சக மனிதர்களை ஒன்றிணைப்பது...
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
எந்த மதத்திலும் அல்லது கொள்கையிலும் இருக்கும் நபராயினும் ஒரு மனிதன் எனும் அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை இஸ்லாம் முன்வைக்கிறது.
கொள்கை மற்றும் நம்பிக்கைகளில் எந்த சமரசமும் இல்லாமல்
சக மனிதர்களை ஒன்றாக வைத்திருப்பது என்ற மகத்தான கருத்தைதான் இஸ்லாம் கற்பிக்கிறது.
நாட்டில் மதம், சாதி, மொழி மற்றும் வர்க்க சிந்தனைகளால் இஸ்லாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, மனிதனின் கண்ணியமும் தனித்துவமும் அழிக்கப்பட்டு வரும் ஒரு நேரத்தில், 'மனிதர்களுடன் என்ற கருப்பொருள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துக்கு அரவணைப்பையும் உற்சாகத்தையும் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
மனிதன் எனும்கருப்பொருளை இஸ்லாம் எவ்வாறு வளமான முறையில் வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பயணம் வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.