Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பிரபல சுன்னத் வல் ஜமாத் அறிஞரும், தெற்கு கேரள ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவருமான
கே.பி. #அபூபக்கர்ஹஸ்ரத்தின்
அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.
பல மார்க்க அறிஞர்களை உருவாக்குவதிலும்
தெற்கு கேரளாவை மையமாகக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தை ஆன்மீக ரீதியாக புதுப்பிப்பதிலும் அவர் ஆற்றிய சேவைகள் மகத்தானவை.

அவர் ஜாமிஆ நூரியா அரபிக் கல்லூரியின்
ஆரம்பகால மாணவராகவும்,
தாழக்கோடு குஞ்ஞலவி முஸ்லியார்,
ஷம்சுல் உலமா இ.கே.அபூபக்கர் முஸ்லியார், கோட்டுமல அபூபக்கர் முஸ்லியார் போன்றவர்களின் சீடராகவும் இருந்தார். ஸமஸ்த கேரள ஜம்இய்யத்துல் உலமா சபையின் துணைத் தலைவர்
சிராஜுல் உலமா
பி.ஏ. ஹைத்ரோஸ் முஸ்லியாரின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார்.
கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாகப் பங்கேற்றது என் வாழ்வில் பசுமையான மறக்க முடியாத இனிய நினைவுகளாகும்....

வல்லோன் அல்லாஹ் அவரது கப்ரை வெளிச்சமாக்கி
அருள் நிறைந்ததாக்கி வைப்பானாக
மறுமை வாழ்க்கையை வெற்றியாக்குவானாக.

கவலையில் இருக்கும்
அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு அமைதியை வல்லோன் அல்லாஹ் வழங்கிட உளப்பூர்வமாக துஆச் செய்கிறேன்...

#இந்தியன்_கிராண்ட்_முஃப்தி
#ஏபி_அபுபக்கர்_பாகவி_ஹஸ்ரத்