அப்துல்_ஹக்கீம்அஸ்ஹரி உஸ்தாத் அவர்கள் உருவாக்கியகல்விப்_புரட்சி.

அப்துல்_ஹக்கீம்அஸ்ஹரி உஸ்தாத் அவர்கள் உருவாக்கியகல்விப்_புரட்சி.

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அப்துல்_ஹக்கீம்
அஸ்ஹரி உஸ்தாத் அவர்கள் உருவாக்கிய
கல்விப்_புரட்சி.

அப்துல் ஹக்கீம் அஸ்ஹரி
(A.P. உஸ்தாத் அவர்களின் மகன்) நான்கு நாட்கள் பயணமாக உத்திரப்பிரதேசத்திற்கு சென்றார்கள்.

உ.பி. முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தை லட்சியமாகக் கொண்டு 12_ வருடங்களுக்கு முன்னர் உத்திரப்பிரதேசம் பிலிபித்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மர்கஸ் நிறுவிய குல்ஷானே பாத்திமா பெண்கள் கல்லூரியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்வி, கலாச்சார, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய ஒரு சமூகத்தை வளர்ச்சி பாதையில் வழிநடத்த மிகவும் சிறந்த வழி பெண்களுக்கு கல்வியும், அதிகாரமும் வழங்குவது மூலமே சாத்தியமாகும் என்பதை புரிந்து கொண்டதின் அடிப்படையில் இந்த நிறுவனத்தை இங்கே கட்டி எழுப்பினார்கள்.

2008_ல் நிறுவப்பட்ட இந்த கல்லூரியில் இன்று 600_ க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தங்குமிடம், உணவு, மற்றும் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனம்,
தையல் சென்டர், கணினி மையம், ஆசிரியர் பயிற்சி,குடும்பக்கல்வி, போன்ற பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்குவதுடன் புகாரியும், பைளாவியும் ஓதிய நூற்றுக்கணக்கான ஆலிமாக்கள் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி சேவை புரிகின்றனர்.
இந்த கேம்பஸில் நான் என் குடும்பத்துடன் இரண்டு ஆண்டுகள் சேவை செய்ததால் இந்த கல்லூரி செய்யும் சேவைகளை நேரடியாக அனுபவிக்க முடிந்தது.

வருடங்களுக்கு
முன்னர் தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஹக்கீம் உஸ்தாத் அவர்கள் நிறுவிய கல்வி, கலாச்சார மையங்கள் இன்று மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் பயணித்து கொண்டிருக்கும் அழகிய காட்சிகளை பார்க்க இயலும்.

வட இந்திய பயணங்கள் குறித்து சில கட்டங்களில் நான் வியந்தது உண்டு.

சாலை வழி பயணம் செய்வதற்கு மிகவும் கடினமான,
விமான நிலையத்திலிருந்தும், ரயில் நிலையத்திலிருந்தும் பல மணி நேரங்கள் பயணிக்க வேண்டிய மிகத் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு கேரளாவிலிருந்து ஒரு அறிஞர் 20_25 ஆண்டுகளுக்கு முன் எப்படி இங்கே வந்து இவ்வாறான மிகப்பெரிய கல்விப்புரட்சியை ஏற்படுத்தினார் என நினைத்து பார்க்கவே ஆச்சிரியமாக இருக்கிறது.

அப்பகுதிகளிலிருந்து ஏராளமான உருது மாணவர்கள் மர்கஸிற்கு பல ஆண்டுகளாக கல்வி கற்க வருகை புரிகின்றனர்.கரடு முரடான பாதையின் பயண அனுபவங்களை அவர்களிடம் கேட்டால் சொல்லி தருவார்கள்.

ஒரு முறை ஹக்கீம் உஸ்தாதுடன் புகழ் வாய்ந்த தர்காவான கிச்சாச்சோ ஷரீஃபில் சென்ற போது அங்குள்ள ஒரு ஸெய்யித் சொன்னார்.அவரது பெயர் ஸெய்யித் ஜாமி அஷ்ரஃபி அஸ்ஸகாஃபி..

என்னுடைய சின்ன வயதில் ஸ்தாபனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஹக்கீம் உஸ்தாத் அவர்கள் வருகை புரிந்து நடத்திய சொற்பொழிவை கேட்டேன். அச்சொற்பொழிவு என்னே மிகவும் கவர்ந்தது. மர்கஸிற்க்கு சென்று கல்வி கற்க ஆசைப்பட்டு 15_வருடங்களுக்கு பிறகு என்னுடைய 23_ வயதில்
ஸகாஃபி பட்டம் பெற்றேன்..

இன்று அவர் உ.பி. வக்ஃப் போர்ட் உறுப்பினராக பணியாற்றுகிறார்.
இப்படி எத்தனை எத்தனை கதைகள்

மர்கஸ் என்ற பெயரில் ஒரு தந்தையும், மகனும்,
அவர்களது சீடர்களும் உருவாக்கிய கல்வி புரட்சியினை ஒரு தடவையாவது நேரில் சென்று பார்வையிட இன்னும் எத்தனை காலம் நாம் பயணம் செய்ய வேண்டும்?.

ஷாஹித்_நிஸாமி.
பிலிபித்: உ.பி.
20/1/2021

தமிழில்..
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி