தாஹிர் தங்களின் முஹிம்மாத்....
தாஹிர் தங்களின் முஹிம்மாத்
அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கை கோட்பாடுகளை பாதுகாப்பதற்க்காகவும், மகத்தான தீன்கல்வியை சர்வ துறைகளில் பரப்புவதற்க்காகவும், தர்மத்தின் பாதையில் எதிர்கால இளம்தலை முறையை உருவாக்கி எடுப்பதற்க்காகவும் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்கள்
1992-ல் உருவாக்கிய இருவழிக்கல்வி மையம்தான் முஹிம்மாத்.
ஷரீஅத் - ஹிஃப்ளுல் குர்ஆன்- தஃவா கல்லூரிகளிலும் அனாதை மற்றும் ஏழை அகதி பாதுகாப்பு மையங்களிலும்
1500- மாணவர்கள்
நம் நிறுவனத்தில் இலவச கல்வி,
உணவு, உடை,
மருத்துவ வசதிகளுடன் தங்கி பயின்று வருகிறார்கள்.
இது தவிர மலையாளம்-ஆங்கிலம், கன்னட மீடியம் உயர் நிலை பள்ளி கூடங்கள், நர்சரி பள்ளிகூடம்,
அப்ளலுல் உலமா கல்லூரி போன்ற நிறுவனங்களில்
தினந்தோறும் கல்வி கற்க வருகிற மாணவ
மாணவிகளையும் சேர்த்தால் 3500- க்கும் மேற் பட்டவர்கள் முஹிம்மாத்தின் பரந்து விரிந்து இருக்கும் முற்றத்தில் கல்வியை நுகருகிறார்கள்...
முன்னூறுக்கும் மேற்பட்ட அனாதைகளான குழந்தைகளுக்கு ஓர்ஃபன் ஹோம் கேர் திட்டத்தின்மூலம் ஒவ்வொரு மாதம் உதவிகள்,
பெருநாள் தினத்திற்கு தேவையான பொருளாதார வசதியையும்
நம் நிறுவனம்
செய்து வருகிறது..
ஒவ்வொரு மாதம் 4 லட்சம் ரூபாய் வரை செலவு வருகிற நம் நிறுவனத்தின் முக்கிய வருமானம்
தாஹிர் தங்கள் மீது உளப்பூர்வமாக
அன்பு வைத்துள்ள நல்லுள்ளங்களின் உதவிகளும், ஒத்துழைப்பும், பிரார்த்தனையுமாகும்.
சந்தோஷ்-துக்க வேளைகளில் எல்லாம் தங்களுக்கு கிடைத்த பொருளாதாரத்திலிருந்து ஒரு பங்கு பணமாகவும்,
உணவு மற்றும் ஆடைகளாகவும்
கட்டிட வேலைகளுக்கு தேவையான
சாதனங்களாகவும் முஹிம்மாத்திற்கு வழங்கி வருகிற அன்பு உள்ளங்கள் ஏராளம் உள்ளனர்.
இன்று நாம் பார்க்கும் முஹிம்மாத்தின் உயர்வுக்கும், வசதிக்கும் சாதரண
மனிதர்களிடமிருந்து கிடைத்த உதவியும் ஒத்துழைப்பும்தான் முக்கிய அம்சம் என்று சொல்லுவதில் நாங்கள் பெருமை கொள்திறோம் எல்லாவற்றையும் அல்லாஹ் கபூல் செய்வானாக என்று துஆவும் செய்கிறோம்.
முஹிம்மாத்தின் முன்னேற்ற செயல்பாடுகளுக்கும் "கல்வி, உணவு, உடை, மருத்துவ வசதிகளுக்காக இன்னும் உங்களின் உதவியும் சேவையும் தேவைப்படுகிறது. அதற்க்காக ஒத்துழைப்பும் ஆதரவும், தருமாறு அன்பாய், பன்பாய் வேண்டுகிறோம்.
பரிசுத்த நாட்களில் முஹிம்மாத்தின் முக்கிய செயல்வீரர்கள் உங்களிடத்தில் வருவார்கள்.
நன்மைகள் பண்மடங்காக கிடைக்கும் மாதத்தில் நிறுவனத்திலுள்ள பிஞ்சு குழந்தைகளையும் நினைவில் கண்டு உதவிகளும் சேவைகளும் செய்யுமாறு அன்பாய் வேண்டுகிறோம்..
எதிர்பார்ப்புடன்.
காந்தபுரம் A.P அபூபக்கர் முஸ்லியார் -
(தலைவர்.. முஹிம்மாத்)
P.S. அப்துல்லா குஞ்ஞு ஃபைஸி
(பொதுசெயலாளர், முஹிம்மாத்)....