#மகத்தான_பரிசு....
لَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنْ الصَّابِرِينَ......
அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்,
அல்லாஹ் நமது அமல்களை ஏற்றுக் கொண்டு நம்மை தொடர்ந்து நேர்வழிப்படுத்துவானாக!
இபுறாகீம் அலை அவர்களைப் போல அவனுக்கு உகந்த அடியார்களின் கூட்டத்தில் நம் அனைவரையும்
சேர்த்து வைப்பானாக!
இன்றைய இந்தப் பெருநாள் இறைத்தூதர் இபுறாகீம் அலை அவர்களை சிறப்பாக நினைவு
கூறுகிற பெருநாளாகும்.
இன்றைய தினத்தில் நாம் நிறைவேற்றுகிற குர்பானியும்.
அது போல ஹாஜிகள் ஹஜ்ஜில் நிறைவேற்றுகிற பெரும்பாலான வணக்ககங்களும் இபுறாகீம் அலை அவர்களுடன் தொடர்புடையவையாகும்.
தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் படைத்த இறைவனுக்கு அர்ப்பணித்ததில் அவருக்கு நிகராக மனித வரலாற்றில் இன்னொருவர் கிடையாது.
அவரை இறைவன் சோதிக்காத களம் கிடையாது, அன்னார் மீது இலட்சோப இலட்சம் சலாத்தும் சலாமு உண்டாவதாக! அத்தனை சோதனைகளத்திலும் தன்னுடைய இதயத்தைல் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் இல்லை என்பதை உறுதிபட அவர் வெளிப்படுத்தினார்.
இந்த உலகில் மனிதனுக்கு மிக முக்கியமானது இரண்டு.
1. உயிர்
2. குழந்தைகள்
அவரது காலத்தில் மக்கள் சிலை வணக்கத்தில் மூழ்கிப் போயிருந்தார்கள், அதை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு உண்மையை புரியவைப்பதற்காக சிலைகளை உடைத்துப் போட்டார். அதன் காரணமாக அவரை மாபெரும் நெருப்புக் குண்டத்தில் போட பாபிலோனிய மன்னன் நம்ரூத் தீர்மாணித்தான்,
வானத்தை தொடுமளவு ஜுவாலை கொண்ட பெரும் நெருப்புக் குண்டம் தயாரிக்கப்பட்டது, அதன் அருகே நின்று இபுறாகீம் அலை அவர்களை தள்ளி விட முடியாது என்பதால் ஒரு கவண் இயந்திம் தயாரிக்கப்பட்டது உலகில் தயாரிக்கப்பட்ட முதல் கவண் இயந்திரம் அது என்றும் குர்து இனத்தை ஹேசன் என்பவன் அந்த கவனை தயாரித்தான் என்றும் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்.
لم توقد نار قط مثلها وجعلوا إبراهيم عليه السلام في كفة المنجنيق بإشارة رجل من أعراب فارس من الأكراد قال شعيب الجبائي اسمه هيزن فخسف الله به الأرض فهو يتجلجل فيها إلى يوم القيامة فلما ألقوه قال: حسبي الله ونعم الوكيل كما رواه البخاري عن ابن عباس
பிரம்மாண்ட நெருப்பில் தூக்கி போடப்பட்ட போதும் இபுறாகீம் அலை அந்த நெருப்புக்கு முழுமையாக தன்னைக் கொடுத்தார்.
ஜிப்ரயீல் (அலை) உதவி வேண்டுமா என்று கேட்ட போது உங்களின் உதவி தேவையில்லை, அல்லாஹ்விடமே உதவி தேடுகிறேன் என நெருப்பில் விழுந்தார்...
وذكر بعض السلف أنه عرض له جبريل وهو في الهواء فقال ألك حاجة فقال أما إليك فلا وأما من الله فبلى
(تفسير إبن كثير)
அல்லாஹ் அந்த நெருப்பை குளிர்ந்த பூங்காவாக மாற்றினன்.
ஒரு பசுமையான தோப்பில் இருப்பது போல இபுறாகீம் (அலை) நெருப்பிற்குள் இருக்க, அவரை ஒன்றும் செய்ய முடியாமலும் அவருக்கு அருகே செல்லமுடியாமலும் மக்கள் திணறினர். இபுறாகீம் (அலை) தண்டனை கொடுக்க அவர்கள் தீட்டிய திட்டம் தண்ணீர் போல நீர்த்துப் போனது. திருக்குர்ரான் அற்புதமாக அந்த நிலையை விவரிக்கிறது.
وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمْ الْأَخْسَرِينَ(70)
இந்த சோதனையில் வென்றது
போலவே வாழ்க்கையின் மிகக் கஷ்டமான் இன்னொரு சோதனையிலும் இபுறாகீம் (அலை)வெற்றியடைந்தார்கள்.
அவரது மகனை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் அவருக்கு கனவைக் காட்டினான்.
மகனை அறுக்கத் துணிந்த இபுறாகீம் அலை மனைவி ஹாஜரா அம்மாவிடம் ஒரு விருந்துக்கு குழந்தையை தயார் செய்யுமாறு கூறினார். விருந்துக்கு அலங்கரிக்கப்பட குழந்தையை அழைத்துக் கொண்டு மினாவின் காட்டுப் பகுதிக்கு இபுறாகீம் அலை சென்றார்.
இதை தடுக்க நினைத்த சைத்தான் முதலில் ஹாஜரா அம்மாவிடம் சென்று உன் குழந்தையை இபுறாகீம் எங்கே அழைத்துச் செல்கிறார் தெரியுமா என்று கேட்டான்.
விருந்துக்கு என ஹாஜரா அம்மா பதிலளித்தார்.
இல்லை உன் மகனை அறுக்கவே அழைத்துச் செல்கிறார் என்றான் இபுலீஸ்.
ஏன் அவ்வாறு செய்யப் போகிறார் என்றார் ஹாஜரா அம்ம.
அவருடைய இறைவனின் உத்தரவாம் என இபுலீஸ் பதிலளித்தான் இறைவனின் உத்தரவென்றால் அதற்கு குறுக்கே நிற்க நான் யார்?
என ஹாஜரா அம்மா கூறவே நிராசை அடைந்த சைத்தான் இஸ்மாயீல் அலை அவர்களிடம் சென்று உன் தந்தை எங்கு அழைத்துச் செல்கிறார் தெரியுமா என்றான், விருந்துக்கு என அவரும் பதிலளித்தார், இல்லை உன்னை அறுக்கவே அழைத்துச் செல்கிறார் என்றன் இபுலீஸ், ஏன் என இஸ்மாயீல் அலை கேட்டார், அவருடைய இறைவனின் உத்தரவாம் என இப்லீஸ் பதிலளித்தான். அப்படியானால் அதற்கு கட்டுப்படுவதை விட எனக்கு வேறு என்ன பெருமை இருக்கிறது என்றார் இஸ்மாயீல் அலை
இபுறாகீம் (அலை) தன்னுடைய மகனிடத்தில் தனது திட்டத்தை கூறினார்கள்.
لَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى
இஸ்மாயீல் அலை பதறாமல் தன்னுடைய பதிலைச் சொன்னார்கள், சைத்தான் ஏற்படுத்திய சலனம் அவர்களது உறுதியை வலுப்படுத்தியிருந்தது..
قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنْ الصَّابِرِينَ(102
சைத்தான் இபுறாகீம் அலை அவர்களை நேரிட்டு கெடுக்க முயற்சி செய்தான், கனவில் கணடது தானே இது ஒன்றும் நேரடி உத்தரவில்லையே என்றான், நபியின் கனவும் இறை உத்தரவுதான் என பதிலளித்த இபுறாகீம் அலை அவனை கல்லெறிந்து விரட்டினார்கள்.
பிறகு மகனை படுக்க வைத்து அறுத்தார்கள், ஆனால் இஸ்மாயீல் அலை அவர்களின் கழுத்தில் கத்தி இறங்க வில்லை,
அல்லாஹ் இபுறாகீம் (அலை) அவர்களை அழைத்தான். இபுறாகீமே! உமது கனவை நனவாக்கி விட்டீர்! உமது மகனை அறுக்காமல் காத்தது போலவே நாம் நன்மை செய்வோருக்கு கூலி கொடுக்கிறோம், இது தெளிவான ஒரு சோதனை தான். என்று அல்லாஹ் கூறினான்,
فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ(103) وَنَادَيْنَاهُ أَنْ يَاإِبْرَاهِيمُ(104)
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ(105)
إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ(106)
இதற்குள்ளாக ஜிப்ரயீல் அலை சொர்க்கத்திலிருந்து பெரிய கண்களையும் கொம்புகளையும் உடைய கொழுத்த ஒரு ஆட்டை கொண்டு வந்து இதை அறுத்து பலியிடுங்கள் என்றார்கள்,
ஜிப்ரயீல் (அலை) தன்னுடைய சக்தியை முழுமையாக பயனபடுத்தி வேகமாக பயணித்த நான்கு இடஙகள் :
யூசுப் அலை கிணற்றில் வீசப்பட்ட போது அர்ஷின் கீழே இருந்து வேகமாக சொர்க்கத்தின் ஒரு பலகையை எடுத்துக் கொண்டு யூசுப் அலை தண்ணீரை தொடுவதற்கு வந்து சேர்ந்தார்.
பெருமானார் (ஸல்) அவர்கள் உஹது யுத்தத்தில் காயம் பட்ட போது முகத்தில் வழிந்த இரத்தம் கீழே விழுவதற்கு முன் வந்து கையில் ஏந்திக் கொண்டார்,
இபுறாகீம் அலை நெருப்புக்குண்டத்தில் கவன் இயந்திரத்தால் தூக்கி வீசப்பட்ட போது சிதரத்துல் முன்தஹாவில் இருந்தவர் - இபுறாகீம் நபி நெருப்புக்குள் விழுவதற்குள் அதை பூங்காவனமாக்கினார்,
இபுறாகீம் அலை இஸ்மாயீஸ் அலை அவர்களை அறுக்கத் தொடங்கி முடிப்பதற்குள் சொர்க்கத்திலிருந்து
ஒரு ஆட்டை கொண்டு வந்தார்
( பத்ஹுல் பாரி)
அல்லாஹ் கூறுகிறான்,
அவருக்கு மகத்தான பலியை மாற்றாக அளித்தோம்.
وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ(107)
மட்டுமல்ல இந்த வழக்கத்தை பின் வரும் தலைமுறைகள் பின்பற்றுமாறு செய்தோம்
وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ(108)
இபுறாகீம் நபியின் அந்த அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் நாம் குர்பானி கொடுத்து வருகிறோம்,
அல்லாஹ் அந்த் ஒரு செயலை மட்டும் பின் வரும் சந்த்ததியினருக்கு கடமையாக்க வில்லை, பலவற்றையும் கடமையாக்கினான்.
மினாவில் தங்குதல்,,ஷைத்தான கல்லெறிதல் என ஹாஜிகள் நிறைவேற்றுகிற முக்கிய வணக்கங்கள் இபுறாகீம் நபியின் வழித்தொடராகவே நம்மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றன,
Source...வெள்ளி மேடை..
அனைவருக்கும் இனிய தியாயகத்திருநாள் நல்வாழ்த்துகள்...
அன்புடன்.
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி