நம் ஊர் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவோம்

நம் ஊர் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவோம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#நம்_ஊர்_வியாபாரிகளுக்கு #முன்னுரிமை_வழங்குவோம்.....

குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாலும்,
கடைகளில் கிடைக்காத பல பொருட்கள் ஆன்லைனில் கிடைப்பதாலும்,
கடைகளுக்கு செல்லாமல் பொருட்கள் வீட்டிற்கு வந்து சேருவதாலும்
அனைத்து பொருட்களும் ஏகபோக கடையில் கிடைப்பதாலும்
எல்லோரும் அங்கு ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.

இத்தகைய வசதிகள் இருப்பதற்காக யாரையும் குறை கூற முடியாது.

எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல பக்கம் இருந்தால், நிச்சயமாக ஒரு கெட்ட பக்கம் இருக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்.

வெறும் பாழடைந்த ஒரு ஏக்கர் நிலத்தை ரூ .10,000 க்கு விலைக்கு வாங்கி அந்த இடத்தில் ஒரு கடையைத் தொடங்குகிறீர்கள்..

அதிகமான மக்கள் பொருட்கள் வாங்க கடைக்கு வரத் தொடங்கியதும்...

இன்னொருவர் வந்து மீன் விற்கத் தொடங்கினார்.

யாரோ அதைப் பார்த்து ஒரு இறைச்சி மற்றும் கோழி கடையைத் தொடங்குகிறார்...

பின்னர் அதிகமான மக்கள் வரத் தொடங்கியதால் அதிக வணிக நிறுவனங்கள் அங்கு வரத்துவங்குகிறது...

பொருட்கள் வாங்க அதிகமான மக்கள் வரத் தொடங்கியதால், பஸ்-ஆட்டோ-டாக்ஸி சேவைகள் அங்கு ஆரம்பிக்கிறார்கள்...

அதன் காரணமாக நிறைய பேருக்கு வேலை கிடைக்கிறது

துணிக்கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அங்குள்ள பல்வேறு மளிகைக் கடைகளிலிருந்து பொருட்களை வாங்குகிறார்கள்.

மற்றும் பல மளிகைக் கடை ஊழியர்கள் அங்குள்ள கடையிலிருந்து கோழி மற்றும் இறைச்சியை வாங்குகிறார்கள்..

கோழி கடைக்காரரும் ஊழியர்களும் உள்ளூர் மளிகைக் கடையிலிருந்து மளிகைப் பொருட்களை வாங்குகிறார்கள்..

அதனால் அந்த சந்தைக்கு வரும் பணத்தின் நல்ல சதவீதம் அங்கேயே செலவழிக்கப்படுகிறது.

வியாபாரிகள் அவர்கள் சம்பாதித்த லாபத்தில் வீடுகள் மற்றும் பண்ணைகளைக் கட்டும் போது அதிகமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது...

சுருக்கமாக, நுகர்வோர் செலவழித்த பணம் அங்கு புழக்கத்தில் இருந்ததால் நாடு வளரத் தொடங்கியது. முன்னேறுகிறது..

முன்பு ஒரு சென்ட் ரூ .10,000 க்கு விலை நிர்ணயிக்கப்பட்ட நிலம் இப்போது ரூ .3 லட்சம். நம் நாட்டில் வர்த்தகம் வளரும் தோறும் நமக்கும் நம்முடைய சொத்துக்கும் மதிப்பு அதிகரிக்கும்.

சொந்த ஊரிலுள்ள கடைகளில் எதையும் வாங்காமல் சில்லறை லாபத்திற்காக ஏகபோக கடைகளிலும், ஆன்லைன் மார்க்கெட்டிலும் பொருள் வாங்கும் போது நம் ஊரிலுள்ள கடைகள் வியாபாரம் இல்லாமல் படுத்துவிடும்..கடைசியாக மூடும் நிலை ஏற்படும்..

ஏகபோக வியாபாரிகளும், ஆன்லைன் சைட் உரிமையாளர்களும் நம்மிடமிருந்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு நமக்கு ஒரு லாபமும் இல்லை..

தமிழில்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி