அகக்கண் ஞானத்தால் சாதிக்க புறப்பட்ட இளைஞர்கள்....
மஃதின் அகாதமி

அகக்கண் ஞானத்தால் சாதிக்க புறப்பட்ட இளைஞர்கள்....

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அகக்கண்_ஞானத்தால்சாதிக்க புறப்பட்ட இளைஞர்கள்....

கடந்த வெள்ளிக்கிழமை
ரமலான் மாதத்தின் முதல் ஜும்மா தினம் மலப்புறம் மாவட்டத்தில் மஅதின் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள கிராண்ட் மசூதி நிரம்பி வழிந்தது..

அன்றைய ஜும்மா தினத்தை தங்கள் அசாதாரண திறமையால் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கவர்ந்தனர் அந்த மூன்று பேரும்.

ஹாஃபிழ் ஸபீரலி
ஹாஃபிழ் ஸினான்
ஹாஃபிழ் உமருல் அக்ஸம்
மூன்று பேரும் பார்வைக்குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள்.

மஅதின் அகாடமி கீழ்
தஹ்ஃபீலுல் குர்ஆன் மதரஸாவில் பயின்ற மூவரும் அன்று
#ஜும்ஆ_பாங்கு சொன்னது,
#மஆஷிரா_கூறி_குச்சி_எடுத்தது
#ஜும்ஆ_பயான்,
#குத்பா_பேருரை,
#ஜும்ஆ_தொழுகை என்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

இவர்களில் ஹாஃபிழ் ஸபீரலி இரண்டு வருடங்கள் முன்பு துபாய் சர்வதேச குர்ஆன் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..

அகக்கண் ஞானத்தால் சாதிக்க புறப்படும் அவர்களின் மார்க்கம் சார்ந்த பணிகளை அல்லாஹ் அங்கீகரிப்பானாக...