ரமளான் சிந்தனைகள் பாகம்_2

ரமளான் சிந்தனைகள் பாகம்_2

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ரமளான் சிந்தனைகள்
பிறை_2

அல்லாஹ்வுக்காக_அமல்
செய்வோம்....

قال بعضُ الحُكماء: "مثَل مَن يعمل رياءً وسُمعة، كمثَل مَن ملأ كيسَه حصًى، ثم دخَل السوق؛ ليشتريَ به، فإذا فتَحَه بين يدي البائع افتضح، وضرَب به وجهه، فلم يحصل له به منفعةٌ سوى قولِ الناس: ما أملأَ كيسه، ولا يُعطَى به شيء، فكذلك مَن عمِل للرياء والسُّمعة، لا منفعةَ له في عمله سوى مقالة الناس، ولا ثوابَ له في الآخرة

ஞானிகள் கூறுகிறார்கள் : முகஸ்துதிக்காக அமல் செய்பவன், பையில் பொடிக் கற்களை நிறப்பிக் கொண்டு கடைவீதிக்குப் பொருட்களை வாங்கச் செல்பவனைப் போல. பொருட்களை வாங்கி விட்டு வியாபாரிக்கு முன்பு அந்தப் பையைத் திறந்தால் அவனுக்கு தலைகுனிவு தான் ஏற்படும். சில நேரங்களில் அடியும் விழும்.கடைவீதியில் அவனுக்கு எந்தப் பொருளும் கிடைக்காது.அதேபோன்று தான் முகஸ்துதித்தாக அமல் செய்தவனுக்கு மறுமையில் எந்தப் பலனும் கிடைக்காது.

நம்மில் பலருடைய நிலை இப்படித்தான் இருக்கிறது. அமல்கள் அமல்களாக இல்லை. வெறும் விளம்பரங்களாக மட்டுமே இருக்கிறது.

"ترك العمل من أجل الناس رياء، والعمل من أجل الناس شرك، والإخلاص أن يعافيك الله منهما

மக்களுக்காக ஒரு காரியத்தை விடுவதற்குப் பெயர் முகஸ்துதியாகும்.மக்களுக்காக ஒரு காரியத்தை செய்வதற்குப் பெயர் இணை வைப்பாகும்.இந்த இரண்டும் இல்லை யென்றால் அதற்குப் பெயர் மனத்தூய்மையாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

யாருக்காக எதையும் விடவும் கூடாது.யாருக்காக எதையும் செய்யவும் கூடாது.ஒரு அமலை செய்வதாக இருந்தாலும், ஒரு பாவத்தை விடுவதாக இருந்தாலும் நம்மைப் படைத்த இறைவனுக்காக மட்டும் தான் இருக்க வேண்டும்.

دخل أعرابي المسجد فصلى صلاة ضيفة فقام إليه علي رضى الله عنه بالدرة وقال أعد الصلاة فأعادها مطمئناً فقال أهذه خير أم الأولى فقال الأعرابي الأولى لأني صليتها لله والثانية صليتها خوفاً من الدرة

ஒரு கிராமவாசி பள்ளிக்கு வந்து வேகமாக தொழுது முடித்தார். அதைப்பார்த்த அலி (ரலி) அவர்கள் கையில் சாட்டையையுடன் நீ சரியாகத் தொழ வில்லை. திருப்பித் தொழு என்றார்கள். அதற்குப் பிறகு அவர் நிதானமாகத் தொழுது முடித்தார். பிறகு அவரை அழைத்து, இந்த இரண்டு தொழுகைகளில் எது சிறந்தது? என்று கேட்டார்கள். அதற்கு அந்த கிராமவாசி, முதல் தொழுகை தான் சிறந்தது என்று கூறினார். காரணம் கேட்ட போது, முதல் தொழுகையை அல்லாஹ்விற்காக இருந்தது. இரண்டாவது தொழுகை உங்கள் சாட்டைக்கு பயந்து இருந்தது என்று கூறினார்.

எனவே எதற்காகவும் யாருக்காகவும் நம் அமல்கள் அமைந்து விடக்கூடாது என்பதில் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை அமல்கள் மறைக்கப்பட வேண்டும். மக்களுடைய பார்வையை விட்டும் அது திரை போடப்பட வேண்டும்.அந்த அமல்கள் தான் நம் வெற்றிக்குக் காரணமாக அமையும். நமக்கு சுவனத்தையும் பெற்றுத்தரும்