கேரள முஸ்லிம் ஜமாஅத் சார்பிலான கேரள சுற்றுப்பயணம்
✍️ பேரோடு அப்துர்ரஹ்மான் ஸகாஃபி எழுதுகிறார்கள....
கேரள முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பிலான கேரள சுற்றுப்பயணம் ஷெய்குனா சுல்தானுல் உலமா ஏபி உஸ்தாத் அவர்கள் தலைமையில் தொடங்குகிறது.
கேரள சுற்றுப்பயணத்தின் கருப்பொருள் "மனிதர்களுடன்". மனிதநேயக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது...
இந்த காலகட்டத்தில்
மனிதர்கள் தங்களுக்குள் சுயமாகவே சுருங்கி கொள்ளும் சூழ்நிலையில் பல மனிதர்கள் ஒன்றுகூடுவதன் அழகை இந்த கருப்பொருள் முக்கிய மையமாகக் கொண்டுள்ளது.
படைப்பாளன் மனிதனை கௌரவித்தி உள்ளான்.
இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து வகையான காரியங்களிலும் தரமான தேவைகளை நிறைவேற்றும் வசதியை அவன் வழங்கியுள்ளான்.
அது மட்டுமல்லாமல்,
படைப்பாளன் மனிதர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் வழங்குவதன் மூலம் படைப்பாளனின் பிரதிநிதிகளாக மனிதர்களை (கலீஃபாக்கள்) நியமித்துள்ளான்.
இந்தப் பணி மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பொறுப்பு.
இந்தப் பணியை நாம் நமக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் ஒன்றாக சேர்ந்து நிற்பது மூலமும் நிறைவேற்ற வேண்டும்.
மனித சமூகத்தன்மை சாத்தியமாகுவது ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதின் மூலமாகும்.
மதம்,இனம் ,நாடு, மொழி மற்றும் நிறம் உட்பட நாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டிருந்தாலும், மனித ஒற்றுமை இருக்க வேண்டும்.
ஒரு நிலையான உலகத்திற்காக நாம் ஒன்று சேர வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட நமது சமூக வளர்ச்சிக்குத் தேவையான அனைத்திலும் நாம் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும்.
பரஸ்பர ஆதரவும் ஒத்துழைப்பும் தான் நமது பாரம்பரியம், மதச்சார்பின்மை இந்திய மக்களின் அழகு, சகவாழ்வு நமது பலம், அவைகளை கெடுக்கும் முயற்சிகளை நாம் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும்.
முறியடிக்க வேண்டும்
மனிதகுலத்திற்கான சமூக அர்ப்பணிப்பைப் பேணுவதே நமது பாரம்பரியம்.
அதுவே பண்டைய காலங்களிலிருந்து நமது கலாச்சார பெருமை. தீமைக்கு எதிரான தார்மீக எதிர்ப்பு தொடர்ந்து தீவிரமாக இருக்கும்போது மட்டுமே நன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியும். நல்லது இருக்கும்போது மட்டுமே நாம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். அதற்கு ஒன்றாக சமூகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வோம். மேலும் மனிதாபிமானம் கொண்டவர்களாக மாற நாம் ஒன்றாக நிற்போம். இதற்காகவே இந்தப் பயணம்...
#மனிதர்களுடன்
#கேரள முஸ்லிம் ஜமாஅத்
#ஏபி ஹஸ்ரத்
கேரளப் பயணம்