Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஃபித்றாவைப் பாழாக்காதீர்

பெருநாள் தினத்தில் வசதிபடைத்தவர்களைப் போலவே ஏழைகளும்
வயிறார உண்டு பெருநாளின் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட கடமை தான் ஃபித்தா.
பெருநாள் பகலிலும் அதற்குப் பிறகுள்ள இரவிலும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் தேவையான உணவு, உடை, தங்குமிடம், திருப்பிக் கொடுக்க வேண்டிய உடன் இவைகளுக்கு தேவையான் பணத்துக்கு அதிகமான பணம் கைவசம் வைத்திருப்-பவர்கள் செய்ய வேண்டிய கடமை தனக்கும் தான் செலவு செய்வது கடமையான பெற்றோர், மனைவி, மக்கள் இவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நபர் ஒன்றுக்கு 2% கிலோ வீதம் [ஷாஃபிஈ மத்ஹப்) ஜகாத் வாங்க தகுதியுடையவர்களுக்கு வழங்க வேண்டும்.
தன் ஊரில் மிகுதியான பயன்படுத்தும் உணவுப் பொருளாகும் வழங்க வேண்டியது.
ஷாஃபிஈ மத்ஹபின் படி விலையை அளித்தால் ஃபித்ரா நிறைவேறாது.

ஃபித்றா கொடுப்பவர் தானாகவோ அல்லது தான் ஒப்படைக்கும் ஒரு தனி நபர் (ஊக்காலத்து] மூலமாகவோ ஃபித்தாவை உரியவரிடம் கொடுக்க வேண்டும். தான் கொடுக்கும் நேரத்திலோ அல்லது கொடுப்பதற்காக ஏற்படுத்தும் நபரிடம் ஒப்படைக்கும் நேரத்திலோ "வாஜிபான ஃபித்ரா கொடுக்கிறேன்" என்று நிய்யத் செய்ய வேண்டும்.
பெருநாள் தினத்தின் மஃரிபிலிருந்து பெருநாள் தொழுகைக்கு முன்பாக இதை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

மற்றொரு முறையிலும் ஃபித்தாவை வினியோகிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாமிய அரசாங்கம் ஏற்படுத்தும் வேலைக்காரர்களிடம் ஃபித்றாவை ஒப்படைத்து அவர்கள் மூலமாக அரசு உரியவர்களுக்கு சொண்டு சேர்ப்பதாகும்.
இந்த முறை இஸ்லாமிய
ஆட்சி நடைபெறாத இந்தியா போன்ற நாடுகளில் செயல்படுத்த இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

ஆனால் சமீபகாலமாக பல பகுதிகளிலும் ஊரிலுள்ள ஏதாவது ஒரு குழு மக்களுடைய ஃபித்றாலை வீடு தோறும் சென்று பிரித்து அதை ஏழைகளுக்கு கொடுத்து வருகிறது. இது | இஸ்லாம்/அங்கீகரிக்காத ஒரு புதுமையான செயல் என்பதோடு மட்டுமல்லாமல் இந்த குழுவிடம் ஒப்படைப்பவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றாதவர்களாகவும் ஆகிறார்கள்.

காரணம் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத நாடுகளில் மக்களுடைய ஃபித்றாலை பிரித்து வினியோகம் செய்யும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை. ஷரீயத்தின் ஆதாரங்களில் இப்படியொரு அனுமதியை எங்குமே பார்க்க முடியாது. ஃபித்ராவை பிரிக்க முன்வந்திருக்கும் குழுக்கள் ஆகாரமாக காட்டுவது நபியவர்கள் பிரித்து கொடுத்த நிகழ்ச்சியையாகும். நபியவர்கள் அரேபியாவில் இஸ்லாமிய ஆட்சி நடத்தினார்கள், அந்த அடிப்படையில் தான் பிரித்தார்கள் என்பதை இவர்கள் புரியவில்லை. திருடியவனின் கையை வெட்டுவது, விபச்சாரம் செய்தவனை எறிந்து கொல்வது போன்ற ஆட்சியின் மூலம் நடைமுறைப்படுத்தும் செயல்களில் ஒன்று ஃபித்தாவைப் பிரிப்பதும், எப்படி இந்த தண்டனைச் சட்டங்களை இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத இடங்களில் செயல்படுத்த முடியாதோ அது போன்று தான் ஃபித்றாவையும் கமிட்டிகள் மூலம் பிரிக்க முடியாது.

ஃபித்தாவைப் பிரிப்பதற்கு சில இயக்கங்கள் முன்வரும் போது மேலும் சில குழப்பங்கள் உருவாகின்றன. ஜகாத் வாங்க தகுதியான எட்டு பிரிவில் ஜகாத்தை பிரிப்பவர்களும் ஒன்று. இது இஸ்லாமி அனுப்பும் வேலைக்காரர்களாகும். நம் ஊர்களில் ஒரு இயக்கம் பிரிக்க இறங்கும் போது நாங்களும் ஜகாத்துக்கு உரிமையாளர்கள் தான் என்று சொல்லி ஜகாத்தின் ஒரு பகுதியை தங்கள் இயக்கத்துக்கு எடுத்துக் கொள்ளும்' வாய்ப்பிருக்கிறது.

மேலும் ஒரு குழு முன்வருவதைப் பார்த்து இன்னொரு குழுவும் பிரிக்க முன்வரலாம். இது சமுதாயத்தில் கலகங்கள் உருவாக காரணமாக அமையும். காரணம் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத இடங்களில் யார் பிரிக்க வேண்டும் என்றொரு முடிவை நபி சொல்லித் தரவில்லை. அதனால் நாம் செய்ய வேண்டியது, ஒன்று நாமாகவே நம் ஃபித்தாவை உரியவரிடம் கொண்டு சேர்ப்பது; அல்லது ஒரு நம்பிக்கைக்குரிய தனிநபரிடம் உரியவரிடம் கொடுப்பதற்காக ஒப்படைப்பது. எல்லாருடைய ஃபித்றாவையும் பிரித்து மொத்த உணவிலிருந்து வினியோகம் செய்ய முன்வரும் இயக்கங்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள். அல்லாஹ் தஆலா நம் வணக்கங்களை அவன் ஏற்றுக்கொள்ளும் முறையில் அமைத்து தருவானாக! ஆமீன்.

அஹ்லுஸ்ஸுன்னத்தி வல் ஜமாஅ....
குமரி மாவட்டம்.