உலக அரபி மொழி தினம்
இஸ்லாமிய வரலாறு

உலக அரபி மொழி தினம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

.............அரபி_மொழி_தினம்

உலக_அளவில்_இந்தியாவுக்கு பெருமை_சேர்க்கும்_ஆலிம்.

டிசம்பர் _18. சர்வதேச அரபி மொழி தினம்.இந்நாளில் கவனிக்கப்பட வேண்டிய இந்திய அரபு மொழி அறிஞர் ஒருவர் உள்ளார்.

உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டு பதிப்பகங்கள் வெளியிட்ட ஐம்பது தலைசிறந்த அரபு நூற்களை எழுதிய அறிஞர் அவர்.

கேரள மாநிலம் மஞ்சேரிக்கு பக்கத்திலுள்ள பிலாக்கல் சுலைமான் பாத்திமா தம்பதியின் மகனாகப் பிறந்த
44 வயது கொண்ட அப்துல் பஸீர் ஸகாஃபி என்ற அறிஞர் தான் அவர்.

கோழிக்கோடு மர்கஸ் ஸகாஃபத்திஸ் ஸுன்னியா நாலேஜ் சிற்றியில் அமைந்துள்ள ஷரீஆ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் அப்துல் பஸீர் ஸகாஃபி.

அரபி மொழியில் கவிதைகளாகவும், உரைநடையாகவும் ஐம்பது நூற்களை இவர் எழுதியுள்ளார். இவற்றில் பல நூற்களை #எமன் எகிப்து, ஜோர்டான், குவைத் போன்ற அரபு நாடுகளின் பிரபலமான பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

"கவிதைகளின் மீது பற்றுதல் கொண்டது எனது குடும்ப பாரம்பரியம். அதனால் நான் சிறு வயதிலேயே கவிதைகள் எழுத முயற்சித்தேன்" என்று கூறுகிறார் அப்துல் பஸீர் ஸகாஃபி.

மஸ்ஜிதுகளில் நடைபெற்று வரும் பள்ளி தர்ஸில் தனது கல்வியைத் தொடங்கிய அவர், அப்போதிருந்து கவிதைகள் எழுத முயற்சித்தாலும் சொற்கள் சரளமாகத் தெரியாத காரணத்தால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அல்முன்ஜித் என்ற அரபு அகராதியின் பெரும் பகுதியை மனப்பாடம் செய்தார்.

வீடுகளுக்குச் சாப்பிடச் செல்லும் போது கூட சிறு சிறு குறிப்புகளை கைவசம் வைத்திருப்பார்.இவ்வாறு நேரத்தை அவர் பாழாக்கவில்லை.

1995_ல் மேற்படிப்பிற்காக கோழிக்கோடு மர்கஸுக்கு சென்றார்.இக்காலத்தில் #900 பக்கங்கள் கொண்ட சொற்களுக்கு மத்தியிலான வித்தியாசங்களை விவரிக்கும் "அல்ஃபர்கு_லுகவியா" என்ற நூலை எழுதினார்.

அப்துல் பஸீர் ஸகாஃபியின் எழுத்தார்வத்தையும், திறமையையும் புரிந்து கொண்ட மர்கஸ் கல்லூரியின் நிறுவனர் காந்தபுரம் அபூபக்கர்_பாகவி ஹழ்ரத் மென்மேலும் எழுதுவதற்கு உற்சாகமூட்டியதோடு பல்லாயிரக்கணக்கான நூற்கள் கொண்ட மர்கஸ்_நூலகத்தை நன்றாக பயன்படுத்தவும் தூண்டினார்.

மூன்றாண்டுகள் மர்கஸில் பயின்று முடிக்கின்றபோது அரபு மொழியில் அசாதாரண திறமை பெற்று விளங்கினார்.

பின்னர் நூற்களை எழுதி குவிக்க துவங்கினார்.

ஃபிக்ஹ் சட்டத்துறையின் வார்த்தைகளின் அகப்பொருளை விவரிக்கும் "தஸ்வீறுல்_மத்லப்"என்ற நூலை எமன் நாட்டின் ஒரு பிரபல பதிப்பகம் வெளியிட்டது.

யமன் நாட்டைச் சார்ந்த அறிஞர் அஸ்ஸெய்யித் அப்துர்ரஹ்மான்_மக்தி இந்நூலை மேலும் விரிவாக எழுதியுள்ளார்.

அதுப்போன்று இஸ்லாமிய ஃபிக்ஹ் சட்டத்துறையின் அகராதிப் பொருளை விவரிக்கும் "திராஸா_ஷஹிய்யா எனும் அற்புதமான நூலை ஜோர்டான் நாட்டின் முக்கியமான பதிப்பகங்களில் ஒன்றான நூறுல்_முபீன் எனும் பதிப்பகம் வெளியிட்டது.இந்நூல் உலகம் முழுவதும் பரவிய காரணத்தால் அப்துல் பஸீர் ஸகாஃபிக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் அழைப்புகள் வரத்துவங்கியது.

இந்த விஷயத்தில் நவீனகாலத்தில் எழுதப்பட்ட நூற்களில் இந்நூலே மிகச் சிறப்பு வாய்ந்தது என
கனடா முதல் பிலிப்பைன் வரையுள்ள அறிஞர்கள் சிலாகித்துரைத்தனர்.

குவைத்திலுள்ள
தாறுல்_ளியா என்ற பதிப்பகம் இஸ்லாமிய ஃபிக்ஹ் சட்டத்துறையில் நான்கு மத்ஹபுகளுடைய வெவ்வேறு பார்வைகளை விவரிக்கும் பஸீர் ஸகாஃபியின் நூலை வெளியிட்டது. விரைவில் இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவர உள்ளது.

இஸ்லாமிய ஞான சாஸ்திரத்தைக் குறித்து எழுதப்பட்ட ஹாத்திமத்து_தக்ரீப்" என்ற நூலை எகிப்தின்
"தாறுல் அஸாலா என்ற பதிப்பகம் வெளியிட்டது.

தனது பிரிய குருநாதர் சுல்தானுல் உலமா
A.P. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத்
அவர்களை குறித்து எழுதப்பட்ட
தீவானுல்_பஸரிய்யத்" என்ற கவிதை தொகுப்பு நூல் கேரளத்தில் வெளியிடப்பட்டது.

2005_முதல் மர்கஸ் ஷரீஆ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகின்ற பஸீர் ஸகாஃபியின் நூற்களை வாசித்த சவூதி அரேபிய அறிஞர் ஒருவர் அந்நூற்களை கல்வி நிலையங்களில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அடிக்கடி விடுத்த அழைப்பை ஏற்று 2017_ல் சவூதிக்கு சென்ற அவர் ஓராண்டு காலம் அங்கே சேவை செய்தார்.

அப்துல் அஸீஸ் தாரிமி,
நெல்லிகுத்து இஸ்மாயீல் முஸ்லியார் அவர்களின் மருமகன் அஹ்மத் தாரிமி, தொட்டுபோயில் அப்துர்ரஹ்மான் ஃபைஸி போன்ற அறிஞர்கள் பஸீர் ஸகாஃபியின் ஆரம்ப கால ஆசிரியர்களாவர்.

மர்கஸ் கல்லூரிக்கு அவர் வந்த பின் உலக அறிஞர்களுடன் தொடர்பு கொள்ளும் ஏராளமான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.A.P.அபூபக்கர் பாகவி ஹழ்ரத் ஸகாஃபிக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வதேச அறிஞர்கள் மர்கஸுக்கு வருகை தருகின்ற போது அவர்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்களை வழங்கினார்.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான பஸீர் ஸகாஃபி மர்கஸ் நாலேஜ் சிற்றியில் அமைந்துள்ள ஷரீஆ கல்லூரியின் முக்கியமான பேராசிரியர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.திறமையான அரபு மொழி எழுத்தாளர்களை உருவாக்கிட அவர் சிறப்பான சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்.

துருக்கி, குவைத்,
எகிப்து போன்ற நாடுகளில் உள்ள கல்வி நிலையங்களில் பணியாற்றிட தொடர்ந்து அழைப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன.எனினும் தன்னே உருவாக்கிய மர்கஸிலும், தனது சொந்த நாட்டிலும் பணிபுரிவதே தமக்கு விருப்பமானது என்று அவர் கூறுகிறார்.

அப்துல் பஸீர் ஸகாஃபியின்
மனைவி: உம்மு ஸல்மா
குழந்தைகள்: முஹம்மது லபீப், பாத்திமா ஜுமானா, முஹம்மது நஜீப்.

கருணையுள்ள அல்லாஹ் ஸகாஃபி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எல்லா நலவுகளையும் குறையாது வாரி வழங்குவானாக!.

ஆக்கம்.
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.
இயக்குனர்:மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
தொடர்புக்கு=7598769505