பள்ளிதர்ஸ் கேரளாவின் சிறப்பு
#பள்ளி_தர்ஸ்...
நீங்கள் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் போனால் இவற்றை
பார்க்க முடியும்..
ஒரு உஸ்தாத் அல்லது இரண்டு உஸ்தாத்மார்களின் தலைமையில்
பிள்ளைகளுக்கு மார்க்க கல்வி கற்றுக் கொடுப்பதற்கு பள்ளிவாசல்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ஒரு பிரத்யேக ரீதி..
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தின்
ஆரம்ப காலங்களில் தீன் விஷயங்களை
நபித்தோழர்களுக்கு மஸ்ஜிதுந் நபவியில் வைத்துதான் சொல்லிக் கொடுத்தார்கள் எனும் வரலாறு நாம் அறிந்ததே.
அதைப் பின்பற்றி காலங்களாக கேரள பள்ளிவாசல்களில்
மாணவர்கள் தங்கியே கல்வி கற்றுக் கொள்ளும் நிலையை இன்றும் காணலாம்..
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பள்ளிவாசல் நிர்வாகம்
பார்த்து கொள்ளும்.
இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான
பள்ளி தர்ஸுகள் கேரளா முழுவதும் இருக்கின்றன..
காலத்தின் முன்னேற்றத்திற்கேற்ப
இப்போது இருகல்வி முறையும் பள்ளி தர்ஸுகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட பள்ளிதர்ஸுகள் குறிப்பாக
மலப்புறம் மாவட்டத்தில் ஏராளமாக உள்ளன.
நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பயின்று வரும் பள்ளிதர்ஸுகளும் இருக்கின்றன.
மலப்புறம் மாவட்டத்தில் மிகவும்
பிரபலமான ஊர்தான் பொன்னானி
அங்கேயும் ஒரு பள்ளிதர்ஸ் இருக்கிறது.
நூற்றுக்கணக்கான பிள்ளைகள்
ஓதி வருகிறார்கள்..
திருச்சூரை சேர்ந்த ஜஃபர் அஸ்ஹரி
எனும் ஒரு உஸ்தாத் அங்கே முதர்ரிஸாக
இருக்கிறார்.
மிகவும் சுறுசுறுப்பான மனிதர்.
சிறந்த சொற்பொழிவாளர்
தர்க்க கலையில் கைதேர்ந்தவர்
நாத்திகத்தின் கூர்மையான முனைகளை
உடைத்து எறிபவர்
வஹாபிஸத்தின் நச்சுக் கருத்துக்களை
வேரோடு சாய்ப்பவர்.
நவீன வாதிகளுடன் ஏராளமான கேள்வி பதில் நிகழ்ச்சி, விவாதங்களை நடத்தியவர்.
யாருக்கு முன்னாலும் தனது கருத்துக்களை கொள்கை கோட்பாடுகளை துணிந்து எடுத்து கூறுபவர்.
மலப்புறம் மாவட்டம் பொன்னானியில் வருடம் தோறும் பிரமாண்டமான முறையில் மீலாத் விழாக்களை நடத்தி வருபவர்.
சமீபத்தில் இவர் தனது பள்ளி தர்ஸில்
பயிலும் மாணவர்களுடன் சேர்ந்து
தமிழகத்திற்கு ஸியாரத்திற்கு வருகைத் தந்தார்..
வெண்ணிற ஆடை உடுத்த நூற்றுக்கணக்கான பிள்ளைகளுடன்
அவர் நடந்து சென்ற காட்சி பார்க்கவே
மெய்சிலிர்க்க வைத்தது.
ஸியாரத்தின் நாட்களில் ஒரு தினம்
காயல்பட்டினத்திற்கும் வருகைப் புரிந்தார்.
மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி, மேலும் அங்கே உள்ள பிரதான
பிரபல மகாமுகளுக்கும் ஸியாரத்திற்கு
சென்று இருந்தார்.
காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் பணியாற்றி வருகிற
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் மாநில தலைவர்
அல்ஹாபிழ் முஹம்மது அன்வரி
அவர்களையும் சந்தித்து பேசினார்.
மாநிலத்தில்
அமைப்பின் செயல்பாடுகள் குறித்து
அவருக்கு விளக்கப்பட்டது,
அனைத்தையும் கேட்டறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார், எல்லோருக்கும் வேண்டி
துஆச் செய்தார்.
ஸியாரத் முடிந்து நல்ல முறையில்
அவரை வழியனுப்பி வைத்தனர்.
வல்லோன் அல்லாஹ் அவரது தீன் சேவைகளை ஏற்று நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியம் உள்ள சிறந்த
வாழ்க்கையை வழங்கியருள்வானாக..
தகவல்:
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி...