புதிய_கல்வியாண்டின் பாடத்துவக்க_நிகழ்ச்சி கோட்டாறு குமரி மாவட்டம்

புதிய_கல்வியாண்டின் பாடத்துவக்க_நிகழ்ச்சி கோட்டாறு குமரி மாவட்டம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ஸெய்யிதுனா_இப்ராஹிம் (அலை) #அரபிக்_கல்லூரியின்.. (கோட்டாறு)

#புதிய_கல்வியாண்டின்
#பாடத்துவக்க_நிகழ்ச்சி

இன்று மாலை 4:30_ அளவில் இனிதே அரங்கேறியது..(அல்ஹம்துலில்லாஹ்)..

இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு மெளலவி அல்ஹாஜ்... ஷேக் ஸுலைமான் முர்ஷித் முஹ்யத்தீன் காதிரி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்..

காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியர்: அல்ஹாபிழ்:M.முஹம்மது அன்வரி
கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கினார்...

ஜனாப்: S. ஷேக் ஒலியுத்தீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்..

மெளலவி: அல்ஹாபிழ். N.ஷேக் முஹம்மத் ஸமதானி,

மெளலவி: அல்ஹாபிழ்.H.ஸெய்னுல் ஆபிதீன் மஹ்ழரி,

மெளலவி:M.A.ஷாஹுல் ஹமீது ஆலிம் அல் ஜலாலிய்யு,

மெளலவி: அல்ஹாபிழ். M.நிஸாமுத்தீன் அஹ்ஸனி,

மெளலவி:S.ஷறஃபுத்தீன் அஹ்ஸனி,

மெளலவி:M.தாஜுதீன் அஹ்ஸனி..

போன்றோர் வாழ்த்துரை வழங்கினர்..

அல் உஸ்தாத்:V.A.ஷம்சுத்தீன்
அல் காஸிமி (கேரளா)

அவர்கள் (முத்தஃபர்ரித்) எனும் கிதாபை கொண்டு மாணவர்களுக்கு தர்ஸை துவக்கி வைத்தார்கள்..

காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர்.திருவை S.ஸெய்யித் அப்துல் ரஹ்மான் பாகவி ஃபாஸில் அஹ்ஸனி அவர்கள் துஆ ஓதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்...

அருமை நண்பர் மெளலவி:K.அப்துல் ரஹ்மான் அன்வரி அவர்கள் இக்கல்லூரி யில் புதிய முதர்ரிஸாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பறக்கத் செய்வானாக...
இந்நிகழ்ச்சி அனைத்துமே அவர்கள் தான் தொகுத்து வழங்கினார்கள்...

யாஸீன் ஓதி துஆ செய்த பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது..

இந்த மேன்மை மிகு நிகழ்ச்சியில் ஏராளமான உலமாக்கள், உமராக்கள், பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டனர்..

மாஷா அல்லாஹ்..

ஹாஜி A.முஹம்மது அப்துல் காதர் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்..

எவ்வித தடையுமின்றி, தொய்வில்லாமல், நல்ல முறையில் சீரும் சிறப்புமாக பல்லாண்டுக் காலம் இந்த மதரசா நடைபெறுவதற்கு அல்லாஹ் துணைப் புரிவானாக ஆமீன்...

இந்நிகழ்ச்சியின் புகைப்படம் அனைத்தையும் எனது வேண்டுகோளுக்கு இணங்க
அனுப்பி தந்த அண்ணன் அப்துல் பாசித் (கோட்டாறு) அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ஜஸாக்கல்லாஹு கைர்.....

நிகழ்ச்சியை
தொகுத்து எழுதியவர்...

M.#சிராஜுத்தீன் அஹ்ஸனி