ஜும்ஆ பயான் குறிப்புகள்
பெண்களை கண்ணியப்படுத்தும்
இஸ்லாம்.
*பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முன்மாதிரியான முன்னேற்றங்கள் யாவும் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பரிசோதித்து பார்த்தால் அவையொன்றும் புதுமையான காரியமல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.*
*அதாவது நீண்ட காலங்களாக மரியாதை செய்யப்படாமல், கண்ணியம் வழங்கப்படாமல், கொடும் அநீதி இழைக்கப்பட்டு நலிந்து போயிருந்த பெண்மணிகளின் வாழ்க்கைக்கு புது அர்த்தங்கள் வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு புது உயிர் கொடுத்தவர்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.*
*அனைத்து விதமான உரிமைகளும் மறுக்கப்பட்டு வந்த காலத்திலேயே பெண்ணுரிமைக்காக, அவள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக அரும் பாடுபட்டவர்கள் தான் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்.*
*பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லாவித சுக, துக்கங்களிலும் அவளுடன் அன்போடு இருக்க வலியுறுத்தினார்கள்.*
*அவளின் அனைத்து விதமான உரிமைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்ற காரியத்தை எடுத்துரைப்பதில் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டுவதில் நாயகம் (ஸல்) அவர்கள் தனித்து விளங்குகின்றார்கள்.*
*நாயகம் (ஸல்) அவர்கள் பெண் சமூகத்திற்கு வழங்கிய கண்ணியங்களை, மேன்மைகளை, உயர்வுகளை நாம் இங்கே வரிசையாக பார்ப்போம்...*
*1.ابطل الإسلام عادة كراهية البنات*
*மடமை காலத்தில் பெண் குழந்தைகள் மீது அரபிகளுக்கு இருந்த வெறுப்பை அகற்றினார்கள்.*
*பெண் குழந்தைகள் என்பது உலகில் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வழங்கக்கூடிய அருட்கொடைகளில் மிகவும் பெரிய நிஃமத் என்று வர்ணித்து பெண்ணின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றினார்கள்.*
*لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهد لمن يشاء إناث ويهد لمن يشاء الذكور*
*அறியாமை காலத்தில் பெண் குழந்தைகளை உயிருடன் குழிதோண்டி புதைக்கும் கொடூர பழக்கத்தை கொண்டிருந்தார்கள். இதை நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.*
*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*ان الله حرم عليكم عقوق الأمهات ومنع وهات ووأد البنات*
*2.وابطل النبي صلى على محمد عادة التفضيل بين الابناء*
*குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு செய்வதை நாயகம் (ஸல்) அவர்கள் முறியடித்தார்கள்.*
*ஆண் பிள்ளைக்கு எல்லாவித சுதந்திரம் வழங்கப்படுவது, தவறு செய்தால் அவனை தண்டிக்காமல் இருப்பது, போன்ற பெண்ணை தாழ்த்தி ஆணை உயர்த்தி காட்டுகின்ற பாரபட்சமான செயல்களை செய்யாமல் பிள்ளைகளுக்கு மத்தியில் சமத்துவத்துடன் செயல்பட வலியுறுத்தினார்கள்.*
*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*اتقوا الله واعدلو بين أولادكم*
*அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு காட்டாமல் நீதமாக செயல்படுங்கள்.*
*3 :وأخبر النبي ان تربيت البنات تحتاج الي صبر ونفقات كثيرة فرتب علي ذلك أجر عظيم*
*பெண் குழந்தைகளை பராமரிப்பதில் அதிக பொறுமையும்,பொருளாதாரவும் தேவைப்படும்.*
*அதன் காரணமாக பெண் குழந்தைகளை பராமரிப்பதில் அல்லாஹ் மகத்தான நன்மைகளும், உயர்வும் வழங்குவான்.*
*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*من عال ثلاث بنات او ثلاث أخوات او اختين او ابنتين فادبهن واحسن اليهن وزوجهن فله الجنة*
*ஒருவருக்கு மூன்று பெண் மக்கள் அல்லது மூன்று சகோதரிகள் இருந்தார்கள். அல்லது இரண்டு பெண்மக்கள் அல்லது இரண்டு சகோதரிமார்கள் இருந்தார்கள்.இம்மனிதர் அந்த பெண்மணிகளை நல்ல ஒழுக்கத்தை போதித்தார், அவர்களுக்கு நல்ல நன்மைகளை செய்தார், அழகிய விதத்தில் திருமணவும் செய்து கொடுத்தாரென்றால் அவருக்கு சுவனம் கிடைக்கும்.*
*ஒருவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அந்த குழந்தைகள் வயதுக்கு வரும் வரை நல்ல முறையில் வளர்த்தினால் கியாமத் நாளில் நானும் அவரும் ஒன்றாக இருப்போம் என்பதை அறிவிக்கும் விதம் இரண்டு விரல்களை சுட்டிக் காட்டினார்கள்.*
*அறியாமை காலத்தில் அரபிகள் பெண் குழந்தைகளுக்கு எவ்வித மதிப்பும், மரியாதையும் வழங்கவில்லை.பெண் குழந்தைகளை கொஞ்சுவது, அவர்களுடன் விளையாடுவது, அவர்களுக்கு முத்தம் கொடுப்பது போன்ற செயல்களையெல்லாம் அன்றைய அரபிகள் வெறுத்தார்கள். இந்த கடுமையான மடமைத்தனத்தைதான் நாயகம் (ஸல்) அவர்கள் முறியடித்தார்கள்.*
*4 :وأما الزوجة فقد ورد عن النبي في شأنها من حسن العشرة*
*மனைவியின் விஷயத்தில் அதாவது அவளிடம் நல்ல ரீதியில் பேசுவது, பழகுவது, அணுகுவது சம்பந்தமாக சமூகத்திற்கு அழகிய பாடங்களையும், உபதேசங்களையும் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.*
