வாருங்கள் விவசாயம் செய்வோம்

வாருங்கள் விவசாயம் செய்வோம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

வாருங்கள்_விவசாயம்
செய்வோம்.*

நமது முன்னோர்கள் வாழ்க்கையில் விவசாயம் என்பது ஒரு வாழ்வியலாக இருந்தது, ஆனால் தற்போது அது வாழ்வாதாரமாக இருந்தாலும், வியாபாரம் எனும் கண்ணோட்டத்தில், பெரிய நிறுவனங்களின் கைகளில் தள்ளப்பட்டுள்ளது.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தையும் விவசாயத்தின் அடிப்படையில் பெறவேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி 'சேற்றில் கால்வைத்தால் தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்'. 'தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு' என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார்.

ஆனால், இன்று, விவசாயத்தின் நிலை என்ன?

விவசாயத்தோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள் நம் முந்தைய தலைமுறையினர். விவசாய பெருமக்கள் நிலத்தோடு மல்லுக்கட்டினர். 'எரு (இயற்கை உரம்) செஞ்சது மாதிரி, இனத்தான்கூட செய்ய மாட்டான்' என்று அதன்மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால்தான், உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். அன்று இஷ்டப்பட்டு விவசாயம் செய்தனர். வளமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். இன்று கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, மனஅழுத்தத்துடன் வாழ்கின்றனர். நமது முன்னோர்களின் வாழ்க்கையில், விவசாயம் என்பது ஒரு வாழ்வியலாக இருந்தது, ஆனால், தற்போது, அது வாழ்வாதாரமாக இருந்தாலும், வியாபாரம் எனும் கண்ணோட்டத்தில், பெரிய நிறுவனங்களின் கைகளில் தள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள், மக்களின் பசியை ஆற்றக்கூடியவர்கள், அவர்கள் யாரிடமும் அவர்களைத் தாழ்த்திக்கொள்ளக் கூடாது. விவசாயிகளின் கை எப்போதும் உயர்ந்து இருக்கவேண்டும். விவசாயி என்ற பெருமிதம் வேண்டும்.

'உழவன் கணக்குப் பார்த்தால், உழக்குக்கூட மிஞ்சாது' இது பழமொழி. 'உழவன் கணக்குப் பார்த்தால், உலகத்து உயிர்கள் (மனிதன்) ஒன்றுகூட மிஞ்சாது' என்பது புதுமொழி. கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள், தனது புதுக்கவிதையில், விவசாய பெருமக்களைப் பற்றி,

'அன்று நஞ்சை உண்டு,
சாகுபடி ஆனது.*

இன்று, நஞ்சை உண்டு,சாகும்படி ஆனது' என, வேதனையுடன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

#இஸ்லாமும்_விவசாயமும்..

விவாசயம் செய்வதை இஸ்லாமிய மார்க்கம் கண்ணியப்படுத்திய அளவுக்கு வேறு எந்த மதமும் கண்ணியப்படுத்தவில்லை.

நாயகம் (ﷺ) அவர்கள் சொன்னார்கள்.

*يقول رسول الله (صلى الله عليه واله) : (ان قامت الساعة وفي يد احدكم فسيلة، فان استطاع الا يقوم حتى يغرسها فليغرسها*

இறுதி நாள் நெருங்கிய வேளையிலும் உங்கள் கரத்தில் ஒரு செடி இருந்தால் உங்களால் முடிந்த அளவுக்கு அதை பூமியில் நட்டுவிடுங்கள்.

*இறுதி நாள் வந்தால் மனிதனின் சிந்தனைகள் வேறு பல காரியங்களில் ஓட்டம் பிடிக்கும் ஆனால் அந்த நேரத்தில் கூட நாயகம் (ﷺ) அவர்கள் செடியை நட சொல்கிறார்கள் என்றால் இஸ்லாம் விவசாயத்திற்கு எவ்வளவு பெரிய முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நம்மால் உணர முடிகின்றது.*

*வேறு ஒரு ஹதீஸில் இவ்வாறு பார்க்க முடியும்.*

*ويقول ايضا : (من كانت له ارض فليزرعها فان لم يزرعها فليزرعها اخاه)*

*ஒருவனுக்கு பூமி இருந்தால் அவன் அதில் விவசாயம் செய்து கொள்ளட்டும்.இனி அவனால் விவசாயம் செய்ய இயலவில்லை எனில் விவசாயம் செய்யும் ஒருவருக்கு அந்த பூமியை வழங்கட்டும்.*

*இந்த ஹதீஸின் உள்ரங்க அர்த்தத்தை புரிந்து கொண்டு சஹாபாக்கள் செயல்பட்டார்கள்.*

*மனத்தூய்மையோடு,அல்லாஹ்வின் நன்மையை நாடி ஸஹாபாக்கள் தங்கள் வாழ்வில் இதை நடைமுறைப் படுத்தினார்கள். பூமியை அழகிய முறையில் பராமரித்தார்கள், மனித வாழ்வின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொலை நோக்கு பார்வையுடன் நடந்து கொண்டார்கள்.*

*فقد غرس الصحابي ابو الدرداء شجرة جوز، وهو شيخ طاعن في السن، فساله احدهم : أتغرس هذه الجوزة وانت شيخ كبير وهي لا تثمر الا بعد كذا وكذا من السنين؟ فأجابه ابو الدرداء : وماذا عليّ ان يكون لي ثوابها ولغيري ثمرتها؟.*

*அபு தர்த்தாஃ எனும் நபித்தோழர் ஒரு தென்னை மரத்தை நட்டார்கள்.அவர்களிடம் ஒருவர் கேட்டார்.உங்களுக்கு அதிகம் வயதாகிவிட்டது. இந்த மரம் வளர்ந்து வர வருடங்கள் பிடிக்குமே.அந்நேரம் அபுத் தர்த்தாஃ அந்த மனிதருக்கு இவ்வாறு பதிலளித்தார்கள்.*

*இந்த மரத்தை நட்டதற்குரிய கூலியை அல்லாஹ் எனக்கு வழங்கமாட்டானா?.* *இந்த மரத்தின் பழங்களை எனக்கு பிறகு வருபவர்கள் புசிக்கமாட்டார்களா?*
*என்று கேட்டார்கள்.*

*ஸஹாபாக்கள் இவ்வாறு பாடுவார்களாம்.*

*وكان شعارهم : غرس لنا من قبلنا فأكلنا، ونحن نغرس ليأكل من بعدنا.*

*நம் மூதாதையர்கள் மரங்களை வளர்த்தார்கள். நாம் அவற்றிலிருந்து சாப்பிடுகிறோம்.நாமும் மரங்களை வளர்ப்போம் நமக்கு பிறகு வரும் சந்ததிகள் அவற்றிலிருந்து சாப்பிடுவார்கள்.*

*1ـ الزراعة خير الأعمال :*

*1. #விவசாயம்_மிக_சிறப்பு_வாய்ந்த #தொழில்.*

*ஒரு பெரியவர் தன் மகனுக்கு செய்யும் உபதேசத்தை பாருங்கள்.*

*மகனே! தொழில்களில் மிகவும் சிறந்த தொழில் விவசாயமாகும். ஏனெனில் விவசாயம் மூலம் விளைவித்த பொருளை நல்லவனும் சாப்பிடுவான். கெட்டவனும் சாப்பிடுவான். நல்லவன் சாப்பிடும் போது அந்த பொருள் அவனுக்காக பாவ மன்னிப்பு தேடும்.கெட்டவன் சாப்பிடும் போது அந்த பொருள் அவனேயே சாபமிடும்.. மட்டுமல்ல அந்த பொருளை பறவைகளும், விலங்குகளும் சாப்பிடும்.*

*(ان خير الاعمال الحرث يزرعه صاحبه فيأكل منه البر والفاجر، فأما البر فما اكل من شيء استغفر لك، واما الفاجر فما اكل منه من شيء لعنه، ويأكل منه البهائم والطير)*

*பெரியவர்கள் சொல்வார்கள்...*

*(ازرعوا واغرسوا فلا والله ما عمل الناس عملا احل ولا اطيب منه، والله ليزرعن الزرع وليغرسن الغرس بعد خروج الدجال)*

*நீங்கள் விவாசயம் செய்யுங்கள். மரம் வளர்த்துங்கள்.மக்கள் செய்யும் தொழில்களில் இதுபோன்று அழகான, ஹலாலான வேறு தொழில் இல்லை. இறுதி நாளில் தஜ்ஜால் வருகை புரிந்த பின்னரும் மக்கள் மரம் வளர்ப்பார்கள், விவாசயம் செய்வார்கள்.*

*நாயகம் (ﷺ)அவர்களிடம் கேட்கப்பட்டது...*

*யா ரஸூலுல்லாஹ்..சிறந்த சொத்து எது.?*

*நாயகம் (ﷺ) அவர்கள் சொன்னார்கள்.*
*எவன் ஒருவன் விவசாயம் செய்து , அதை நல்ல முறையில் சரி செய்யவும் செய்து, அறுவடை செய்யும் நாளில் அழகான முறையில் அதனுடைய கடமைகளை நிறைவேற்றவும் செய்தால் அதுதான் நன்மையான சொத்து என்று கூறியுள்ளார்கள்.*

*وسئل النبي (صلى الله عليه واله) أي المال خير؟ فقال (صلى الله عليه واله) :(زرع زرعه صاحبه واصلحه وادى حقه يوم حصاده)*

*2- الزراعة مهنة الانبياء :*

*2 :#விவசாயம்_நபிமார்கள்_செய்த_பணி.*

*நபி (ﷺ) அவர்கள் சொன்னார்கள்.*
*ஆதம் நபி (அலை) அவர்களை அல்லாஹ் சுவனத்திலிருந்து வெளியேற்றிய போது அல்லாஹ் அவர்களிடம் விவசாயம் செய்ய ஏவல் பிறப்பித்தான்.சுவனத்தின் இன்பமான, ஆடம்பரமான உல்லாச வாழ்க்கை வாழ்ந்த ஆதம் நபி (அலை) துன்யாவில் தன் கரத்தால் விவசாயம் செய்து சாப்பிட்டார்கள்.*

*قال رسول الله (صلى الله عليه واله) :(ان الله عز وجل حين اهبط ادم (عليه السلام) من الجنة امره ان يحرث بيده، فيأكل من كد يده بعد نعيم الجنة)*

*ஆதம் நபி (அலை) அவர்களை அல்லாஹ் சுவனத்திலிருந்து வெளியேற்றிய போது அவர்களுக்கு சாப்பிட உணவும், குடிக்க தண்ணீரும் தேவைப்பட்டது.* *ஜீப்ரில் (அலை) அவர்களிடம் இது சம்பந்தமாக தனது கவலையை ஆதம் நபி (அலை) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.*

*ஓ ஆதமே! நீங்கள் விவசாயம் செய்யுங்கள் என்று ஜீப்ரீல் (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.*

*(لما اهبط ادم إلى الارض احتاج إلى الطعام والشراب فشكا ذلك إلى جبرائيل فقال له جبرائيل : يا آدم كن حراثا)*

*3- الزراعة مهنة الاولياء :*

*3 :#விவசாயம்_அவ்லியாக்கள்_செய்த #வேலை.*

*அலி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் போர் புரியும் பணியிலிருந்தது திரும்பினால் மக்களுக்கு பாடங்கள் கற்றுக் கொடுப்பார்கள்.பிறகு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்ப்பளிப்பார்கள். பிறகு இந்த காரியங்கள் முடிந்த பிறகு தன் கரத்தால் பூமியில் விவசாயம் செய்வார்கள்.*

*روي أن أمير المؤمنين علي لما كان يفرغ من الجهاد يتفرغ لتعليم الناس والقضاء بينهم فاذا فرغ من ذلك اشتغل في حائط له يعمل فيه بيديه وهو مع ذلك ذاكر الله تعالى*

*ஒரு நல்லடியார் சொல்கிறார்கள்...*

*நான் வியர்வை சிந்தும் அளவுக்கு விவசாயம் செய்து உழைப்பேன். ஆனால் அப்படி உழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் நான் ஹலாலான உணவை தேடுகிறேன் என்று அல்லாஹ் அறிய வேண்டுமென்பதற்காக இதை செய்கிறேன் என கூறுவார்கள்*

*(اني لأعمل في بعض ضياعي حتى أعرق وان لي من يكفيني ليعلم الله عز وجل اني اطلب الرزق الحلال)*

*4- استحباب الزراعة والغرس :*

*4 :#மரம்_வளர்த்தல்_விவசாயம்_செய்தல்_அழகான_வழிமுறைகள்*

*விவசாயத்தின் முக்கியத்துவத்தைப்பற்றியும், மரம் வளர்ப்பதின் நன்மைப் பற்றியும் நாம் இன்று அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவைகளைப்பற்றி மிக தெளிவாக 1400 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாம் பேசியுள்ளது. நாயகம் (ﷺ) அவர்கள் தனது தோழர்களை விவசாயம் செய்ய, மரம் வளர்க்க ஆர்வமூட்டினார்கள்.*

*நாயகம் (ﷺ) அவர்கள் சொன்னார்கள்.*

*ஒரு மனிதன் விவசாயம் புரிகிறான், அல்லது மரம் நடுகிறான். அவற்றிலிருந்து மனிதர்களோ, பறவைகளோ, விலங்குகளோ சாப்பிடும் காலமெல்லாம் அவனுக்கு இறைவன் கூலி வழங்கி கொண்டே இருப்பான்.*

*عن أنس بن مالك قال : قال رسول الله (صلى الله عليه واله)، (ما من مسلم يغرس غرسا او يزرع زرعا، فيأكل منه انسان او طير او بهيمة الا كانت له صدقة)*

*عن أبي ايوب الانصاري : ان رسول الله (صلى الله عليه واله) قال : (من غرس غرسا فاثمر، اعطاه الله من الاجر قدر ما يخرج من الثمرة.*

*وعن النبي (صلى الله عليه واله) قال : (ما من رجل غرس غرسا الا كتب الله له من الاجر قدر ما يخرج من ثمر ذلك الغرس)*

*நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள்.*

*எவருக்கும் அநீதி இழைக்காமலும், தொந்தரவு செய்யாமலும் ஒருவன் ஒரு வீடு கட்டுகிறான், யாருக்கும் அநீதி இழைக்காமலும், தொந்தரவு செய்யாமலும் ஒருவன் ஒரு மரம் நடுகிறான். இவற்றை கொண்டு மக்கள் பயன்பெறும் காலமெல்லாம் இதன் நன்மை அவற்றை உருவாக்கியவர்களுக்கு கிடைத்து கொண்டிருக்கும்.*

*وقال رسول الله (صلى الله عليه واله) : (من بنى بنيانا بغير ظلم ولا اعتداء، او غرس غرسا بغير ظلم ولا اعتداء، كان له اجرا جاريا ما انتفع به احد من خلق الرحمن)*

*5- قداسة المزارع في الاسلام :*
*5 : #இஸ்லாமில்_விவசாயிகளின் #மதிப்பு.*

*அபா அப்துல்லா என்பவர் கூறுகிறார்.*

*விவசாயிகள் மக்களின் பொக்கிஷங்களாகும். அவர்கள் அழகானவற்றை பயிருடுகிறார்கள். அவற்றை அல்லாஹ் வெளியே கொண்டு வருகிறான். மறுமை நாளில் மக்களில் வைத்து மிக அழகான பதவியும், உயர் அந்தஸ்து பெற்றும் விளக்குவார்கள். முபாரக் முபாரக் என்று அவர்களை அழைக்கப்படும்.

*عن يزيد بن هارون قال : سمعت ابا عبدالله (عليه السلام) يقول : (الزارعون كنوز الانام يزرعون طيبا اخرجه الله عز وجل، وهم يوم القيامة أحسن الناس مقاما، واقربهم منزلة يدعون المباركين)*

இன்ஷா அல்லாஹ்.
தொடரும்.

ஆக்கம்:
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி