Sirajudheen Ahsani
எழுத்தாளர்

உலகப்புகழ் பெற்ற அஸ்ஹர் பல்கலைக்கழக ஹதீஸ் கலைப் பேராசிரியர் அஷ்ஷைஃக் டாக்டர் அஹ்மத் அம்ர் ஹாஷிம் அவர்கள்.

"நான் இறந்து என்னை கபனிட்ட பிறகு கஃபதுல்லாஹ்வின் கிஸ்வாவின் ஒரே ஒரு துண்டையாவது எனது கஃபனுக்குள் வைக்க வேண்டும்."
என வஸிய்யத் செய்திருந்தார்கள்.

நேற்றைய (07) தினம் அவர் இறையழைப்பை ஏற்றார்கள்.
இன்னாலில்லாஹி.

மதீனா முனவ்வரா நகரில் ஒரு முக்கிய பிரமுகரிடம் இருந்து கிஸ்வா ஒரு துண்டை வாங்கி வந்து அவரின் கஃபனுக்குள் அவரின் வஸிய்யத் படி வைக்கப்பட்டது. சூரா யாஸீன் முழுவதுமாக அச்சிடப்பட்ட துணியால் அவரின் உடலை சுற்றப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

முனைவர் முஜீபுர்ரஹ்மான் சிராஜி