AP.உஸ்தாதும் காஷ்மீரும்
A.P. உஸ்தாதும்_காஷ்மீரும்.
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசும் போது A.P.உஸ்தாது அவர்களைக் குறித்து சர்ச்சை வந்தது.
அந்த சர்ச்சை இந்தியாவில் வகுப்புவாத பிரச்சினைகள் மற்றும் அதில் பல்வேறு சமூகங்களின் பங்கு குறித்து பேசப்பட்டது.
கடைசியில் காஷ்மீர் மக்களை குறித்து சர்ச்சை வந்து நின்றது.
காஷ்மீரில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காஷ்மீரிலுள்ள முஸ்லிம் அமைப்புகளே காரணம் என்று அந்த நண்பர் கூறினார்.
அதுமட்டுமல்ல காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மனதில் தீவிரவாத சிந்தனை வைத்திருப்பவர்களென்றும் வாதிட்டார்.
காஷ்மீரின் சாதாரண பாமர முஸ்லிம் மக்கள் அமைதியை விரும்புபவர்களென்றும் போராளிகளுக்கும், இராணுவத்திற்க்கும் இடையிலான அவர்களது வாழ்க்கை பரிதாபகரமானது என்று நான் கூறிய போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள தயாராகவில்லை.
அந்த நேரத்தில் தான் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நரகித்து வேதனைப்பட்டு கொண்டிருந்த காஷ்மீரின் அனாதை குழந்தைகளை மர்கஸிற்கு கொண்டு வந்து பாதுகாப்பும், கல்வியும் வழங்கிய விஷயம் நினைவுக்கு வந்தது.
அதை நான் அந்த நண்பரிடம் நினைவுப்படுத்தினேன்.
உடனே அந்த நண்பர் சொன்னார்.
அதைத்தான் நான் சொல்கிறேன்.
இங்கே ஏராளமான ஏழை,எளிய, அனாதை குழந்தைகள் இருக்கும் போது காஷ்மீரிலிருந்து அனாதை குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து கேரளாவிற்கு கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன ?
பயங்கரவாதிகளை பாதுகாக்கும் மற்றும் பயங்கரவாதத்தை வளர்த்தும் அபாயகரமான செயல் இது உங்களில் (பத்திரிக்கையாளர்கள்) இதைக் குறித்து விசாரித்தீர்களா?
காஷ்மீரிலிருந்து கேரளாவிற்கு அழைத்து வரப்பட்ட குழந்தைகள் கொலை செய்யப்பட்ட போராளிகளின் குழந்தைகளென்றும்,அவர்களை இரகசியமாக பாதுகாப்பது மூலம் தீவிரவாதிகளின் பின் தலைமுறையினரை உறுதிப்படுத்தும் வேலையை A.P.உஸ்தாதும்,
மர்கஸ் நிர்வாகிகளும் செய்கிறார்கள் என்பது தான் நண்பரின் வாதம்.
நண்பரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முன் விடை தெரியாமல் மவுனமாக இருந்தேன்..
ஆனால் நண்பரின் கேள்விகள் என்னை மிகவும் அலட்டிக் கொண்டே இருந்தது.
இதற்கு சரியான பதில் கிடைக்காவிட்டால் இதுப்போன்ற உரையாடல்களில் நாம் பதில் தெரியாமல் மவுனமாக இருக்க நேரிடும் என்பதை புரிந்து கொண்டேன்.
காஷ்மீர் குழந்தைகள் மர்கஸில் வந்தது பற்றி அறிய நான் மர்கஸிற்கு சென்றேன்..வேறு எவரிடமும் கேட்பதை விட சம்பந்தப்பட்டவர்களிம் நேரடியாக சந்தித்து கேட்பது தான் நல்லது என தீர்மானித்தேன்.
நான் A.P.உஸ்தாது அவர்களிடம் விஷயங்களை கேட்டறிந்து கொண்டேன்.அவருடன் பேசிய போது தான் குழந்தைகளை பிடிக்க காஷ்மீருக்குச் செல்லவில்லை என்பதையும், காஷ்மீர் குழந்தைகளை மர்கஸிற்கு அழைத்து வருவதில் ரகசிய உடன்படிக்கைகள் எதுவும் இல்லை என்பதையும் உணர்ந்தேன்.
உண்மையில் நடந்தது இதுதான் என்று A.P. உஸ்தாத் உரையாட துவங்கினார்கள்.
நான் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள காஷ்மீருக்கு சென்றேன்.
விமானத்திலிருந்து தரையிறங்கி தான் செல்ல வேண்டிய இடம் அவ்வளவு தூரம் இல்லை.ஆனால் காஷ்மீரின் நிலமையை உணர்ந்து கொள்ள அந்த குறுகிய தூரம் போதுமானதாக இருந்தது.
பயங்கரவாதிகளை பிடிக்க முழத்துக்கு முழம் ராணுவ படையினர் நிற்கிறார்கள். எல்லா வாகனங்களையும் பரிசோதனை செய்கிறார்கள்...எங்களது வாகனமும் பரிசோதனை செய்தார்கள்.
ஒரு புறம் பயங்கரவாதிகள், மறுபுறம் இராணுவ வீரர்கள் இத்தனைக்கும் நடுவே அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று சிந்தித்தேன்.
அங்கு வளர்ந்து வரும் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்தேன்.
மாநாட்டிலிருந்து திரும்புவதற்கு முன் காஷ்மீர் முதல்வரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய காஷ்மீர் முதல்வராக இருந்தவர் முஃப்தி முஹம்மது சயீத்
மர்கஸையும், அதன் நிழலில் வளர்ந்து வரும் ஆயிரக்கணக்கான அனாதைகளைப் பற்றி அவர் கேள்விப்பட்ட போது அவர் என்னிடம் கேட்டார்.
"இங்குள்ள அனாதை குழந்தைகளை பராமரிக்கும் விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே.
எங்களால் இயன்ற விதம் எந்த வகையிலும் உதவ தயாராக இருப்பதாக நான் முதல்வரிடம் கூறினேன்.
மிகவும் சந்தோஷப்பட்டார்..
காஷ்மீரில் மர்கஸ் போன்ற ஒரு மையத்தை தொடங்க தேவையான அனைத்து வித உதவிகளும் செய்வதாக முதல்வர் வாக்களித்தார்.
அதற்கு முன்னர் ஒரு சில குழந்தைகளை பாதுகாக்க கேரளாவுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
அங்குள்ள அனாதை குழந்தைகளின் நிலை மிகவும் மோசமானதாக இருந்தது.அவர்களில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகள், காஷ்மீரின் கடுமையான குளிரில் கூரைகள், மற்றும் சுவர்களைக் கொண்ட குடிசைகளில் வாழ்ந்தனர்.
இதையெல்லாம் பார்த்து கண்ணீர் வடித்து ஒரு சில குழந்தைகளை பராமரிக்க ஒப்புக்கொண்டேன்.
இதன் மூலம் ஒரு சில குழந்தைகள் காஷ்மீரின் இரத்த காட்டிலிருந்து கோழிக்கோடு எனும் சமாதான பூமிக்கு வந்தடைந்தனர்.
பயம் அவர்களின் கண்களில் இருந்தது, அவர்களின் முகங்கள் சிரிப்பை மறந்து விட்டன, அறிமுகமில்லாத மொழி, பாதகமான வானிலை,மர்கஸில் உள்ளவர்கள் கூட இந்த குழந்தைகளை சமாளிக்க
முடியாது அஞ்சினர்.
சமீபத்தில் மர்கஸிற்கு சென்ற போது அந்த குழந்தைகளைப் பார்த்தேன்.
அந்த முகங்களில் சிரிப்பு நிறைந்து களமாடுகிறது..
காஷ்மீருக்கு சென்ற போது நாம் பார்த்த பரதேசி கோலங்களுக்கு பகரமாக மிக அழகான சுத்தமான ஆடைகளில் காட்சியளித்தார்கள்.
கேரளாவின் வெப்பம் அறியாத வண்ணம் கேரள மக்களின் அரவணைப்பால், அன்பின் குளிர்ச்சியில் மூழ்கி போயிருந்தார்கள்.
மொழி, மற்றும் நாட்டின் எல்லைகளை அவர்கள் மறந்து விட்டார்கள்.
அவர்கள் நல்ல அழகான மாளிகையில் வசித்து வருகிறார்கள்.
தன்னே மறந்து கேரள நண்பர்களுடன்
"சாரே ஜஹன்சே அச்சா"
இந்துஸ்தான் ஹமாரா என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள்..
இப்படி அழகிய விதத்தில் A.P.உஸ்தாத் மர்கஸில் காஷ்மீர் குழந்தைகள் வந்ததுப்பற்றி எனக்கு சொல்லித் தந்தார்கள்.
இனி காஷ்மீர் மக்களைக்குறித்தும் A.P. உஸ்தாத் அவர்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதித்து வெற்றி பெற முடியும்.
(#கேரளாகவுமுதி பத்திரிகை நிருபர்: #ஸஜீவன்.)
தமிழில்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.
வெளியே இருந்து கொண்டு அவதூறும், பழிச்சொற்களும் சொல்வது மிக எளிது.
ஆனால் களத்தில் இறங்கி சென்று விஷயத்தை அனுகும் தான் போது தெரியும் அதன் வலியும் வேதனையும்..
அல்லாஹ் உஸ்தாது அவர்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வழங்கியருள்புரிவானாக!