கந்தூரி விழாக்களும் நமது கடமையும்

கந்தூரி விழாக்களும் நமது கடமையும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கந்தூரி_விழாக்களும்...
நமது_கடமையும் ..

ஒவ்வொரு சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கும் சரியான முழுமையான வழிகாட்டுதல்களை பெற்றவர்கள் நாம்.

முழுமைபடுத்தப்பட்ட மாற்றத்திற்குத் தேவையற்ற சட்ட வரைமுறைகளைப் பெற்றவர்கள் நாம்

ஆனால் இன்றைய காலத்தில் ஷரீஅத்திற்கு விரோதமான காரியங்களை செய்வதிலும்,
ஷரீஅத் தடுப்பவற்றை ஆர்வத்தோடு செயல்படுத்தவும் நம்மவர்கள் யாருக்கும் சளைத்தவர்களாகத் தெரியவில்லை.

நமது முன்னோர்களின் மாசு மருவற்ற முன்மாதிரிகள் நமக்கு முன்னே தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் பலர் அதனைக் கண் திறந்து பார்ப்பதில்லை.
பார்க்க விரும்புவதுமில்லை.

இதனைக் காரணம் காட்டி மார்க்க அறிவில்லாத ஒரு சிலரின் தவறான போக்குகளைச் சுட்டிக் காட்டி நவீன கொள்கை வாதிகள் ஒட்டுமொத்த சமுதாயத்தை சாடவும், ஷரீஅத் ஏற்றுக் கொண்ட செயல்களுக்கு ஷிர்க் சாயம் பூசவும் துணிகின்றனர்.

மகான்களுடைய நினைவு விழாக்களை உரூஸ் வைபவங்களை "கப்ர் பூஜை" என்று எழுதவும் நாக்கொழுப்பேற பேசவும் செய்கின்றனர்.

மார்க்கத்தைப் பற்றி தெரியாத சிலரது செயல்களை வைத்து உரூஸ் விழாக்களை அவமரியாதை செய்கின்றனர்.

இஸ்லாத்தை நிலைநிறுத்திடப் போராடி தம் வாழ்வை இஸ்லாத்திற்காகவே பணித்துக் கொண்ட நல்லோர்கள் அவர்கள்.!
(அவ்லியாக்கள்)

இப்படிப்பட்ட மனித மாணிக்கங்களை வாழ்த்துதல்,
நினைவு கூர்தல், நினைவு விழாக்களைக் கொண்டாடுதல் மூலமாக அவர்களது அருளைப் பெறுகின்ற வாய்ப்பினை நாம் பெற முடியும்.

"கப்ர் ஸியாரத்தை நான் விலக்கி இருந்தேன். இப்போது நீங்கள் ஸியாரத் செய்யுங்கள்.
(முஸ்லிம்)
என்ற நபிமொழி ஸியாரத்துச் செய்வதை நமக்கு ஆகுமாக்கித் தருகிறது.
பாவங்களை விட்டு மனிதனை தடுக்கவும், இபாதத் செய்வதற்குத் தூண்டவும்,
மரணத்தை பற்றிய சிந்தனைகள் வழிவகை செய்கிறது.
எனவே தான்
"வாழ்க்கை சுகங்களை துண்டித்தெரியும் மரணத்தைக் குறித்து நீங்கள் அதிகமாக நினைவு கூறுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.

"ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும்.
எனினும் உங்கள் செயல்களுக்குரிய கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமை நாளில் தான்.

ஆகவே அந்நாளில் எவர் நகர நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவனத்தில் புகுத்தப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்து விட்டார்.

இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய அற்ப இன்பத்தைத் தவிர வேறில்லை.
(அல்குர்ஆன் 3 : 185.)

நாம் செய்கின்ற சின்னச்சின்ன தவறுகளும், சாதாரணமான காரியங்களும் பெரும் பாவங்களில் இழுத்து விடக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
எனவே தான் சிறு பாவங்களிலிருந்து நீங்கி நடக்க வேண்டுமென கூறுகிறது இஸ்லாம்.

எனவே உரூஸ் விழாக்கள் கொண்டாடுவது பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் இபாதத்துகளின் வகையினைச் சார்ந்தது என்றாலும், இபாதத் என்று கூறி கந்தூரி விழாக்களின் பெயரில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது வடிகட்டிய வழிகேடு என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை.

முறைப்படி ஷரீஅத் கற்றுத் தருகின்ற வழிப்படி விழாக்களை அமைத்து கொள்தல் வேண்டும்.

பல்வேறு பாகங்களில் இறைநேசப் பெருமக்கள் தம் மண்ணறைகள் உள்ளன.
அவர்கள் பேரில் நினைவு விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இவ்விழாக்களில் பல இடங்களில் ஷரீஅத் அனுமதிக்காத அனாச்சாரங்கள் நடைபெறுகின்றன.
இசைக்கச்சேரிகள், வாணவேடிக்கைகள்,
ஆடல்கள், பாடல்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

இதனைக் கண்ணுறும் நவீன வாதிகள் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் இவற்றுக்கு அங்கீகாரமும்,
ஆசியும் வழங்குகின்றனர் என்ற பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு
தம் மன அரிப்பினைத் தீர்த்திட முனைகின்றனர்.

உலமாப் பெருமக்கள் அனாச்சாரங்களை அவ்வப்போது தமது எழுத்தால், பேச்சால் விளக்கி வருகின்றனர்.
ஆனால் சில விவரமில்லாதவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாது தான்தோன்றித்தனமான செய்லகளில் ஈடுபடுகின்றனர்.

"ஈமான் கொண்டவர்களே! இஸ்லாத்தில் முற்றிலுமாக நுழைந்து விடுங்கள்.
தவிர ஷைய்த்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதி
(அல் குர்ஆன் 2 : 208)

"அளவு கடந்து வீண்விரயம் செய்யாதீர்.
நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள்.(அல்குர்ஆன் 17 : 26, 27)

"செல்வத்தை விரயம் செய்தல்,
வீணான பேச்சுக்கள், அர்த்தமற்ற கேள்விகள் ஆகிய மூன்று செயல்கள் அல்லாஹ் வெறுத்துள்ளான்.

"அனேக இடங்களில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம்,
தீபந்தம் விளையாடுதல், வானவேடிக்கை, கச்சேரி, ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள், இதுப்போன்ற பல காரியங்களுக்காக மக்கள் கூடுகின்றனர். இது மார்க்கம் அங்கீகாரம் வழங்கிய அழகிய நடைமுறைகள் அல்ல.

இவற்றை மனதில் கொண்டு கந்தூரி விழாக்களில் ஷைத்தானின் தூண்டுதலுக்கு உட்பட்டு தேவையற்ற மார்க்க விரோத செயல்களைச் செய்து இறைவனது தண்டனைக்கு நம்மை ஆட்படுத்தி விடவோ, வளரும் தலைமுறையினர் மார்க்க சிந்தனை அற்றவர்களாக வளர வழி ஏற்படுத்தி, மறுமையில் பாவ மூட்டைகளைச் சுமக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளவோ,
நமது கொள்கை விரோதிகள் நம்மைக் குறித்து தவறான பிரச்சாரங்களை பரப்பிட இடங்கொடுக்கவோ கூடாது.

தர்காக்களில் ஸியாரத், அன்னதானங்கள், மார்க்க பேருரைகள் நடத்துவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்வோர் அறிவில்லாதவர்கள்.

அல்லாஹ் மகான்களுக்கு வழங்கியுள்ள சக்திகளைக் கொண்டல்லாமல் அவர்கள் சுயமாக மற்றவர்களுக்கு
அருள் பாலிப்பதில்லை என்பதுவே நமது அக்கீதா கொள்கை.
இந்த அடிப்படையில் நாம் அவ்லியாக்களிடம் அவர்கள் உயிரோடிருக்கும் போதும் சரி,
மறைந்த பின்னும் சரி வேண்டுதல் புரிகின்றோம்.

சில இடங்களில் நம்மினத்து தாய்மார்கள் ஸ்டையிலாக உடுத்து, பூச்சூடி, ஸ்ப்ரே அடித்து ஒய்யாரமாக அசைந்தாடி தர்காக்களுக்கு செல்கின்றனர்.
இது பெரும் தவறு.
நாகரீக மோகம், அறிவில்லாய்மை, பெற்றோர்களின் கவனக்குறைவு, கணவர்களது அலட்சியப்போக்கு இவைதான் பெண்ணினத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு வழிவகுத்து கொடுக்கிறது.

"நபிமார்கள், அவ்லியாக்கள், ஷுஹதாக்களுடைய கப்றுகளை ஸியாரத் செய்தல் பெண்களுக்கு சுன்னத்"
(துஹ்பத்துல் முஹ்தாஜ்)

எனவே தாய்மார்கள் பூரணமான ஒழுக்கத்தை பேணி தர்காக்களுக்கு சென்றிட வேண்டும்.
ஷரீஅத் கூறுகின்ற வழிப்படி ஸியாரத்தை முடித்துக்கொண்டு திரும்புதலும் வேண்டும்.

ஆங்காங்குள்ள தர்கா நிர்வாகிகள் அதற்கான வழிவகைகளை செய்தலும் வேண்டும்.

வாட்ஸ்அப்பில் வந்த அழகிய கட்டுரை...