வஸீலா ஓர் ஆய்வு

வஸீலா ஓர் ஆய்வு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

...........#வஸீலா_ஓர்_ஆய்வு..........

இன்று போலி தவ்ஹீத் வாதிகளால் அதிகமாக விவாதிக்கப்படும், விமர்சிக்கப்படும் விஷயங்களில் வஸீலாவும் ஒன்று.

வஸீலா தேடும் முஸ்லிம்களை முஷ்ரிகுகள் என்றும், கப்ரு வணங்கிகள் என்றும் கூறுகின்றனர் போலி ஏகத்துவ வாதிகள்.

ஏக இறைவன் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரியவன் என்று நம்பிக்கை கொள்தல் தவ்ஹீத். வணக்கத்திற்குரியவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு பலர் உண்டு என்று நம்புதல் ஷிர்க். தவ்ஹீத்_ ஷிர்கின் சுருக்கம் இது.

:வஸீலா தேடும் முஸ்லிம் யாரிடம் வஸீலா தேடுகிறாரோ அவரை வணக்கத்திற்குரிய இறைவனாக ஒரு போதும் நம்புவதில்லை.

: அவரை அல்லாஹ்வின் அருள்பெற்ற நல்லடியாராக மட்டுமே வஸீலா தேடுபவர் நம்புகிறார்.

: வஸீலா தேடப்படுபவருக்கு சுயமான அதிகாரங்களும், ஆற்றல்களும் இருப்பதாக வஸீலா தேடுபவர் நம்புவதில்லை.

: எல்லா வகையான ஆற்றல்களும், அல்லாஹ்வால் வழங்கப்படுபவை என்று வஸீலா தேடுபவர்கள் நம்புகின்றனர்.

#வஸீலாவின்_வகைகள்.

அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒன்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்கு வஸீலா என்று சொல்லப்படும்.

1 : அல்லாஹ்வின் குணங்களை _ ஸிபத்துகளை எடுத்துச் சொல்லி பிரார்த்தித்தல்.

உதாரணமாக " ரஹ்மானும், ரஹீமும் _ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய என் இரட்சகா! எனது தேவைகளை நிறைவேற்றித் தருவாயாக! என்று பிரார்த்தித்தல்.

2 : நற்செயல்களை முன்வைத்து பிரார்த்தித்தல்.

உதாரணமாக: " யா அல்லாஹ் நான் தொழுத சுன்னத்தான தொழுகையின் பொருட்டால், அல்லது நான் செய்த இன்ன நற்செயலின் பொருட்டால் எனது ஹாஜத்துக்களை நிறைவேற்றுவாயாக! என்று பிரார்த்தித்தல்.

3 : நன்மக்கள் வாழும் இடங்களில்
நின்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்.

4 : ஸாலிஹானவர்களை _ இறைநேசர்களை முன்நிறுத்தி பிரார்த்தித்தல்.

உதாரணமாக: " யா அல்லாஹ் நபி (ﷺ) அவர்களின் பொருட்டால் எனது சிரமங்களை அகற்றுவாயாக! என்று பிரார்த்தித்தல்.

மேற்சொன்ன எல்லா நிலைகளுக்கும் ஷரீஅத் அனுமதி வழங்கியுள்ளது.

இவற்றில் அல்லாஹ்வின் ஸிபத்துகளை எடுத்துக் கூறி பிரார்த்தனை செய்வதில் போலி ஏகத்துவ வாதிகளுக்கு கருத்து வேற்றுமை இருக்க முடியாது.

1 : நற் செயல்களை வஸீலாவாக முன் வைத்து பிரார்த்தித்தல்.

தாம் செய்த நற்செயல்களை முன்வைத்து பிரார்த்தித்து அடைபட்டிருந்த குகையிலிருந்து தப்பித்த மூவரின் சரித்திரத்தை ஸஹீஹுல் முஸ்லிம் பதிவு செய்துள்ளது.

*عن عبد الله بن عمر -رضي الله عنهما- عن النبي صلى الله عليه وسلم قال: "بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَمْشُونَ، أَخَذَهُمُ المَطَرُ، فَأَوَوْا إلى غَارٍ فِي جَبَلٍ، فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الجَبَلِ، فَانْطَبَقَتْ عَلَيْهِمْ. فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: انْظُرُوا أَعْمَالاً عَمِلْتُمُوهَا صَالِحَةً لِلَّهِ، فَادْعُوا اللَّهَ بِهَا لَعَلَّهُ يُفَرِّجُهَا عَنْكُمْ. قَالَ أَحَدُهُمْ: اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَلِي صِبْيَةٌ صِغَارٌ، كُنْتُ أَرْعَى عَلَيْهِمْ، فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ حَلَبْتُ، فَبَدَأْتُ بِوَالِدَيَّ أَسْقِيهِمَا قَبْلَ بَنِيَّ، وَإِنِّي اسْتَأْخَرْتُ ذَاتَ يَوْمٍ، فَلَمْ آتِ حَتَّى أَمْسَيْتُ، فَوَجَدْتُهُمَا نَامَا، فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ، فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا، وَأَكْرَهُ أَنْ أَسْقِيَ الصِّبْيَةَ، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَيَّ حَتَّى طَلَعَ الفَجْرُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُهُ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ لَنَا فَرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ. فَفَرَجَ اللَّهُ، فَرَأَوُا السَّمَاءَ. وَقَالَ الآخَرُ: اللَّهُمَّ إِنَّهَا كَانَتْ لِي بِنْتُ عَمٍّ أَحْبَبْتُهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ، فَطَلَبْتُ مِنْهَا، فَأَبَتْ عَلَيَّ حَتَّى أَتَيْتُهَا بِمِائَةِ دِينَارٍ، فَبَغَيْتُ حَتَّى جَمَعْتُهَا، فَلَمَّا وَقَعْتُ بَيْنَ رِجْلَيْهَا، قَالَتْ: يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفْتَحِ الخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ. فَقُمْتُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُهُ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا فَرْجَةً. فَفَرَجَ. وَقَالَ الثَّالِثُ: اللَّهُمَّ إِنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ، فَلَمَّا قَضَى عَمَلَهُ، قَالَ: أَعْطِنِي حَقِّي. فَعَرَضْتُ عَلَيْهِ، فَرَغِبَ عَنْهُ، فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا، فَجَاءَنِي فَقَالَ: اتَّقِ اللَّهَ. فَقُلْتُ: اذْهَبْ إلى ذَلِكَ البَقَرِ وَرُعَاتِهَا، فَخُذْ. فَقَالَ: اتَّقِ اللَّهَ وَلاَ تَسْتَهْزِئْ بِي. فَقُلْتُ: إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ، فَخُذْ. فَأَخَذَهُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ مَا بَقِيَ. فَفَرَجَ اللَّهُ"[1]. وفي رواية: "فخرجوا يمشون"*

2 : நன்மக்கள் வாழும் இடங்களில் நின்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்.

நன்மக்கள் வாழுமிடங்களும்,அவர்களோடு சம்பந்தப்பட்ட பொருட்களும் பரக்கத்துப் பொருந்தியவை என்பதற்கும், அவர்கள் வாழுமிடங்களுக்குச் சென்று துஆச் செய்தால் அந்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதற்கும் ஆதாரத்தை அல்குர்ஆனில் காணலாம்.

மர்யம் பீவி அம்மையார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்த நபியுல்லாஹ் ஜகரிய்யா (அலை) அவர்கள் அங்கே சுவனத்து கனிவகைகள் உணவாக வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அந்த இடம் பரக்கத் பொருந்தியது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

தமக்கொரு மகவு இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நபியுல்லா ஜகரிய்யா (அலை) அவர்கள் பரக்கத் பொருந்திய அந்த இடத்தில் நின்று தனக்கொரு மகவைத் தர துஆச் செய்கிறார்கள்.

உடனடியாக அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் நபியுல்லாஹ் யஹ்யா (அலை) அவர்களை மகனாகத் தந்திருக்கின்றேன். என்ற நற்செய்தியை நபியுல்லாஹ் ஜகரிய்யா (அலை) அவர்களுக்கு வஹீயாக அறிவித்தான்.

அல் குர்ஆனின் ஸுறத் ஆலுஇம்ரான் (37/40) வசனங்கள் இவ்வரலாற்றைச் சொல்கிறது.

3 : நபிமார்களை இறைநேசர்களை முன்நிறுத்தி பிரார்த்தித்தல்.

மனித சமுதாயத்தில் மேன்மை மிக்கவர்கள் நபிமார்கள், ரசூல்மார்கள். அதிலும் குறிப்பாக பெருமானார் (ﷺ) அவர்கள். அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கத்தை பெற்றவர்கள்.எந்நேரமும் ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தும் கூட வஸீலா தேட வேண்டிய அவசியம் அவர்களுக்கு அறவே இல்லை என்ற நிலையிலும் கூட அம்மக்களுக்கு கற்று கொடுப்பதற்காக பிறரை முன்வைத்து வஸீலா தேடி இருக்கிறார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

அலி (ரலி) அவர்களின் தாயார் ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) இறந்த போது யா அல்லாஹ்! உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முந்தைய நபிமார்களின் பொருட்பாலும் எனது தாயார் அவர்களுக்கு மன்னிப்பாயாக! என பெருமானார் (ﷺ) அவர்கள் துஆ செய்தார்கள்.

மஹதி அஸ்மாஉ (ரலி) அவர்கள் ஒரு தடவை தான் அனுபவிக்கிற வேதனையை பற்றி பெருமானாரிடத்தில் சொன்னார்கள். அப்போது நபி (ﷺ) அவர்கள் சொன்னார்கள்.

"நீ உன் கையை வேதனையுள்ள இடத்தில் வைத்து கொள் பிறகு " அல்லாஹ்வின் நாமத்தில் அல்லாஹ்வே! உன் சந்நிதியில் உயர் பதவி கொண்ட நபியின் பிரார்த்தனையைக் கொண்டு நான் அனுபவிக்கும் வேதனையின் ஷர்ரை அகற்றுவாயாக என்று மூன்று தடவை சொல் என்றார்கள்.

ஆதாரம்: இப்னு அஸாக்கீர்.

நபி (ﷺ) அவர்கள் கூறுகிறார்கள்.

உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தைச் சார்ந்த மந்திரவாதி ஒருவன் தள்ளாத வயதடைந்தபோது, அரசனிடம் " எனக்கு வயது முதிர்ந்து விட்டது.ஒரு சிறுவனை என்னிடம் அனுப்பி வை. அவனுக்கு மந்திர வாதம் கற்றுக் கொடுக்கிறேன். என்று கூற சிறுவர் ஒருவரை மந்திர வாதியிடம் அனுப்பி வைத்தான் அரசன்.

அச்சிறுவர் மந்திரவாதியிடம் செல்லும் வழியில் வாழ்ந்து வந்த துறவி ஒருவரிடம் சென்று அமர்வார்.துறவி சொல்லும் விஷயங்களை கேட்டுவிட்டு மந்திரவாதம் படிக்க செல்வார். இதை அறிந்து மந்திரவாதி சிறுவரை துன்புறுத்துவான். எனினும் சிறுவர் தொடர்ந்து துறவியை சந்தித்து வந்தார்.

ஒரு நாள் சிறுவர் நடந்து செல்கிற போது ஜனங்கள் நடமாட முடியாமல் பெரிய மிருகமொன்று வழியை அடைத்து கொண்டு நின்றது.

துறவி சிறந்தவரா? அல்லது மந்திரவாதி சிறந்தவனா? என்பதை இன்று தெரிந்து கொள்வேன். என்று கூறிக் கொண்டு கல் ஒன்றை எடுத்து " இறைவா! மந்திரவாதியின் விஷயத்தை விட துறவியின் விஷயம் உனக்கு விருப்பமானதாக இருந்தால் ஜனங்கள் நடந்து செல்ல ஏதுவான வகையில் இந்த மிருகத்தைக் கொன்று விடு" என்று கூறி அம்மிருகத்தின் மீது கல் எறிந்தார். மிருகம் இறந்தது. ஜனங்கள் நடந்து சென்றனர்.

சிறுவர் துறவியிடம் வந்து நடந்த விஷயத்தை சொன்ன போது
" மகனே! என்னைவிட நீயே உயர்ந்தவன் என்றார் துறவி"
ஆதாரம்: முஸ்லிம், திர்முதி, அஹ்மத்.

பனூ இஸ்ராயீல் சமுதாயச் சிறுவர் தன்னுடைய குருவும், இறைநேசருமான துறவியை வஸீலாவாக்கி வைத்து துஆ செய்தார். அதன் காரணமாக அவரது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்..

*الغلام والراهب حدّث النبيّ -عليه الصلاة والسلام- أصحابه عن قصّة ملكٍ من ملوك الزمن الغابر، وهو ملك كانَ لهُ ساحرٌ مُقرَّب، فلمّا تقدَّم العمر بهذا الساحر، طلب من المَلك أن يبعَثَ إليه غُلاماً؛ حتى يُعلِّمه السحر، فأرسل إليه الملك غلاماً ليُعلِّمه، وكان هذا الغلام يذهب باستمرار إلى الساحر، وفي أحد الأيام صادف في طريقه إلى الساحر راهباً، فاستمع إلى كلامه، وأُعجِبَ به، إلّا أنّ الساحر كان يضربه؛ بسبب تَأَخُّره عنه، فشكى الغلام ذلك الأمر إلى الراهب الذي أرشده إلى أن يقول للساحر عندما يسأله: "إنّما حبسَني أهلي"، وإذا سأله أهله يقول: "إنّما حبسَني الساحر"، ويوماً ما رأى الغلام في طريقه دابَّة عظيمةً تقطع على الناس طريقهم، فقال في نفسه: "اليوم أعرف الساحر أفضل عند الله أم الراهب"، فقال: "اللهمّ إن كان شأن الراهب عندك أفضل من الساحر فاقتل هذه الدابّة بحجري"، ثمّ أمسَك حجراً، ورمى به الدابّة، فقُتِلَت، فأدرك أنّ أمر الراهب أفضل عند الله من أمر الساحر، ثمّ ذهب إلى الراهب وحدَّثَهُ بما حصل له، فأخبره الراهب بأنّ شأنه سيكون عظيماً، وأنّه سوف يُبتَلى في حياته، وطلب منه أن لا يَدُلَّ عليه إذا تَعرّضَ للابتلاء.[٤]*

இதுபோன்ற ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை பார்க்க முடியும். விரிவஞ்சி முடித்து கொள்கின்றேன்.

நல்லடியார்களின் பொருட்டால் அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து சுவனத்தில் நுழைய செய்து அருள்பாலிப்பானாக! ஆமீன்....

ஆக்கம்.
அல்ஹாபிழ்: M.#முஹம்மது_அன்வரி.

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி........