மீலாத் மல்லித் குறிப்பேடுகள்.. பாகம்.1

மீலாத் மல்லித் குறிப்பேடுகள்.. பாகம்.1

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அகிலத்தின் அருட்கொடையை கொண்டாடுவோம்

1. மீலாது கூடாது என குர்ஆனில் இல்லை ஹதீஸ்களிலுமில்லை, ஸஹாபாக்களோ அறிஞர்களோ கூடாது எனச் சொல்லவுமில்லை

2. நபி(ஸல்) அவர்கள் அகிலத்தின் அருட்கொடை (21:107) எனவும் அருட்கொடைகளுக்கு மகிழ்வடைய வேண்டும் (10:56) எனவும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

3. அகீகா கொடுத்து மீலாது விழா ஆகுமானது என நபிகள் (ஸல்) அவர்கள் கற்று தந்தார்கள் (இமாம் ஸுயூத்தி (ரஹ்) அவர்களின் அல்ஹாவி,

4. நபிகள்(ஸல்) அவர்களை ஸஹாபாக்கள் ரபீவுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் நாள் வாழ்த்துப்பா பாடி வரவேற்றார்கள்

5. இமாம் ஷாபிஈ, ராஸி, அஸ்கலானி, சுயூத்தி, கஸ்தலானி, இப்னுல்ஹாஜ், ஷைபானி, இப்னுரஜப், சுர்கானி, அபூஷாமா (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) போன்ற அனைத்து மேதையர்களும் மீலாதுவிழா கொண்டாடுவதை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

6. இமாம் ஃபாகிஹானி, அவர்களுக்கு அல்ஹாவி என்ற நூல் கிடையாது ஹராமுகள் இல்லாமல் நடைபெறும் எந்த விழாக்களையும் அவர்கள் விமர்சிக்கவில்லை.

7. இப்னு தைமிய்யா, கர்ளாவி போன்ற வஹ்ஹாபிய அறிஞர்களும் அடிப்படை ஆதாரங்களின்படி மீலாது விழாக்கள் கொண்டாடுவதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

8. ஷிர்க் ஒழிப்பு மாநாடு, இடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம், சிறைநிரப்பும் போராட்டம், திருகுர்ஆன் மாநாடு, ஹதீஸ் மாநாடு போன்றவைகளை நபி(ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ செய்தார்களா ?

9. ஹஸ்ஸான் இப்னு ஸாபித், கஃபு இப்னு ஸுஹைர், அப்துல்லாஹி இப்னு ரவாஹா போன்ற நபிதோழர்கள் நபிகளாரை போற்றி புகழ்ந்து கவிதைகள் பாடியதை ஏன் பொதுமக்களிடத்தில் சொல்லாமல் மறைக்கிறீர்கள்.

10, நபி(ஸல்) அவர்கள் பிறந்தநாளில் ஷைத்தான் ஓலமிட்டு அழுதான் இப்போதும் பொறாமை கொண்டு ஒப்பாரி வைக்கிறான்.

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF), குமரிமாவட்டம்

7598769505, 7200977182, 9894710696