ரமளான் சிந்தனைகள் பாகம்_1
குர்ஆன்_மகத்தான
வேதம்..........
பாகம்_1
நமது காலத்தின் மிகப்பெரிய காரியாக புகழ் பெற்று திகழ்ந்தவர். எகிது நாட்டைச் சேர்ந்த காரி அப்துல் பாஸித்..
அவர் 1986 ல் அமெரிக்கா சென்றிருந்த போது குர் ஆன் உங்களது வாழ்வில் அதிசயம் நிகழ்த்தியதுண்டா என்று கேட்டார்கள். அப்போது அவர் ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டினார்.
ஒரு தடவை எகிப்தின் அதிபர் ஜமால் அப்துன்னாஸர் ரஷ்யாவுக்கு பயனம் செய்த போது தன்னுடன் காரி அப்துல் பாஸித் அவர்களை அழைத்துச் சென்றார். இராணுவ அதிகாரிகளின் ஒரு கூட்டத்தில் அப்துல் பாஸித்தை அறிமுகப்படுத்தி விட்டு இவர் எங்களது வேத்ததிலிருந்து சில வசனங்களை ஓதிக்காட்டுவார் என்று கூறினார்,
காரி அப்துல் பாஸித் தாஹா அத்தியாயத்திலிருந்து சில வசனங்களை ஓதிக்காட்டினார்,
காரி அப்து பாஸித் கூறினார்.
கண்களை மூடியவாறு நான் இரண்டு ரூகூஃகள் ஓதினேன். பிறகு கண்களை திறந்து பார்த்த போது அங்கிருந்த நான்கு ஐந்து அதிகாரிகளின் கண்களிலிருந்து கண்ணீர் தென்பட்டது. என் வாழ்வில் நான் சந்தித்த குர்ஆனிய அற்புதங்களில் ஆச்சரியமானது அது. அர்த்தம் புரிய வாய்ப்பில்லாத அவர்களை குர்ஆனுடை இனிமை ஈர்த்திருந்தது.
நாமும் திருக்குர் ஆனை உளம் உருக
ஓத வேண்டும். நமது பிள்ளைகளை அவ்வாறு ஓத வைக்க வேண்டும் மற்றவர்கள் ஓதுவதை கேட்கவும் வேண்டும்.
இப்போது நாம் பாடல்களை கேட்பதில் எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோம்.
அதை விட இனிமையானது திருக்குர்ஆன்
அதை விட மன அமைதி தரக்கூடியது திருக்குர் ஆன்
அதை விட நன்மையானது திருக்குர்ஆன்
எல்லாவற்றிற்கும் மேலாக அதை விட பாக்கியம் தரக்கூடியது திருக்குர்ஆன்.......