உங்கள் பெயர் அப்துர்ரஹ்மானா.?
#உங்கள்_பெயர்_அப்துர்
#ரஹ்மானா_?
#அப்துர்ரஹ்மான் என்ற பெயர்
பெரும் பாக்கியங்களில் ஒன்றாகும்.
#நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களுக்கு முதலில் பிறந்த குழந்தைக்கு இந்த பெயர்தான் வைக்கப்பட்டது.
அபூபக்கர் அல்-சித்திக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது அன்பு மகனுக்கும் இந்த பெயரையே வழங்கினார்கள்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான இரண்டு பெயர்களில் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் எண்ணியது அப்துர் ரஹ்மான் என்ற பெயரையாகும்.
மற்றொரு பெயர் அப்துல்லா.
அப்துர்ரஹ்மான் என்பது #இஸ்ராஃபீல் (அலைஹிஸ்ஸலாம்) என்ற வானவரின் பெயருமாகும்...
முத்துநபியின் உம்மத்திலிருந்து முதன் முதலாக இந்த பெயர் வைக்கப்பட்டது
ஸெய்யிதுனா அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழருக்காகும்....
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொர்க்கப் பிரவேசத்தை உறுதியளித்த இந்த நாயகத் தோழரின் அறியாமைக் காலத்திலுள்ள பெயர் அப்து அம்ர் என்பதாகும்..
நபி (ஸல்) அவர்கள் அதை மாற்றி
அப்துர் ரஹ்மான் என்று அழைத்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த நபித்தோழரும் ஒரே நாளிலே பிறந்தனர்..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் பல தோழர்களின் பெயரை அப்துர் ரஹ்மான் என்று மாற்றினார்கள்.
நாயகத்தின் அன்பு சீடர் #அபுஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு 'அப்துர் ரஹ்மான்' என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்துல்லாஹ் என்ற பெயரும் அபூஹுரைராவுக்கு
வழங்கப்பட்டதாக சில
கூறுகின்றனர்..
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்நாள் (ஹயாத்தின்) போதே நபித்தோழர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நபித்தோழர்களோ, அல்லது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அப்துர்ரஹ்மான் என்று பெயர் சூட்டுவதைக் காணலாம்.
அபூபக்கர் சித்திக் அவர்கள் தனது மகனுக்கு அப்துர் ரஹ்மான் என்று பெயர் சூட்டியதை முதலில் குறிப்பிட்டோமல்லவா..?
உமருல்-ஃபாரூக் (ரலி) அவர்கள் ஒரு படி மேலே சென்று தனது மூன்று மகன்களுக்கும் அப்துர்-ரஹ்மான் என்று பெயர் சூட்டினார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய உறவினர் #அப்பாஸ் (ரலி) அவர்களும் தனது மகனுக்கு அப்துர் ரஹ்மான் என்று பெயரிடத் தயங்கவில்லை.
#முஆத்_பின்_ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இதைப்
போன்றே செய்தார்கள்...
நல்ல நிய்யத்தைக் கொண்டு இந்த பெயரை வைப்பதில் பல பெரிய ஸிர்ருகள் (இரகசியம்) இருக்கிறது..
அல்லாஹ் அவர்களுக்கு இபாதுர்ரஹ்மானின்
பண்புகளை வழங்குவான் -
இன்ஷா அல்லாஹ்.
இந்த பெயர் உள்ளவர்களை மங்களகரமான காரியங்களில் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது விளக்கப்பட வேண்டிய ஒன்று.
இன்ஷா அல்லாஹ்!! வாய்ப்பு கிடைக்கும் போது அலசுவோம்
அப்துர் ரஹ்மான் என்ற சொந்தப் பெயரும், தந்தைக்கு அபுபக்கர் என்ற பெயரும் அதாவது அப்துர் ரஹ்மான் பின் அபுபக்கர் என்ற பெயரையும் கொண்டவர்கள் மிகக் குறைவு.
இது எல்லாம் தற்செயலானதா? இமாம்_ஜலாலுத்தீன்_அஸ்ஸூயூத்தி (ரஹிமஹுல்லாஹ்) அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டசாலி. அவரின் பெயர் அப்துர் ரஹ்மான் மற்றும் அவரது தந்தையின் பெயர் அபுபக்கர். (ரஹிமஹுமல்லாஹ்)..
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது #முஹம்மது_அப்துர்ரஹ்மான் என்று பெயர் வைப்பது நல்லது.
அப்போது நூருன் அல நூருன் ஆகிவிடும்.
இருவரின் பெருமையும் கிடைக்கும். முஹம்மது என்பது தனிப்பட்ட பெயராகவும்...
அப்துர்ரஹ்மானை அழைக்கும்
பெயராகவும் கருதலாம்.
குன்யத்துகள் அதாவது அழைக்கும் பெயர்கள் #அபு என்று தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.
அல்லாவிட்டாலும் முஹம்மதுவின் பெயரை சூட்டுவது புனிதமாக கருதப்பட்டாலும் அந்த பெயரை வைத்து அழைப்பது உலமாக்களால் ஊக்கப்படுத்தப்படவில்லை..
அதனால்தான் நம் ஊரில் (கேரளாவில்) முகமதுகள் பாப்பு, பாப்புட்டி போன்ற புனைப்பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
மொராக்கோ மற்றும் தூனிஷ்யா போன்ற நாடுகள் முகமதுவிலுள்ள மீமுக்கு ஃபத்ஹ் செய்து மஹம்மது என்று அழைக்கின்றனர்.. அப்போது இந்த பிரச்சினை இல்லை..
அல்லாஹ் நம் அனைவரையும் பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் அவனது இபாதுர்ஹ்மானில் சேர்த்துக் கொள்வானாக - ஆமீன்
துஆ விருப்பத்துடன்,
உங்கள் சொந்தம்..
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..
7598769505..
(அப்துர் ரஹ்மான் என்பது இன்று வழக்கொழிந்து வரும் ஒரு பெயர்.
அதை மீண்டும் உயிர்ப்பிக்க இது
ஒரு காரணமாக அமையட்டும்!)