் ஒன்றியத்திற்கும் நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்ற நடவடிக்கை மிகவும் கவலையளிக்கிறது.
கியான்வாபி மஸ்ஜித்,
மதுரா ஷாஹி ஈத்கா,
சம்பல் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித்
மற்றும் அஜ்மீர் தர்கா உள்ளிட்ட முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் மீதான உரிமைகோரல்களும் மேலும் நடவடிக்கைகளும் நாட்டின் இணக்கமான சூழலையும் ஒற்றுமையையும் அழித்துவிடும்.
வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தமட்டில், 1947ல் இருந்த சூழ்நிலையை நிலைநாட்ட வேண்டுமென்ற 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் நிலைநிற்கும்
அதே வேளையில்,
இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, நீதித்துறையும், சட்ட அமலாக்க அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இறுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் வகுப்புவாதத்தை உருவாக்க வழிவகுக்கும்.
உ.பி.யில் நடந்த சம்பல் பிரச்னை
இதற்கு சாட்சி.
அனைத்து ஜனநாயக விசுவாசிகளும், அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கவும், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையையும், நல்லிணக்கத்தையும் பேணவும், வகுப்புவாத மற்றும் மதவாத சிந்தனைகளை ஒழிக்கவும் முன்வர வேண்டும்.....
இந்தியன் கிராண்ட் முஃப்தி
AP.#அபுபக்கர்_பாகவி_ஹஸ்ரத்..
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.....