மாநபி மீது ஸலவாத் ஓதுவோம்
நூறு_கோடி_ஸலவாத்_சமர்ப்பண
மாநாடு ஏன் எதற்கு..?
✍️:M.கமாலுத்தீன் ஸகாஃபி.
மாநில தலைவர் SSF
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்..
(حديث ابن مسعود: إن أولى الناس بي يوم القيامة أكثرهم صلاة علي)
கியாமத் நாளில் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என் மீது அதிகமாக ஸலவாத்துச் சொல்பவராவார்.. திர்முதி: (446)....
மேலும் ஒரு ஹதீஸில் இவ்வாறு காணலாம்...
روى الإمام أحمد عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: ( صَلُّوا عَلَيَّ، فَإِنَّهَا زَكَاةٌ لَكُمْ ، وَسَلُوا اللهَ لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا دَرَجَةٌ فِي أَعْلَى الْجَنَّةِ، لَا يَنَالُهَا إِلَّا رَجُلٌ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُو )
பெருமானார் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்..
என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்..
அது உங்களுக்கு ஜகாத்தாக அமையும்.. உங்களைத் தூய்மைப் படுத்தும். எனக்காக வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சுவனத்தின் ஒரு உயர்ந்த பதவி. அப்பதவி ஒரேயொருவருக்கு மட்டுமே கிட்டும். அந்த ஒருவர் நானாக இருக்க விரும்புகிறேன்...
(தஃப்ஸீர் இப்னு கஸீர்)
அதுபோலவே ஸலவாத்தின் மகிமையை குறித்து கூறும் போது ஸஹ்ல் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அவர்கள் கூறுவதாவது..
وقال سهل بن عبد الله: الصلاة علي محمد صلي الله عليه وسلم افضل العبادات، لان الله تعالى تولاها هو وملاءكته ثم امر بها المؤمنين وساءر العبادات ليس كذلك
ஸஹ்ல் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அவர்கள் கூறினார்கள்..
பெருமானார் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்தல் என்பது இபாதத்துகளில் மிகவும் சிறப்பானது.
ஏனெனில் அல்லாஹ் அச்செயலைச் செய்கிறான். அதை மலக்குகளும் தொடர்கின்றனர். பின்னர் அதைச் செய்திட முஃமின்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான
ஏனைய இபாதத்துகள் இப்படிப்பட்டதல்ல....
இவ்வளவு நன்மைகளை அள்ளித் தரும் ஸலவாத்தை குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாமலும், அறிவு இல்லாமலும் நாம் இருக்கின்றோம்..
ஏனைய அமல்களை செய்ய வேண்டுமெனில் பல நிபந்தனைகள், விதிவிலக்குகள், காலங்கள், நேரங்கள், கட்டுப்பாடுகள் இருக்கிறது...
உதாரணமாக தொழ வேண்டுமென்றால் வுளூ செய்ய வேண்டும்.. வுளூ இல்லையென்றால் தொழுகை நிறைவேறாது.. இப்படி ஒவ்வொரு அமலுக்கும் இதுப் போன்ற ஷர்த்து , ஃபர்ளுகளை பார்க்க முடியும்...
ஆனால் ஸலவாத்தை பொறுத்த வரை நேரகாலங்களோ, விதிமுறைகளோ, நிபந்தனைகளோ ஒன்று மில்லை..
ஸலவாத்தின் நன்மைகளை ஒரு மனிதன் அனுபவித்தால் அதிலிருந்து ஒரு போதும் வெளி வர மாட்டான்...
காரணம் எண்ணற்ற,எல்லையற்ற நன்மைகளை ஸலவாத்தின் காரணமாக அல்லாஹ் மனிதர்களுக்கு வாரி வழங்குகிறான்..
நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன, பாவங்கள் பொறுக்கப் படுகின்றன, ஈமான் முழுமை பெறுகிறது..
நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக அமைகிறது. அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறது..
நாம் தேவையில்லாமல் நேரங்களை பல விதத்திலும் வீணடித்து கொண்டிருக்கிறோம்...
கேளிக்கைகள், வீண் பேச்சுக்கள், வீண் விளையாட்டுகளில் நம் நேரங்கள் பாழாய்க் கொண்டு இருக்கிறது
சமூக ஊடகங்கள் வந்த பிறகு நம் நேரங்களை யெல்லாம் முகநூல், வாட்ஸ்அப், யூ டியூப், இன்ஸ்டாகிராம்
போன்றவை சாப்பிட்டு கொண்டிருக்கிறது...
பெண்கள் தங்கள் நேரங்களை நாடகங்கள், டிவி சேனல்களின் நிகழ்ச்சிகளை பார்த்து வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்..
இளைஞர்கள், சிறார்கள் தங்கள் பொன்னான நேரங்களை வீண் விளையாட்டுக்களிலும், வீண் பொழுது போக்குகளில் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்...
இந்நிலையில் நம் நேரங்கள் நன்மையாக அமையவும், ஆயுளில், ஆரோக்கியத்தில், வீட்டில், வியாபாரத்தில் பறக்கத் ஏற்படவும், நாயகத்தின் மீது பேரன்பை வெளிப்படுத்தவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஸலவாத் மஜ்லிஸுகளை தமிழகம் முழுவதும் சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்தது..
அல்ஹம்துலில்லாஹ்..
மக்கள் மத்தியில் அது பெரும் வரவேற்பைப் பெற்றது..
ஏராளமான மக்கள் நம்மை தொடர்புக் கொண்டு இந்த மகத்தான செயலை வருடாவருடம் ரபீஉல் அவ்வல் மாதத்தில் அதிகமான மக்கள் செய்வதற்கு ஒரு செயல் வடிவத்தை நடைமுறைப்படுத்தச் சொன்னார்கள்....
அதன் அடிப்படையில்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த புனித ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபிநேசம், ஸலவாத்தின் முக்கியத்துவம்
போன்றவற்றின் மேன்மையைக் குறித்து தமிழகம் முழுவதும் நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யப்பட்டது....
ஸலவாத்துகள் சொல்லி எண்ணிக்கையை அறிவிக்கும் நோக்கில் சுன்னத் மாணவர் அமைப்பின் மூலம் மாவட்டம், கிளை, மாநில நிர்வாகிகள் தங்களது நேரடிப் பார்வையில் வாட்ஸ்அப் க்ரூப் தொடங்கப்பட்டது..
ஏராளமான மக்கள் ஸலவாத் சொல்லி தாங்கள் சொல்லிய ஸலவாத்தின் எண்ணிக்கையை இன்னும் அனுப்பி வைத்து கொண்டிருக்கின்றனர்..
ஒரு சின்ன ஜமாஅத்தாக இருக்கிற குமரி மாவட்டம் புத்தன் துறை மஹல்லாவிலிருந்து மட்டுமே *ஒரு கோடியே ஆறு லட்சம்* ஸலவாத் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்..
நம் நோக்கங்கள் எந்த அளவுக்கு வல்லோன் அல்லாஹ் நிறைவேற்றியுள்ளான் என்று பாருங்களேன்..
அதைப்போலவே நூறு கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடை பற்றி மக்களுக்கு அறிமுகம் செய்யும் முகமாக சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், கோவை, காயல்பட்டினம், இராமநாதபுரம், கீழக்கரை, போன்ற நூறுக்கும் மேற்பட்ட பல இடங்களில் 100_ கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாட்டின் அறிமுக விழா மிக சிறப்பாக நடத்தப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
அதுபோன்று ரபீஉல் அவ்வல்_12 அன்று அதிகாலை வேளையில் SSF_ தலைமையில் பல்வேறு ஊர்களில் *வைகறை மவ்லிதும்* மிக அழகான முறையில் அரங்கேற்றப்பட்டது..
நிகழ்ச்சிகளை மிக சிறப்பாக்கித் தந்த ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும் ..
அதுப்போல் மாநபி பிறந்த தினமான ரபீஉல் அவ்வல்_12 அன்று சென்னையில் #SSF_ன் கீழில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு #SSF_மாநில_தலைவர்_M_கமாலுத்தீன்_ஸகாஃபி அவர்கள் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது...
மாஷா அல்லாஹ்!!!
இந்த மாதத்தை (ரபீஉல் அவ்வல்) நல்ல முறையில் கண்ணியப்படுத்த வேண்டும் என்ற SSF_ன் லட்சியம் இறைவன் அருளால் சிறப்பாக நிறைவேறியுள்ளது...
இன்ஷா அல்லாஹ்!!!
நாம் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிற நூறு கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடு
இன்று (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டம் தக்கலை பீர் முகம்மது அப்பா அரங்கில் வைத்து நடைபெற உள்ளது...
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான உலமா பெரு மக்கள் இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளனர்...
நபி நேசர்களின் இந்த மகத்தான நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சிறப்பாக நடத்தி தர உங்கள் அனைவரையும் சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு_SSF அன்பாய் அழைக்கிறது...
வாருங்கள்!!
நாயகத்திற்க்காக ஒன்று கூடுவோம்....
#குறிப்பு: மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த புண்ணியம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு
ஏராளமான செலவினங்கள் உள்ளன..
இந்நிகழ்வில் எல்லாவிதமான உங்களது பங்களிப்பை யும்,ஒத்துழைப்பையும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்..
இன்ஷா அல்லாஹ்!!
இப்புனித ஸலவாத் சமர்ப்பண மாநாட்டிற்கு உங்களால் இயலும் ஹதியாக்களை வழங்கி எங்களுக்கு ஒத்துழைப்பு தர மிக அன்பாய் வேண்டுகிறோம்...
தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி