கார்னிச்_மசூதி.இது ஒரு அதிநவீன பள்ளிவாசல்

கார்னிச்_மசூதி.இது ஒரு அதிநவீன பள்ளிவாசல்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கார்னிச்_மசூதி.
இது ஒரு அதிநவீன பள்ளிவாசல்

புதுமைகளும், ஆச்சரியங்களும் மற்றும் அதிநவீன நுட்பங்களும் சங்கமிக்கும் கட்டுமான ஹோஸ்பைஸ் பாலியேட்டிவ், மது இல்லாத கடற்கரை, பன்முகத்தன்மைக்கு ஏற்ற முஹல்லம், கேரியர் மருத்துவமனை, காஜி ஹவுஸ் மற்றும் எஜுகேட் போன்ற கார்னிஷ்.

கோழிக்கோடு: கடலுண்டி கடற்கரை சாலையில் அமைந்துள்ள கார்னிச் முஹ்யித்தீன் மஸ்ஜித் துருக்கி_அரேபியேன் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டு இன்று மாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

கடல் காற்றின் இதமான தாலாட்டில் பயபக்தியுடன் மனஅமைதியாக வணக்க வழிபாடுகள் நிறைவேற்றுவதற்க்கான வசதியும், ‌திறந்த தர்பாரும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டெலஸ்கோப் டோம் வானியல் ஆய்வு மையமும் இந்த பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ளது...

ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்ட மழைநீர் தொட்டி மற்றும் கடலிலிருந்து மிக தொலைவில் தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வழிகாட்டிக் கொடுக்கும் ஒளிரும் மின்விளக்கு மினாராவும் இருப்பதால் கார்னிச் மசூதி மற்ற மசூதிகளிலிருந்து தனித்துவமானதாக விளங்குகிறது....

இஸ்லாம் வானியல் ஆய்வை ஊக்குவித்துள்ளது.இருப்பினும் இதற்கான வசதி வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால் அதிகமான மக்கள் ஆய்வு செய்யவும், படிக்கவும் வசதியாக மசூதியில் தொலைநோக்கி கருவிகள் நிறுவப்படும் என்று ஜமாஅத் காஜியும், தலைவருமான ஸெய்யித் இப்ராஹிம் அல் - கலீல் அல் - புகாரி கூறினார்.

மிகவும் அழகான முறையில் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இப்பள்ளிக்கு விசாலமான கான்பரன்ஸ் ஹால் மற்றும் நான்கு மூலைகள் கொண்ட நடைபாதையும் மேலும் மசூதிக்கு அழகு சேர்க்கிறது.

ஒரு பள்ளிவாசலாக இருந்தாலும் இது ஒரு கலாச்சார வளாகமாகவும் திகழ்கின்றது..

கார்னிஷ் திட்டங்களான ஹாஸ்பைஸ் பாலியேட்டிவ், மது இல்லாத பீச்,
ஊனமுற்றோர் நட்பு ஜமாஅத், கேரியர் கிளினிக், காஜி ஹவுஸ் எ‌ஜுகேட் போன்ற கார்னிச் திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன என்று சம்பந்தப்பட்ட வர்கள் விளக்கினார்கள்...

சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சி மற்றும் வரலாற்று மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளிவாசல் அருகே ஆய்வு மையம் மற்றும் விருந்தினர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடித்தளத் தளம் உட்பட நான்கு தளங்களைக் கொண்ட அதிநவீன மசூதியில், அறிவைப் பெறுவதற்கும், அல்குர்ஆனைப் படிப்பதற்குமான அதிநவீன வசதிகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னணி கட்டிடக் கலைஞரான தாஹிருத்தீன் கபீரின் தீன் உமர் அசோசியேட்ஸினர்கள் தான் மசூதியை வடிவமைத்துள்ளனர்...

இன்ஷா அல்லாஹ்!!
கேரளாவுக்கு செல்ல வாய்ப்பு கிடைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பள்ளிவாசலுக்கும்‌ சென்று வாருங்கள்...

தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..
7598769505