நீ ஆயிரம் பேரை இலவசமாக ஹஜ்ஜுக்கு அழைத்து செல்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த செயல் எது தெரியுமா..?
#நீ_ஆயிரம்_பேரை_இலவசமாக #ஹஜ்ஜுக்கு
#அழைத்து_செல்வதை விட #அல்லாஹ்வுக்கு_மிகவும்_பிடித்த_செயல்
#எது_தெரியுமா....?
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப்பெரிய வல்லுநர். ஒரே நேரத்தில் அவருடைய வகுப்பிலே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஹதீஸ் பாடம் பயில அமர்ந்திருப்பார்கள்.
ஒரு ஆண்டும் ஹஜ் மற்றும் நபிகளாரை ஸியாரத் செய்யவும் அடுத்த ஆண்டு அல்லாஹ்வின் பாதையில் போருக்காக செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறெ அந்த ஆண்டு ஹஜ் செய்ய முடிவெடுத்து, தம் தோழர்களோடு பயணம் செய்ய ஆயத்தமானார்கள்.
பயணம் செய்வதற்காக ஒரு வாகனத்தை வாங்க சந்தைக்கு வருகின்றார்கள். வழியில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரலி) அவர்கள் கண்ட காட்சி அவர்களின் இதயத்தை ரணமாக்கி, இரு விழிகளில் இருந்தும் கண்ணீரை வரவழைத்து விட்டது.
அங்கே ஒரு பெண்மணி செத்துப் போன ஒரு வாத்து, அல்லது கோழியின் இறக்கைகளை உறித்துக் கொண்டும், அதன் இறைச்சியை எடுத்து தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.
அப்பெண்மணியின் அருகே சென்ற இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அப்பெண்மனியை நோக்கி "ஓ அல்லாஹ்வின் அடிமையே! என்ன காரியம் செய்து கொண்டிருக்கின்றாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு, அப்பெண்மணி "படைத்தவனுக்கும், படைக்கப்பட்ட ஒரு படைப்புக்கும் தொடர்பான விவகாரம் இதில் தலையிட உமக்கு அதிகாரமில்லை, உம் வேலையைப் பார்த்து விட்டுச் செல்லும்!" என்றார்.
அதற்கு, அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் "அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்கிறேன்! உம்மைப் பற்றி எமக்கு நீங்கள் அவசியம் சொல்ல வேண்டும்" என்றார்கள்.
அப்பெண்மணி வாயைத் திறந்து வார்த்தைகளைக் கொட்டும் முன்பாக, அவர்களின் கண்கள் கண்ணீரை கொண்டு வந்து கொட்டியது.
தழுதழுத்த குரலில் அப்பெண்மணி "அல்லாஹ் என் போன்ற ஒன்றுமில்லாத ஏழைகளுக்கு இந்த செத்துப்போன பிராணிகளை ஹலாலாக ஆக்கியிருக்கின்றான்.
நானோ கணவன் இல்லாத விதவைப்பெண், அங்கே என் வீட்டிலோ என்னுடைய நான்கு பெண்மக்களும் உண்ண உணவில்லாமல் பசியால் குடல் வெந்து துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நானும், என்னைச் சுற்றியிருக்கிற மனிதர்கள் அனைவரிடத்திலும் உதவி கேட்டு மன்றாடி விட்டேன். ஒருவரின் இதயத்தில் கூட இரக்கம் சுரக்கவில்லையே!?"
ஏதோ, அல்லாஹ்வாவது எங்களின் இந்த பரிதாப நிலை கண்டு, அருள் புரிந்து இந்த செத்தப் பிராணியை தந்திருக்கின்றான்.
ஆனால், நீரோ இப்போது என்னிடம் வந்து தர்க்கித்துக் கொண்டிருக்கின்றீர்" என்று கூறினாள்.
இதைக் கேட்டதும் தான் தாமதம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.
ஒரு வழியாக, நிதானித்து விட்டு தம் கையிலிருந்த பணப்பையை அந்தப் பெண்மணியிடத்திலே கொடுத்து விட்டு உடனடியாக திரும்பி விட்டார்கள்.
அப்பெண்மணியோ நன்றிப் பெருக்கோடும், மகிழ்ச்சியோடும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் செல்லும் திசை நோக்கி அவர்களின் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நண்பர்கள் குழு நீண்ட நேரமாகியும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் வராததால் வழியில் வந்து சேர்ந்து கொள்வார் எனக் கருதி ஹஜ்ஜுக்கு புறப்பட்டுச் சென்று விட்டனர்.
ஹஜ்ஜுடைய காலம் முடிந்து ஹஜ்ஜுக்குச் சென்ற அவர்களின் நண்பர்கள் ஊர் திரும்பினர்.
வீட்டில் இருந்த அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களைச் சந்தித்த நண்பர்கள் ஒவ்வொருவரும் "அப்துல்லாஹ்வே! அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்! உம்முடைய வழிகாட்டலால் தான் நாங்கள் எங்களின் ஹஜ்ஜை மிக எளிமையாக அமைத்துக் கொள்ள முடிந்தது.
கஅபாவில் வைத்து நீர் எங்களோடு நடந்து கொண்ட அந்த அழகிய பண்பாடுகள் இருக்கிறதே இப்போது நாங்கள் நினைத்தாலும் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.
அல்லாஹ் உமக்கு வழங்கிய கல்வியறிவைக் கொண்டு எங்களின் எல்லோருடைய ஹஜ்ஜையும் மிகச் சரியாக அமைத்துக் கொள்ள உதவி புரிந்தீர்!
அதே நேரத்தில், ஹஜ்ஜுடைய காலத்தில் நீர் உம்முடைய ரப்பை வணங்கிய அந்த முறை, வணக்க வழிபாட்டில் காட்டிய ஈடுபாடு, ஹஜ்ஜுடைய கிரியைகளில் நீர் செலுத்திய கவனத்தைப் போன்று வேறெவரும் செலுத்தியதை நாங்கள் பார்த்ததில்லை.
மொத்தத்தில் உம்மைப் போன்று ஓர் சிறந்த மனிதரை இந்த உலகத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை!" என்று கூறி நன்றி சொல்லிக் கொண்டனர்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? நான் எங்கே ஹஜ்ஜுக்கு சென்றேன்? வந்தார்கள், வாழ்த்தினார்கள், நன்றி கூறினார்கள் என்ன நடக்கிறது?" என்று தமக்குத் தாமே பேசிக் கொண்டார்கள்.
அன்றைய இரவு கனவில் பெருமானார் {ஸல்} அவர்களைக் கனவில் காணும் அரும்பாக்கியத்தை, பெரும்பேற்றை பெற்றார்கள் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள்.
கனவில் வந்த பெருமானார் {ஸல்} அவர்கள் "அப்துல்லாஹ்வே உமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்! நான் யார் என்று நீர் அறிவீரா? நான் தான் முஹம்மது {ஸல்} இந்த உலகத்தில் நீர் நேசிக்கின்ற, நாளை மறுமையில் உமக்கு பரிந்துரை செய்யவிருக்கின்ற உம்முடைய நபி!
ஆரம்பமாக, என் உம்மத்தினரின் சார்பாக உமக்கு அல்லாஹ் நல்ல நலவுகளைத் தர வேண்டுமென நான் துஆ செய்கிறேன்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களே! நீர் ஓர் ஆதரவற்ற குடும்பத்திற்கு சந்தோஷத்தை வழங்கியது போன்று அல்லாஹ் உமக்கும் சந்தோஷத்தை வழங்குவான்! நீர் அவர்களின் நிலையைக் கண்டு, அவர்களுக்கு உதவியதை மறைத்தது போன்று அல்லாஹ் நாளை மறுமையில் உம்முடைய குறைகளையும் மறைப்பான்!
நீர் செய்த காரியம் அல்லாஹ்வை மகிழ்ச்சியில் அதன் பலனாக அல்லாஹ் உம்முடைய தோற்றத்தில் ஒரு வானவரை அனுப்பி, உமக்குப் பகரமாக ஹஜ் கிரியைகளைச் செய்ய வைத்தான்.
மேலும், நீர் ஒரு முஸ்லிமின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, தவறான பாதையில் செல்ல இருந்த ஒரு முஸ்லின் குடும்பத்தை நேர்வழியின் பால் திருப்பி விட்டதால் அல்லாஹ் உமக்கு எழுபது ஹஜ் செய்த நன்மையை சன்மானமாக வழங்கி கௌரவிக்கின்றான்!” என்று கூறினார்கள்.
( நூல்: அல் பிதாயா வந் நிஹாயா லி இமாமி இப்னு கஸீர், பாகம்:13, பக்கம்:611 )