*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي*
*உங்கள் மனைவிமாரிடம் எவர் சிறந்தவரோ அவர்தான் உங்களில் சிறந்தவர்.நான் என் மனைவிமாரிடம் சிறந்தவராக உள்ளேன் என்றார்கள்.*
*நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் எல்லா உரிமைகளையும் சீர்ப்படுத்தினார்கள்.*
*பெண்கள் விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்பதை சமூகத்திற்கு நினைவுப் படுத்திக் கொண்டே இருந்தார்கள்.*
*அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்குஎதிராக நடந்த அநீதங்களை தடுத்தார்கள்.அவளுடைய உரிமைகளை பறிப்பதற்கு எதிராக எச்சரிக்கை செய்தார்கள்.*
*மனைவிமார்கள் மீது நல்ல பிரியம் வைத்தார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்*
*ஆயிஷா பீவி அவர்கள் சொல்லிய ஒரு அழகிய அனுபவத்தை பார்ப்போம்.*
*ومن اجمل الموافق ما حدثت به عائشة رضي الله عنها..ان رسول الله قال لها إني لأعلم إذا كنت عني راضية واذا كنت علي غضبي.*
*قالت : من أين تعرف ذلك؟*
*قال: اما اذا كنت عني راضية فأنك تقولين: لا ورب محمد وإذا كنت غضبي قلت: لا ورب ابراهيم*
*قالت : أجل والله يا رسول الله ما اهجر الا اسمك*
*நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா பீவி (ரலி) அவர்களடம் சொன்னார்கள். நீ என் மீது மகிழ்ச்சியாக இருக்கும் நேரமும் எனக்கு தெரியும்.என் மீது கோபமாக இருக்கும் நேரமும் எனக்கு தெரியும்.*
*அது எப்படி உங்களுக்கு தெரியும் என ஆயிஷா பீவி அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.*
*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீ என் மீது மகிழ்ச்சியாக இருந்தால் முஹம்மதின் ரப்பின் மீது என்று சத்தியம் செய்வாய்.கோபமாக இருக்கும் போது இப்ராஹிமின் ரப்பின் மீது சத்தியமாக என்று சத்தியம் செய்வாய் என்று சொன்னார்கள்.*
*உடனே ஆயிஷா அம்மையார் சொன்னார்கள்.. ஆமாம் உண்மை தான். ஆனால் அந்த இடத்தில் உங்கள் பெயரைத்தான் தவிர்ப்பேனே தவிர உங்களை இல்லை யாரஸூலுல்லாஹ்.*
*5 :المساواة بين الرجل والمرأة في التكريم والتكليف والجزاء الأخروي*
*மறுமையில் வழங்கப்படும் நன்மைகள், அல்லாஹ்வின் ஏவல்கள், மரியாதை, கண்ணியம் போன்ற எல்லா விஷயங்களிலும் ஆணும் பெண்ணும் சமம் என்று கற்பித்தார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.*
*இதன் மூலம் இஸ்லாம் பெண்களை சங்கை செய்திரிப்பதை பார்க்க முடியும்.*
*அல்லாஹ் கூறுகின்றான்.*
*من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحييه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانو يعملون*
*6 :ومن الحقوق الإجتماعية المشروعة للمرأة حقها في إختيار الزوج*
*கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கி சங்கைப்படுத்தியது.அவளது அனுமதி இல்லாமலோ, விருப்பம் இல்லாமலோ திருமணம் செய்து வைக்க கூடாது.*
*قال رسول الله .لا تنكح البكر حتي تستأذن*
*7 :ومن الحقوق الإجتماعية المشروعة حق إبداء الرأي والسؤال*
*தன் கருத்துக்களை, கேள்விகளை, எதிர்வினைகளை வெளிப்படுத்த முழு சுதந்திரம் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கி அவளை கவுரவிப்பு செய்தது.*
*8 : ومن الحقوق الإجتماعية المشروعة للمرأة حقها في المهر*
*திருமணத்தின் போது மஹ்ர் கேட்கும் விஷயத்தில் அவளுக்கு உரிமை உண்டு.*
*எனக்கு இவ்வளவு மஹ்ர் வேண்டும் என்று கேட்கும் அதிகாரம் பெண்ணுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.*
*அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.*
*واتوا النساء صدقاتهن نحلة*
*9 :ومن الحقوق المشروعة للمرأة حقها في الميراث*
*சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு. அவளுடைய பங்கை நீதமாக வழங்க இஸ்லாம் கட்டளை பிறப்பித்தது. அது சம்பந்தமாக குர்ஆன் அழகிய முறையில் எடுத்து கூறி அவளுடைய உரிமையை நிலை நாட்டுகிறது.*
*10 :ومن الحقوق المشروعة للمرأة حقها في التعليم*
*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*طلب العلم فريضة علي كل مسلم ومسلمة*
*அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக்கூறி பெண்களை" பிரசவ மெஷின்" நிலையிலேயே வைத்திருந்த பிற மதங்களுக்கு சவால் விட்டு கல்வி ஆண்களுக்கு மட்டுமே உரிய பரம்பரை சொத்தல்ல என கல்வியை தேடுவது ஆண், பெண் இருபாலருக்கும் கடமை என்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் கற்க வேண்டும் எனச் சாதாரணமாய் கூறிடாமல் "கடமை" எனக்கூறுகிறது இஸ்லாம்.*
*இன்னும் இதுப்போல் ஏராளமான உரிமைகளை, கண்ணியங்களை, மேன்மைகளை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்.*
ஆக்கம்.
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.
இயக்குனர்.
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.