இறைவனின் அருள் நிறைந்த தலைவர்
1954: மாணவராக இருந்தபோதே மலப்புறம் மாவட்டம் தானுரில் நடந்த சமஸ்தயின் 28வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்றார்
1964:
தனது கற்பித்தல் பணியைத் தொடங்கினார்.
அதே ஆண்டில்,
ஈ.கே. உஸ்தாத்,
ஈ.கே. ஹசன் முஸ்லியார்,
கே.வி. முஹம்மது முஸ்லியார்
போன்ற சமஸ்த தலைவர்களுடன் சேர்ந்து சொற்பொழிவு மேடைகளில் பிரகாசித்தார்.
1971: சமஸ்த கோழிக்கோடு
மாவட்டக் கமிட்டியின் இணைச் செயலாளர்
1974: சமஸ்த கேரள ஜம்இய்யத்துல் உலமா கேந்திர முஷாவரா உறுப்பினர்.
1975: சமஸ்தயின் இணைச் செயலாளர்
1985: சமஸ்தயின் 60வது ஆண்டு மாநாட்டின் வெற்றியின் சிற்பி
1989: சமஸ்தயின் பொதுச் செயலாளர்
சமஸ்தயின் 100வது ஸ்தாபக தினத்தைக் கொண்டாடும் வேளையில்,
ஷைகுனா சுல்தானுல் உலமா
ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத்
அவர்கள்
60 ஆண்டுகளுக்கும் மேலாக
தனது வீரியமான பணியின் பாரம்பரியத்துடன் இயக்கத்தின் தலைமை பீடத்தில் உள்ளார்கள்..
அரை நூற்றாண்டுக்கும் மேலாக மகத்தான இந்த மாபெரும் அறிஞர் சபையின் இணைச் செயலாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியை வகித்த ஒரே அறிஞர் உஸ்தாத் அவர்கள் மட்டுமே...
அவரது தலைமையில்
சமஸ்த இன்று அடைந்துள்ள வளர்ச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. உஸ்தாத் அவர்களின் அருள் நிறைந்த இருப்பை அல்லாஹ் எமக்கு நீண்ட காலம் வழங்குவானாக.
சமஸ்த எனும்
இலட்சிய கொள்கை இயக்கத்திற்கு
நீ எப்போதும் கண்ணியத்தை, அபிமானத்தை வழங்கி கிருபை செய்தருள்வாயாக...