Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இதுதான் சூஃபிஸம்.

சூஃபிஸம் உனக்கு தொழுகையை மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை.

மாறாக சூஃபிஸம் தொழுகையில் இறைபக்தியை கற்றுக் கொடுக்கிறது.

வுளூவில் எவ்வாறு முகம் கழுக வேண்டும் என்பதை மட்டும் சூஃபிஸம் உனக்கு கற்றுத் தரவில்லை.

மாறாக ஆணவத்திலிருந்தும்,
கர்வத்திலிருந்தும், தற்பெருமையிலிருந்தும் உனது இதயத்தை எவ்வாறு கழுவ வேண்டுமென்பதை கற்றுத் தருகிறது.

தாடியை நீட்டி வளர்க்கவோ, கமீஸை சுருக்கவோ சூஃபிஸம் உனக்கு கற்றுத் தரவில்லை.

மாறாக அல்லாஹ்வை நினைவு கூறும் போது இதயத்தின் இருப்பை நீட்டிக்கவும், அல்லாஹ் அல்லாதவைகளைப்பற்றிய சிந்தனைகளையும், எண்ணங்களையும்
சுருக்கவும் சூஃபிஸம்
உனக்கு கற்றுத் தருகிறது.

ஒவ்வொரு நொடியிலும், நேரத்திலும் நீங்கள் மொழிகின்ற சொற்களின் செயல்களின் நோக்கங்களை, லட்சியத்தை தேட சூஃபிஸம் உங்களுக்கு கற்றுத் தருகிறது.

வெளிப்புறத்தில் மட்டும் தங்களுடைய
வழிபாட்டில் கவனம் செலுத்தும் மக்களால் சூஃபிஸம் ஒடுக்கப்படுகிறது.அதே நேரத்தில் உட்புறம் வெறுமையாக உள்ளது.

சூஃபிஸம் என்பது வணக்க வழிபாட்டினுடைய பலன்களின் சுவையை ருசிப்பதாகும்.
யார் அந்த சுவையை ருசிக்கிறாரோ அவர் (அறிவை) அறிந்திடுவர்.
யார் அந்த அறிவை பெறுகிறாரோ அவர் சூஃபிஸ ஞானத்தில் மூழ்கிடுவர்.

சூஃபிஸம் என்பது வெளிரங்கமான காரியங்களுக்கு எதிராக உள்ரங்கமான காரியங்களைப்பற்றி அறிவதாகும்.

சூஃபிஸம் என்பது வெளிரங்கமான உறுப்புகளின் செயல்களுக்கு எதிராக இதயங்களின் செயல்களைப்பற்றி அறிவதாகும்.

தமிழில் :
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.