பாலகிருஷ்ணனும் வஹாபியும் சந்தித்த போது

பாலகிருஷ்ணனும் வஹாபியும் சந்தித்த போது

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பாலகிருஷ்ணனும் வஹாபியும் சந்தித்த போது!!!.

ஹஜ் பயணத்திலிருந்து திரும்பி வந்த ஒரு வஹாபியும் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி வந்த பாலகிருஷ்ணனும் திருநெல்வேலி பஸ் நிலையத்தில் சந்தித்தனர்.

வஹாபி நண்பரின் ஹஜ் பயணம் மிகவும் நல்ல முறையில் அமைந்தது என்றும் எல்லாவித அமல்களையும் எளிதில் செய்ய முடிந்தது என்றும் அறிந்தபோது பாலகிருஷ்ணன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள மறக்கவில்லை.

பல்வேறு சேனல்களில் செய்தி மற்றும் சிறப்பு கவரேஜ் நிகழ்ச்சிகளில் ஹஜ் சடங்குகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டதை பார்த்த விபரத்தை பாலகிருஷ்ணன் வஹாபி நண்பரிடம் நினைவு கூர்ந்தார்.

உரையாடல் தொடர்ந்தது:

பாலகிருஷ்ணன்:

பாய்! டிவியில் ஹஜ் கர்மங்களைப் பார்த்தபோதுதான்
எங்கள் மதத்துக்கும் உங்கள் மதத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

வஹாபி: உங்களுக்கு அப்படி தோன்றுவதற்கு காரணம் என்ன..?

பாலகிருஷ்ணன்:

நாங்கள் எங்கள் கோவில் உள்ள கடவுள் சிலைகளை சுற்றுகிறோம்.நீங்கள் மக்காவிலுள்ள கஃபாவைச் சுற்றுகின்றீர்கள்.

நம்மிருவர் செயலிலும் உள்ள ஒற்றுமை பார்த்தீர்களா..?

வஹாபி:

பாலகிருஷ்ணன் அண்ணனுக்கு விஷயம் புரியவில்லை என்று நினைக்கிறேன்....

நாங்கள் ஏக தெய்வ விசுவாசிகள்...

அதாவது நாங்கள் வணங்கும்போது, ​​ ஒரே ஒரு கடவுளை மட்டுமே வணங்குகிறோம்.

பாலகிருஷ்ணன்:

அதெல்லாம் சரிதான்.

நாங்கள் எங்கள் சிலைகளுக்கு முன் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்கின்றோம்... கஃபாவுக்கு முன் கைகளை உயர்த்தி நீங்களும் ஜெபம் செய்கின்றீர்கள்.. பிரார்த்தனை அதுவே வணக்கம் என
உங்கள் தவ்ஹீது மத போதகர் தெருமுனைப் பிரச்சாரத்தில் கூறுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்...

வஹாபி:

பாலகிருஷ்ணன் அண்ணன் நான் சொன்னதைப் புரிந்து கொள்ளவில்லை.அதாவது நாங்கள் ஏகத்துவவாதிகள்.ஒரேயொரு கடவுளை மட்டும் வணங்குகின்றோம்..

பாலகிருஷ்ணன்:

அப்படியானால் ஏன் விக்ரகத்தை நிறுவி அதைச் சுற்றுகிறீர்கள்.
அதன் முன் நின்று கைகள் ஏந்தி ஜெபம் செய்கிறீர்கள்...?

வஹாபி:

விக்ரகமா..?
ஜெபமா?..நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

பாலகிருஷ்ணன்:

பாய் நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம்.

நாங்கள் டிவியில் பார்த்த விஷயத்தை முன்னர் கூறினேன் அல்லவா...

கறுப்பு நிற விக்ரகத்தை சுற்றி பெரிய கூட்டம் வலம் வருகிறது..
பயங்கரமான தள்ளுமுள்ளு ஏற்படுகிறது...

சிவ சிவா..
இது தானே விக்ரகம்.. இதுதானே ஜெபம்..

இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது..

நாங்கள் விக்ரகத்தை தொட ஒன்றும் செய்ய மாட்டோம்..

ஒரு ஓரமாக நின்று தொழுதுவிட்டு செல்வோம்.

ஆனால் உங்கள் ஆட்கள் அந்த கருப்பு விக்ரகத்தை முத்தமிட பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்படுத்துகிறார்கள்.

வஹாபி:

பாலகிருஷ்ணன் அண்ணா..!!

இந்த ஆலயமும், அந்த கருப்பு நிற கருங்கல்லும் அல்லாஹ்வின் படைப்புகள் மட்டுமே.

நாங்கள் அவற்றை வணங்குவதில்லை.

மாறாக, நாங்கள் ஏக இறைவனை மட்டுமே கடவுளாக ஏற்று அவனே மட்டுமே வணங்குகிறோம்.

பாலகிருஷ்ணன்:

நீங்கள் வணங்கவில்லை என்றால்.?

அந்த மக்களின் முகங்களில் என்ன ஒரு அதிபயங்கரமான பக்தி தழும்புகிறது.

அவர்கள் அந்த கல்லைச் சுற்றி வலம் வருகிற போதும், அந்த கல்லின் பக்கம் நெருங்கும்போது அவர்களின் முகங்களில் என்ன வகையான பக்தி ஒளிவீசுகிறது தெரியுமா..?

நாங்கள் எங்கள் கோவிலிலுள்ள விக்ரகங்களை வலம் வரும் போதும், கைகூப்பி பிரார்த்திக்கும் போதும் அது மட்டும் எவ்வாறு பலதெய்வ வணக்கமும் நீங்கள் செய்வது மட்டுமே ஏக தெய்வ வணக்கமாக இருக்க முடியும்...?

இந்த பாலகிருஷ்ணனுக்கு இதொன்றும் புரியல்ல பாய்..

வஹாபி:

அதாவது பாலகிருஷ்ணன் அண்ணா.

இந்த மசூதியும், கறுப்பு நிற கல் ஒன்றும் எங்களுக்கு கடவுள் இல்லை.

அவற்றை கடவுளின் படைப்புகளாகவே நாங்கள் பார்க்கிறோம்.

வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்கிறோம்..

அவங்க தர்ஹால சென்று அங்கே இருக்குறத வணங்குறாங்க ...

பாலகிருஷ்ணன்:;-
நீங்களும் அந்த கருப்பு கல்லதான் வணங்குகிறீர்கள்

வஹ்ஹாபி:;-
அது இறைவனின் சின்னம் அது ஒரு படைப்பு.. அதை வணங்குகிறோமோ இல்லையாண்ணு நாங்கதான் முடிவு பண்ண வேண்டியது எங்களுடைய நெஞ்சை நீ பிளந்தா பார்த்தாய்... எங்களுக்கு பார்ப்பதற்கு தர்ஹாவில் அவர்கள் வணங்குவது போலவே தெரிகிறது

பாலகிருஷ்ணன்:;-
தர்காவில் இருப்பது இறைவனின் அடிமை அது ஒரு படைப்பு அங்கு செல்பவர்கள் வணங்குகிறார்களா இல்லையா என்று ஸியாரத் செய்ய செல்பவர்கள் முடிவு பண்ண வேண்டியது அவரை வணங்குகிறார்களா இல்லையா என்று நீ நெஞ்சை பிளந்தா பார்த்தாய்.... உங்களைப் பார்க்க க ஃபத்துல்லா கறுப்பு கல்லை நீங்கள் வணங்குவது போன்றே எங்களுக்கு தெரிகிறது

வஹ்ஹாபி:;-
அவைக்கு முன்நின்று அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்தனை செய்கிறோம்.

பாலகிருஷ்ணன்:

அன்று தெருமுனையில் வைத்து உங்கள் தவ்ஹீத் போதகர் என்ன சொன்னார்?

யார் எப்போது வேண்டுமானாலும்,அல்லாஹ்வை எந்த இடைத்தரகரின் தேவையுமின்றி நேரிடையாக வணங்கலாம், பிரார்த்திக்கலாம்" என்று கூறினார்..ஆனால் இங்கு பிரார்த்திக்க ஏன் ஒரு திருசன்னதி?, ஒரு கல்..?

வஹாபி:

அது, பாலகிருஷ்ணன் அண்ணாச்சி..

அண்ணனுக்கு நான் சொன்னது புரியவில்லை என்று நினைக்கிறேன்.

பாலகிருஷ்ணன்:

இல்லை, எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை.

எனது நண்பர்கள் அப்துல்லா ஹாஜியும், காசிம் காக்காவும் ஏர்வாடி தர்காவுக்கு சென்றால் நீங்கள் சொல்வீர்கள் அவர்கள் கப்ர் வணங்கிகள் என்று.

அவர்களும் ஒரே கடவுளை மட்டுமே வணங்குகிறார்கள்.

பாதுஷா நாயகம் வெறும் அல்லாஹ்வின் படைப்பு மட்டுமே என்று தான் அவர்களும் கூறுகிறார்கள்.

வஹாபி:

பாலகிருஷ்ணன் அண்ணாச்சி தர்காக்களுக்குச் செல்வதும் கோயில்களுக்குச் செல்வதும் பலதெய்வ நம்பிக்கைகளாகும் .

ஆனால் கஃபாவைச்சுற்றி
வலம் வருவதும் அல்லது ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதும் பலதெய்வ நம்பிக்கை அல்ல.

நாங்கள் ஒரே கடவுளான அல்லாஹ்வை மட்டுமே வணங்குகிறோம்.

பாலகிருஷ்ணன்:

என்ன சொல்கிறீர்கள் பாய்...

நாங்கள் கோவிலில் என்ன செய்கிறோம் அதைத்தானே நீங்கள் மக்காவிலும், அவர்கள் தர்காவிலும் செய்கிறார்கள்...?

வஹாபி:

பாலகிருஷ்ணன் அண்ணாச்சி!!!

மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து விஷயங்களை தீர்மானிக்கக்கூடாது.

பாலகிருஷ்ணன்:

பிறகு எப்படி தீர்மானிக்கிறது..?

வஹாபி:

அவர்களின் நம்பிக்கைதான் அளவுகோல்.

பாலகிருஷ்ணன்:

ஏர்வாடி தர்கா செல்வோரின் நம்பிக்கை பார்க்காமல் தானே நீங்கள் தெருமுனையில் பிரசங்கிக்கிறீர்கள்.

கஃபாவும் ஹஜருல் அஸ்வதும் படைப்புகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

அவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.

ஏர்வாடி பாதுஷா நாயகம் இறைவனின் படைப்பு என்று கூறுகிறார்கள்.

அவர்களும் நீங்களும் ஒரே விசுவாசிகள் இல்லையா?

எங்களுக்கு எங்கள்
விக்ரகங்கள் கடவுள்.

ஆனால் அவர்களுக்குப் ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டு இருப்பவர் கடவுள் அல்ல.

மசூதியும் கஃபாவும்
உங்களுக்கு கடவுள் அல்ல.

அப்படியானால் ஏர்வாடி தர்கா செல்வோரை நீங்கள்
ஏன் குறை கூறுகிறீர்கள்..?

இந்த பாலகிருஷ்ணனுக்கு எதுவும் புரியவில்லை.

பாலகிருஷ்ணன் அண்ணனின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய வஹாபி "அண்ணா! பஸ் வருகிறது பின்னர் சந்திப்போம்:" என்று கூறி இடத்தைக் காலி செய்து காணாமல் போனார்...

குறிப்பு: எல்லாம் புரிந்து கொண்ட வஹாபிகள் ஷிர்க்கின் வியாபாரத்தை கொஞ்சம் நேரம் மாற்றிவிட்டு ஒரு புனர் சிந்தனைக்கு தயாராகட்டும்..

தகவல்:
M.சிராஜுத்தீன்அஹ்ஸனி.