*பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் நாட்டின் வலிமையைப் பறைசாற்றுகிறது.*காஷ்மீர் உட்பட தெற்காசியாவில் அமைதியின்மையை பரப்பும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் உதவும்.இந்தியன் கிராண்ட் முஃப்தி AP.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத்.
#பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் நாட்டின் வலிமையைப் பறைசாற்றுகிறது.
இந்தியன் கிராண்ட் முஃப்தி
AP.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத்.
பயங்கரவாத எதிர்ப்புக்கான
இந்தியாவின் போராட்டம் நாட்டின் வலிமையையும், சக்தியையும் பறைசாற்றுவது மட்டுமல்லாமல், மனிதகுலத்திற்கான நமது நித்திய கடமை மற்றும் பொறுப்பையும் நமக்கு உணர்த்துகிறது என்று இந்தியன் கிராண்ட் முஃப்தி
ஏ.பி. அபுபக்கர் பாகவி ஹஸ்ரத்
அவர்கள் கூறினார்.
காஷ்மீர் உட்பட தெற்காசியாவில் அமைதியின்மையை பரப்பும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் உதவும். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்தியா மேலும் விரிவானதாகவும்,
பயனுள்ளதாகவும் மாற்ற முடியும்.
அந்த திசையில் இந்தியா மேலும் முயற்சிகளை மேற்கொண்டு பெருமைமிக்க சாதனைகளைப் படைக்கட்டும்.
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இந்த முயற்சிகளை ஆதரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் குடிமகன் என்ற நிலையில் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம் என்றும் தனது
பேஸ்புக் பதிவில் தெளிவுபடுத்தினார்...
தமிழில் :M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.