மாணவர்களின் கல்வி நலனுக்காக வித்தியாசமான வழிமுறைகளை கையாளும் மர்கஸ்

மாணவர்களின் கல்வி நலனுக்காக வித்தியாசமான வழிமுறைகளை கையாளும் மர்கஸ்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மர்கஸின் சார்பாக மொபைல் போனும்
ரீசார்ஜும் ஆன்லைன் வகுப்புக்காக
வித்தியாசமான
வழிமுறைகளை கடைபிடிக்கும் மர்கஸ்.

கோழிக்கோடு.

ஆன்லைன் வகுப்பிற்காக பல்வேறு வித்தியாசமான உத்திகளை தயார் செய்து வருகிறது மர்கஸ் ஷரீஆ கல்லூரி நிர்வாகம்.

மர்கஸில் கல்வி கற்கும் பல்வேறு மாநிலங்களிலுள்ள 3000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஷரீஆ ஷெக்ஷனில் வகுப்புகள் நடைபெறும்.

மர்கஸ் வலைதளத்தில் சிறப்பு தொழில் நுட்ப வசதிகளுடன் ஒவ்வொரு மாணவரும் வீட்டிலிருந்தே வகுப்பில் பங்கேற்க முடியும்.

ஆசிரியர்களுடன் நேரடியாக நேர்காணல் செய்யும் வாய்ப்பையும் வலைதளப்பக்கத்தில் தயார் செய்து வைத்துள்ளனர்.

மாணவர்கள் வகுப்பறையில் நுழையும் நேரமும் பிரிந்து செல்லும் நேரமும் திட்டவட்டமாக பதிவு செய்வதினால் ஹாஜர் கிடைக்கும்.

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வசதி வாய்ப்பு இல்லாத ஷரீஆ கல்லூரி மாணவர்களுக்கு மர்கஸ் கல்லூரி நிர்வாகம் சார்பாக TAB கள் வழங்கப்பட்டது.

அத்துடன் எல்லா மாணவர்களுக்கும் மாதாந்திரம் ரீசார்ஜ் செய்து கொடுப்பது,ஏழை எளிய மாணவர்களின் குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் வழங்குதல், கல்வி உபகரணங்கள் அளிப்பது போன்ற விஷயங்கள் இந்த மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று மர்கஸ் கல்லூரி நிர்வாக பெருமக்கள் தெரிவித்துள்ளனர்.

மர்கஸ் ஷரீஆ கல்லூரி உஸ்தாதுமார்களுக்கும் ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக லேப்டாப் இலவசமாக வழங்கப்படும்.

ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக நவீன வசதிகள் கொண்ட இரண்டு ஸ்டுடியோக்கள் மர்கஸில் செயல் பட்டு வருகிறது.

TAB வழங்கும் நிகழ்ச்சியில் இந்தியன் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் A.P. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் முன்னிலை வகித்தார். மர்கஸ் மேலாளர் C.முஹம்மது பைஸி தலைமை தாங்கினார்.

C.P.உபைதுல்லா ஸகாஃபி,அக்பர் பாதுஷா ஸகாஃபி,ஸெய்யித் முஹம்மது ஷிஹாப் ஸகாஃபி போன்றோர் கலந்து கொண்டனர்.

தகவல்.
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.