முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை இழிவுபடுத்தும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டியது
முத்து நபியின் தோழர்கள் அனைவரும்
மகத்தான மேன்மை கொண்டவர்கள்.
நாம் அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.
அவர்கள் மீது மரியாதை செலுத்த வேண்டும்..
அவர்கள் யாரையும் மரியாதை குறைவாக கருதவோ, பேசவோ,எழுதவோ
ஒரு போதும் செய்யக் கூடாது..
நபித்தோழர்களுக்கு
இடையே ஏற்பட்ட பிரச்சினைகளில்
நாம் தலையிட வேண்டியதில்லை.
நாம் அவ்விடயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே இமாம்களின் போதனை.
முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்
ஒரு நபித்தோழர்.
ஸஹீஹுல் புகாரி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சுஹ்பத்தை உறுதிப்படுத்தும் அத்தியாயம் உள்ளது.
ஸெய்யிதுனா முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் முத்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஸுஹ்பத் உறுதிப்படுத்தப்பட்ட சங்கையான
தலைவர்.
முத்துநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அங்கீகாரமும் ஆசிர்வாதமும்
பெற்ற கண்ணியவான்.
இவர்களும்
திருநபியின்
வஹ்யி எழுத்தாளர்களில் ஒருவர்.
திருநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) விற்காக சிறப்பு துஆ செய்ததாக ஹதீஸில் பார்க்க இயலும்..
ஸெய்யிதுனா அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களால் நியமிக்கப்பட்ட தளபதிகளில் ஒருவர்..
முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸெய்யிதுனா உமருல் ஃபாரூக் (ரழியல்லாஹு அன்ஹு) காலத்தில்
ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள்.
முஆவியா
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மகிமையில் அஹ்லுஸ் ஸுன்னாவுக்கு கருத்து வேறுபாடு இல்லை.
முஆவியா (ரலியல்லாஹு) அவர்களை இழிவுபடுத்துபவர்கள் வழிகெட்டவர்களும் வழிகெடுப்பவர்களும் ஆவார்கள்..
சஹாபாக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசவோ எழுதுவோ எண்ணவோ செய்யாத கூட்டத்தில் வல்லோன் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக...