இனி கொஞ்சம் ஆசுவாசம்
#இனி_கொஞ்சம்_ஆசுவாசம்....
அல்ஹம்துலில்லாஹ்..
காயல்பட்டினம்
மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில்
நானிலம் போற்றும் மஹ்பூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி
அவர்களின்
நினைவு நாள் பெருவிழாவின் இறுதி தினங்களில் குப்பாவில் வைத்து மௌலித் மஜ்லிஸ் மற்றும்
திக்ரு மஜ்லிஸ்
நடைபெறுவது வழக்கம்..
மஜ்லிஸில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும்,
ஏராளமான ஆஷிக்கீன்கள் பள்ளியில் நிறைந்து இருப்பதால் கடும் வெப்பமாக இருக்கும்.
கொஞ்சம் காற்று வந்தால் ஆசுவாசமாக இருக்குமே என்று ஒவ்வொருவரும் கருதுவர்..
பெரிய ஃபேன்கள் இருந்தாலும் அவை நம் சூட்டை தணிக்க உதவாது..
இந்த சங்கடத்தை போக்க மஹ்ழரா குப்பாவில்
பெரிய குளிரூட்டி
கருவிகளை நிறுவியுள்ளனர் கல்லூரி நிர்வாகம்
அல்ஹம்துலில்லாஹ்
நேற்று மாலை மஹ்ழரா
கல்லூரி முதல்வர் அஸ்ஸெய்யித் அப்துர்ரஹ்மான் பாகவி ஃபாழில் அஹ்ஸனி ஹஸ்ரத் அவர்கள் பிரார்த்தனை செய்து துவங்கி வைத்தார்கள்.
இந்த மகத்தான சேவைக்காக யாரெல்லாம் பொருளாதார உதவிகளை வழங்கினார்களோ அவர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் எல்லாவிதமான அபிவிருத்திகளையும் ஐஸ்வர்யங்களையும் பேரருளுகளையும் பொருளாதார செழிப்பையும் வழங்கி அருள்வானாக...