அவர்கள் பரஸ்பரம் கண்ணியத்துடன் இருக்கிறார்கள்

அவர்கள் பரஸ்பரம் கண்ணியத்துடன் இருக்கிறார்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அவர்கள் பரஸ்பரம் கண்ணியத்தோடு இருக்கிறார்கள்..

ஸெய்யித் பாணக்காடு சாதிக்கலி ஷிஹாப் தங்கள் அவர்கள் இன்று கோழிக்கோடு ஜாமிஆ மர்கஸிற்கு வருகைத் தந்து இந்தியன் கிராண்ட் முஃப்தி ஷைகுனா
AP. அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் மற்றும் ஸெய்யித் இப்ராஹிம் கலீல் புகாரி தங்கள் அவர்கள் சந்திப்பின்
அரிய தருணங்களை காணொளியில்
நாம் காணலாம்.

சமஸ்தா
கேரளா ஜம்இய்யதுல் உலமா ஸ்தாபக தின விழாவின் ஒரு பகுதியாக கோழிக்கோட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஏ.பி.அபுபக்கர் பாகவி அவர்கள் *சமுதாய ஒற்றுமை* குறித்து கூறியதை அடுத்து முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பாணக்காடு ஸெய்யித் சாதிக்கலி ஷிஹாப் தங்கள் அவர்கள்
ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களின் பேரரின் திருமண விழாவில் பங்கேற்க வந்தார்.

கோழிக்கோட்டில் நடைபெற்ற சமஸ்த (இ.கே.பிரிவு) தலைமைக் கூட்டத்திற்கு தலைமைச வகித்து பேசிய பின்னர் மர்கஸ் விருந்தினர் மாளிகைக்கு வந்து ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களை சந்தித்தார்.

நட்புரீதியான விஜயத்தின் போதும் சமுதாய ஐக்கியம் மற்றும் சமூக மேம்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை, முஸ்லிம் லீக்கின் நியமிக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. ஹாரிஸ் பிரான் ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களை
சந்தித்த போதும் கூட சமுதாய நல்லிணக்கம், ஐக்கியம் பிரதான விவாதப் பொருளாக இருந்தது.

பொது நிகழ்வுகள், திருமணம் போன்ற விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போது கூட தலைவர்கள் ஒன்றாக இருப்பது சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பும் என்றும் ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் அன்று சுட்டிக்காட்டினார்கள்.

தலைவர்களின் சந்திப்பும், நட்பும் அணிகளிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும், பரஸ்பர அன்பை உருவாக்கும்.
இத்தகைய சந்திப்புகள் சமூகத்தின் பொதுவான தேவைகளுக்காக ஒருவரையொருவர் பகைத்துக்கொள்ளாமல் ஒன்றுபடும் உணர்வைத் தூண்டும்.
மேலும் சமுதாயத்திற்கு வலிமையை ஏற்படுத்தும்..

வல்லோன் அல்லாஹ் வெகு விரைவில் சமுதாய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும்,
பரஸ்பர
கண்ணியத்தையும்,
அன்பையும், மரியாதையும் தந்தருள்வானாக....

தமிழில்:M.சிராஜுத்தீன் அஹ்ஸனி